மன்றத்தில் உள்ள மற்ற தோழிகள் எப்படி நேரத்தை manage பன்றிங்க?
வீட்டு வேலை+ அலுவலகவேலை+ குழந்தைகள்+etc.
முக்கியமாக மொத்ததில் எப்படி வீட்டை நிர்வாகம் செய்கீர்கள்??????
அட, எப்படிங்க சண்டை சச்சரவு இல்லம குடும்பத்தை நிர்வாகம் செய்கீர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!????????????????????????????
pls help பண்ணுங்க senior தோழிகளே!
குடும்பம்+வேலை+குழந்தை
ஹேமாவதி, நல்ல கேள்விதான் கேட்டிருக்கீங்க :) இதுக்கு பதில் சொல்றதே கஷ்டம் தான். இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச பதிலை சொல்றேன். சீனியர் தோழிகள்னு வேற சொல்லிட்டீங்க. நான் அந்தளவு சீனியர் இல்ல ;) என்னைவிட சீனியர்ஸ் இங்கே இருக்காங்க. இந்த இழையை பார்த்தா கண்டிப்பா பதில் போடுவாங்க..நேரமிருந்தா.
வீட்டுவேலை : இந்த தலைப்பை எடுத்துகிட்டா அது எல்லார்க்கும் ஒரே மாதிரி இருக்காது. ஏன்னு கேட்டீங்கன்னா, ஒவ்வொருத்தர் வீட்டு மனுஷாள் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. ஒரு சிலர் கூட்டு குடும்பம்.. ஒருசிலர் தனிகுடித்தனம் இப்படி.... கூட்டு குடும்பத்தில பார்த்தீங்கன்னா குடும்ப அங்கத்தினர் சில வீடுகள்ல வேலைகள்ல உதவியா இருப்பாங்க.. ஆனா எல்லா குடும்பங்கள்லயும் அப்படி இருக்கறதில்லை. அந்த மாதிரி இடத்துல எல்லா வேலையும் மருமகள் தான் செய்தாகனும். தனிக்குடித்தனம்னு பார்த்தீங்கன்னா ஒவ்வொரு கணவன்மார்கள் அட்ஜஸ்ட்மெண்ட் டைப்பா இருப்பாங்க. அந்த மாதிரி வீடுகள்ல ஒருவாரத்துக்கு முந்தின சமையலைகூட அன்னைக்கு வச்சது மாதிரி சூடுபண்ணி தந்துடுவாங்க. அவரும் பாவம் வாயை திறக்காம சாப்ட்டுட்டு போய்டுவார். இதுக்கு விதிவிலக்கா இன்னொரு வகை கணவன்மாருக்கு அஞ்சு வித பொரியல்,வறுவலோடு சமையல் கேப்பார். ஒரு அயிட்டம் குறைஞ்சாலும் சாப்பிட மாட்டார். அந்த மாதிரி வீடுகள்ல வேற வழியில்லாம சமைச்சு தானே ஆகனும். மூணாவது குடும்பத்துல பார்த்தீங்கன்னா நாள் முழுக்க பாவம் பொண்டாட்டி சீரியலா பார்த்து கஷ்டப்படுறாளேன்னு வேலையை முடிச்சு வரும்போது அவளுக்கும் சேர்த்து ஹோட்டல்லயே வாங்கிட்டு வந்துடுவார் ஒரு கணவன்மார். இப்படிபட்ட வீட்ல அந்தம்மா பாவம் எந்த நேரத்தை (???) கரெக்டா manage பண்ண போகுது சொல்லுங்க... இப்படி சொன்னா சொல்லிட்டே போகலாம். அதனால இந்த டைம் மேனேஜ்மெண்ட் வீட்டுக்கு வீடு வித்தியாசப்படும். பொதுவான கருத்தை சொல்றது கஷ்டமான விஷயம் (எனக்கு).
வேலை : வேலைக்கு போய்ட்டே குடும்பத்தை கவனிக்கும் அனுபவம் எனக்கு இருக்கவில்லை. ஏன்னா, ஒரு சமயத்துல ஒரு வேலை தான் என்னால் பண்ண முடியும் ;)) உண்மையாவே வேலை,குடும்பம்,குழந்தைகள்னு மூணும் ஒரு சேர கவனிக்கிற பெண்களை நான் ரொம்ப மதிக்கிறேன். வேலைக்கு போகும் பெண்ணிற்கு குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் நல்லது. இந்த சூழலும் வீட்டிற்கு வீடு வேறுபடும். சில குடும்பங்களின் கணவர்கள் மனைவிக்கு உதவி செய்வார்கள். எல்லா குடும்பங்களிலும் இது சாத்தியப்படுவதில்லை. அந்த குடும்பங்களில் வேலைக்கு போகும் பெண்ணின் நிலை பரிதாபமானது.
குழந்தை : மேற்சொன்னவை இந்த தலைப்புக்கும் பொறுந்தும்.வீட்டில் இருப்பவர்கள் குழந்தை வளர்ப்பில் பங்கெடுத்து கொண்டாலே தாய்க்கு கொஞ்சம் சுமை குறையும். பெரும்பாலான குடும்பங்களில் வேலைக்கு போகும்பெண்கள் குழந்தைகளை தன் தாயிடம் தான் விட்டு செல்கின்றனர்.மூச்சுக்கு மூச்சு என் பையன்... என் பையன் ...என்று அரற்றும் பையனை பெற்றவர்களுக்கு, அந்த குழந்தை தன் வாரிசு,தங்கள் ரத்தம் என்பது மறந்து போவது ஏனோ? அனைத்து பையனை பெற்றவர்களுக்கும் பொருத்தமானதல்ல.
சண்டை,சச்சரவு : இது இல்லாமல் குடும்பமா? சான்சே இல்லை.. இதுவும் வீட்டுக்கு வீடு மாறுபடும். என்ன ஒன்று இது போன்ற சண்டைகளில் எக்காரணம் கொண்டும் மூன்றாவது ஆட்களை அனுமதிக்க கூடாது. கணவன் மனைவி சண்டையை அவர்களுக்குள்ளே பேசி தீர்த்துக் கொண்டால், பிரச்சனை அன்றே,அதே நிமிடமே தீர்ந்து விடும். முட்டாள்தனமாக,மூன்றாவது ஆளிடம் கொண்டு சென்றால் மூன்று ஆண்டில்லை முப்பது ஆண்டானாலும் புகைந்து கொண்டே தான் இருக்கும். ஆக உசாரா இருக்க வேண்டியது நாம தான்.
தோழி ஹேமா, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்லியிருக்கேன். என் விரல் என்கிட்ட கெஞ்சுறதால இதோட முடிக்கிறேன் :) எந்த விஷயத்திற்கும் மனமிருந்தால் மார்க்கமுண்டு.. இதுதான் மேட்டரு :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
நன்றி கல்பனா சரவணக்குமார் :)
நன்றி கல்பனா சரவணக்குமார் :)உடனே இழை போட்டதிற்கு. without others co-operation its not possible in any type of family.ஆனா வேறு வழியே இல்லை. அந்த மாதிரி தருணங்களில் திறம்பட எப்படி survive & சமாளிப்பது??
kalpana
கலக்குறீங்க போங்க கல்பனா , சூப்பர்
கல்பனா & ஹேமாவதி
எனக்கு டைம் கிடைக்காததால் இந்த பக்கம் வருவதில்லை. படித்து விட்டு மட்டும் செ.ன்று விடுவதுண்டு. அதோடு இப்போ எனக்கு 9-வது மாதம். நீங்கள் இந்த தலைப்பில் குழந்தை பற்றிய விஷயங்களை சொ.ன்னது எ.ன் விஷயத்தில் 100-க்கு 100 உண்மை. என் அம்மா ஊரில் இல்லாத நாட்களில் எல்லாம் குழ்ந்தையை ஆபிசில் வைத்து கொண்டு வேலையும் பார்த்து கொண்டு ஓட்டலில் சாப்பிட்டு இருப்பதை நினைத்தால் அழுகை தான் வரும். அதன் தாங்க முடியாமல் தான் இந்த பதிவு. ராதா சுவாமினாதன்
ராதா
ராதா, குழந்தைகளை அம்மா வீட்ல விட்டுட்டு வேலைக்கு போற நிறைய பெண்கள் என் தெரிஞ்சவங்களா போய்ட்டாங்க. தவிர தெரியாதவங்க பலபேரோட நிலைமையும் இதுதான். நீங்க ஆயிரம் தான் சொல்லுங்க அம்மாங்களோட வழி வரவே வராது பா. எதையுமே எதிர்பார்க்காம பொண்ணோட கஷ்டங்களை தானும் பங்கு போட்டுப்பாங்க. இதுல கொடுமையான விஷயம் என்னன்னு கேட்டீங்கனா, மாமியாரும் ஒரு பெண் தானே, அவர் ஏன் அதை புரிந்து கொள்ளாமல் போனார் என்பது தான். என்னமோ போங்க அவங்களாம் நல்லார்க்கட்டும். உங்களை இங்கே வந்து புலம்ப விட்டுட்டேனே, அதை நினைச்சா தான் வருத்தமா போச்சு பா. //அதோடு இப்போ எனக்கு 9-வது மாதம்// இப்ப உங்கநிலையை நினைச்சா ரொம்ப கஷ்டமா தான் இருக்கு ராதா.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
pongal
dear kalpana,
can u help me to make pongal?
is there any link where i can see the steps to make pongal?
i am really hungry now and want pongal.
pls help. Also tell me how to type in tamil here?
regards
ganesh
shanghai ganesh
கீழே அறுசுவை கீழ் உள்ள தமிழ் எழுத்துதவி கிளிக் பண்ணி பாருங்க பா புரியும்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
ganesh
http://www.arusuvai.com/tamil/node/12901
http://www.arusuvai.com/tamil/node/18411
http://www.arusuvai.com/tamil/node/14175
http://www.arusuvai.com/tamil/node/4015
http://www.arusuvai.com/tamil/node/10711
http://www.arusuvai.com/tamil/node/7116
http://www.arusuvai.com/tamil/node/12905
http://www.arusuvai.com/tamil/node/6299
http://www.arusuvai.com/tamil/node/12621
செய்து பாருங்க... நிறைய குறிப்பு இருக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கணேஷ்
சகோதரர் கணேஷ், என் சார்பில் என் தோழி வனி உங்களுக்கு வெரைட்டி வெரைட்டியா பொங்கல் குறிப்பு இழைகளை தேடி தந்துட்டாங்க. இனி செய்து சாப்பிட வேண்டியது உங்க பொறுப்பு. உலகத்தில் பொங்கலுக்கு ஆசைப்படும் ஒரு ஜீவன் நீங்கள் தான் என்று நினைக்கிறேன் ;) ஜமாய்ங்க.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
thank u sagothari
nandri sagothari vanitha