தேதி: November 10, 2011
பரிமாறும் அளவு: 2 நபர்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
போன்லெஸ் சிக்கன் - 300 கிராம்
சின்ன வெங்காயம் - கால் கிலோ
மிளகாய் வற்றல் - 6
மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு
சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி அலசி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும்.சிறிது உப்பு,மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவும்.வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காயவும் கிள்ளிய மிளகாய் வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் ரெடி செய்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.நன்கு வேக விடவும்,தண்ணீர் தேவையென்றால் சிறிது தெளித்து மூடி போட்டு வேக விடவும்.
நன்றாக சிக்கன் சுண்டி வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான சிக்கன் சிந்தாமணி ரெடி.
இது சாம்பார்,தயிர் சாதம்,மற்றும் கட்டுசோறுக்கு சூப்பராக இருக்கும்.
இது கொங்கு நாட்டு ஸ்பெஷலாகும்.
Comments
ஆசியா
சுலபமான குறிப்பு... எங்க பிடிக்கறீங்க இது போல் பேர் எல்லாம்? கேட்கவே நல்லா இருக்கு :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சிக்கன் சிந்தாமணியா!
எளிதான சுவையான குறிப்பு.கொங்கு சிறப்பு உணவு தான். எங்க வீட்டிலும் இது போல் செய்வோம். இதுக்கு சிக்கனை மிக சின்னதா கட் செய்தால் நன்றாக இருக்கும்(கீமா மாதிரி போட கூடாது. கடையில மிக சின்னதா கட் பண்ண சொன்னா கீமா மாதிரி போட்டுருவாங்க. அதனால நாமே கட் செய்யனும்). சூடா சாப்பிடும் போது சூப்பரா இருக்கும். காரம் அதிகம் போட்டு சாதத்தில் பிசைந்தும் சாப்பிடுவாங்க.எண்ணெய், சின்ன வெங்காயம், வர மிளகாய் மூணும் தான் இதன் சிறப்பு.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
வனிதா,திவ்யா
கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
podikkari..
The same recipie is called as chicken podikkari or chicken pallipayalam... A very delicious food and our favourite too... But we cut the chicken pieces very small...