கருணைக் கிழங்கு மசியல்

தேதி: November 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கருணைக் கிழங்கு-- 1/4 கிலோ
எலுமிச்சம்பழம்-- 2
இஞ்சி-- 1 சிறிய துண்டு
பச்சைமிளகாய்-- 3
கடுகு-- 1 தேக்கரண்டி
பெருங்காயப்பொடி-- சிறிதளவு
எண்ணை-- 4 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
உப்பு-- தேவையான அளவு


 

கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு அலம்பி குக்கரில் மூன்று சத்தம் வரும்வரை வேகவிடவும்.

வெளியில் எடுத்து ஆறவிட்டு ஒரு மத்தினால் சிறிதும் கட்டிகளின்றி நன்கு மசிக்கவும்.

ஒரு வாணலியை சூடாக்கி, அதில் எண்ணை விட்டு காய்ந்ததும் பெருங்காயப் பொடி போட்டு பொரிந்ததும், கடுகு போடவும்.

அது வெடித்ததும் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

மசித்த கருணைக் கிழங்கை சிறிதளவு நீர் சேர்த்து வாணலியில் விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

அது நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
அதில் எலுமிச்சை சாறு பிழிந்து, மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளைச் சேர்த்து பரிமாறவும்.

நல்ல காரமும், புளிப்புமாக சிறிதும் காரல் இல்லாமல், சாம்பார் சாதத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும் இந்த மசியல்.


கருணைக்கிழங்கு நறுக்கினால் சிலருக்கு கை அரிக்கும்..அதற்கு புளித் தண்ணீரில் கைகளை அலம்பினால் அரிப்பு போய்விடும். இதில் எலுமிச்சை சாறு சேர்ந்திருப்பதால் நாக்கில் காராது.

மேலும் சில குறிப்புகள்


Comments

நானும் இப்டி தா செய்வேன் ஆனா மிளகாய்கு பதில் மிளகாய் துளும் சில சமயம் எலுமிச்சைக்கு பதில் புளிதண்ணியும் சேர்ப்பேன் அருமையா இருக்கும் சாப்பிட எளிய குறிப்பு வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நன்றி ரேணு...புளி சேர்த்து செய்தால் வாசனை போக கொதிக்க விட வேண்டும்...கலரும் கம்மிதான்...ஆனால் இந்த முறையில் செய்வதும் எளிது...ருசியும் கலரும் நன்றாக இருக்கும்...செய்து பார்...