11.11.11 (மறக்க முடியாத நிகழ்வுகள்)

11.11.11 இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். இது போல் தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றில் 1ம் எண் வருவது மிகவும் சிறப்பு. 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்ற அபூர்வ தினம் வரும்.
இந்த சிறப்பை அறுசுவையில் பதிவு செய்யவும் இந்த தினத்தை மறக்காமல் இருக்கவும், எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கையில் நடந்த மறக்கவே முடியாத நாளை இங்கே பதிவு செய்யலாம். நிச்சயமா, எல்லார் வாழ்விலும் அப்படி ஒரு நாள் இருக்கும்.
ஒரு வேண்டுகோள்:
அந்த நிகழ்வை மட்டும் பதிவு செய்வோம், அதை பற்றி வேறு எதுவும் இங்கே விவாதிக்க வேண்டாம் அப்பறம் சாதாரண அரட்டையா மாறிடும்

இன்னகீ என்னலா மறக்க முடியாதது என்னான என்னகு திருமணம் ஆகி 2வருடம் அகுது இதுவரகும் திட்டாத என் கணவர் என்னா இன்னகீ திட்டிட்டாரு அது தான் பா.

1.1.2010 என் நண்பர்கள் அனைவரையும் ஒன்றாக பார்த்த கடைசி நாள்
24.1.2011 என் திருமண நாள்
மறக்கவே முடியாத நிகழ்வுகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மறக்க முடியாத நாள் நான் என் குடும்பத்தை விட்டு 27 /05 /2011 . அன்று தான் நான் சிங்கப்பூர் வந்தது , நான் இந்தியாவை ரொம்ப மிஸ் பண்ரென் , தீபாவளி பொங்கல் எல்லாம் ,

என்னோட ஸ்வீட் அம்மாவை பிரிந்த நாள் (09.03.2000)எனக்கு இத விட முக்கியமான நாள் வேர எதுவும் இல்ல

இப்படிக்கு ராணிநிக்சன்

மறக்கமுடியாத நாள்....
எங்கள் திருமணநாள் 21-11-2007. கடந்த மூன்று திருமணநாள் அன்றும் நாங்கள் ஒன்றாக இல்லை.வேலை காரனமாக வெளியூர்,பையன் பிறந்ததால் அம்மாவீட்டில் இப்படி. இவ்வருடம் கண்டிப்பா ஒன்னா இருக்கனும்....:))
எங்கள் திருமணம் அன்று தூங்காமல் தொடர்ந்து எஸ்.எம்.எஸ் அனுப்பினோம். எங்கள் வீட்டில்தான் தங்கினோம்......காலையில் முகூர்த்தம் முன்பு மண்டபம்போனோம்.எங்கள் வீட்டின் கலர் பல்பு அலங்காரத்தைகாண எனக்கு பிடிக்கும் அன்று எதேச்சையாக இரவு கண்டு மகிழ்ந்தேன் என்னவருடன்.......

அடுத்து 06-10 -2008. எங்களின் குட்டி பிரவிராஜா பிறந்த அன்று மறக்கமுடியாது..... என்னை அழைத்து செல்லும்போது என்னவர் கண்களில் ஒரே கலக்கம்...இருங்க வந்திடறேன்னு ஏதோ படம்பார்க்க போவதுபோல சொல்லிவிட்டு சென்றேன்.....:)
குழந்தை பிறந்ததும் பார்த்துவிட்டு அவர்கேட்ட முதல் கேள்வி அவ எப்படி இருக்கா?எப்ப வருவான்னுதானா....நர்ஸ் ,என் அம்மா சொல்லி எங்களை இன்னும் கிண்டல் பண்னுவாங்க..... இதை கண்டிப்பா மறக்கமுடியாது.....

என்னுடைய மறக்க முடியாத நாள்.....எல்லாருக்கும் போல திருமண நாள்.....அதைவிட ஸ்பெஷல் என் மகனும் நான் பிறந்த அதே நாளில் பிறந்ததுதான்...ஆம்...எனக்கும், என் மகனுக்கும் மே மாதம் 4ம் தேதிதான் பிறந்த நாள்....இது மிக அபூர்வமானது என்பர்...

யாழி, மறக்க முடியாத நாளை வேற கேட்டுட்டே.. யார் மறக்க முடியாத நாள்னு சொல்லவே இல்லயே.. முக்கியமா அண்ணாவால மறக்க முடியாத நாள் கல்யாண நாள் தான். அன்னைக்கு தானே அவர் பர்ஸ் ரொம்பவே இளைச்சு போகும் அதனால் ;)

என்னோட மறக்க முடியாத நாள் 14/07/2008 திங்கள் அன்று பகல் 2.46 நிமிடமும் 2.47 நிமிடமும் தான். அன்னைக்கு தான் என் செல்ல நாய்க்குட்டிங்க ராகுல்,வர்ஷனா பிறந்தாங்க. ஆபரேஷன் பண்ணும்போதே ஆண் குழந்தை,பெண் குழந்தைன்னு சொல்லிட்டே வெளியே எடுத்தாங்க. அந்த தேனொழுகும் செய்தி காதுக்கு வந்தடைந்த அந்த தருணம் என்னால் என்றும் மறக்கமுடியாத கல்வெட்டு தருணங்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

11.11.11 தினம் என்னால் மறகமுடியாத நாள். என் தந்தை பிறந்தநாள்.ஆனால் என் தந்தை இப்போது உயிருடன் இல்லை.

என் வாழ்வில் மறக்க முடியாத நாள் 24-08௨009 இரவுமணி945. எனை ஈன்று புறந்தந்த தாய் எம்முடன் பேசிக்கொண்டே பிரிந்த நாள்.

idhuvum kadandhu pogum.

மறக்க தான் நினைக்கிறேன்... நினைக்க நினைக்க மறக்க முடிவதில்லை.

நான் தவமாய் தவமிருந்து ரொம்ப பிரியப்பட்டு பார்த்த வேலையை பிரிய மனமில்லாமல் அழுது கொண்டே ரிசைன் பண்ண நாள். (Aug 16th, 2006)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்