கலர் கலர் என்ன கலர்....

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு வேறெத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம் கண்டிப்பா கலர் பத்தி பேசணும் இல்லனா அழுதுடுவேன்

ஹாய் நசீம்.. வினோ ... ஏய் யாரது அங்கே இந்த டிபன் பாக்ஸ வினோ வீட்டுக்கு கொண்டு போய் குடுத்துட்டு |_^_| அங்க என்ன சாப்பாடோ அத கட்டி எடுத்துட்டு வா... ;)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நசீம் நீங்க இன்னைக்கு ப்ரீயா. தோழிகளுக்கு எதாவது வேலை இருக்கலாம். நீங்க கூப்பிட்டு இருக்கீங்கள ஓவ்வொரு ஆளா வருவாங்க.
மீனு உங்க லஞ்ச் டைம் எப்போ. பரங்கி, கத்தரி. வெண்டைக்காய் புளிக்குழம்பு + பொட்டுக்கடலை துவையல், அப்பளம் உங்க லஞ்ச் பாக்ஸ்ல கொடுத்து அனுப்பி வைச்சு இருக்கேன். சாப்பிடுங்க. தேங்கஸ் மீனு அன்னைக்கு புடவை பற்றி தகவல் சொன்னதற்கு.

கோமதி நீங்க சொன்னத படிச்சவுடனே ஒரு நிமிஷம் ஒன்னும் புரியலப்பா. ரொம்ப உங்கள குழப்பிட்டங்க. எனக்கு 7வது வாரம் ஸ்கேன் பண்ணா எல்லாம் நார்மல்னு சொன்னாங்க. ஹார்ட் பீட் நல்லா இருக்குனு சொல்லிட்டு அடுத்த நாள் பிலீட்ங் ஆச்சு. டாக்டர் கிட்ட போனா கிரிட்டிக்கல்னு சொல்லி அபார்ஷன் பண்ணிட்டாங்க. எனக்கு இந்த அளவு குழப்பலப்பா. அப்ப உங்க மனசு எப்படி இருந்துருக்கும். நீங்க வேற எந்த டாக்டர்கிட்டயாவது இப்ப காண்பிக்கிறீங்களா.?

வினோ ஆமாம்பா. ப்ரீதான். அதான் யாராவது வருவாங்களான்னு சிஸ்டம் முன்னாலயே உக்கார்ந்திருக்கேன். நீங்க சாப்ட்டாச்சா? நான் ஒரு வழியா சமைச்சிட்டேன்.

தாங்ஸ் பா தோழீஸ் நான் இங்க தா இருக்கேன் பா மாரல் பிரக்னன்சி பத்தி படிச்சிட்டிருந்தேன் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

கோமதி உண்மைலயே உங்க மனநிலை எப்டி இருந்துருக்கும்... பாவம் பா அண்ணா கூட...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வினோ சாரி தேங்க்ஸ் லாம் வேணாம் பா... உங்க மெனுவும் சூப்பர் சாப்பாடும் சூப்பர்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

yeppa kai valikuthu....nan sappida poren..nalaikku parkalam friends...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எனக்கு ஒரு சந்தேகம் பா எனக்கு பி.உறுப்பில் மாத்திரை வைக்க சொல்லி டாக்டர் சொன்னங்கபா அங்க ஏதோ இருக்குனு சொன்னாங்க ஆனா அவுங்க எகிப்தியன் டாக்டர்னால எனக்கு அவுங்க சொன்னது புரியலப்பா இப்படி யாரிக்காவது சொல்லி இருக்காங்கலா?

என்னப்பா எல்லை எங்க நான் இப்பதான் ஆபிஸ் வந்தேன் எல்லாம் சாப்டாச்சா?

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்