ஹேண்ட் புக்

தேதி: November 12, 2011

5
Average: 4.7 (11 votes)

 

பழைய வாழ்த்து அட்டை - 1
ஊசி, நூல்
வெல்வட் அல்லது பழைய பட்டு துணி
வெள்ளை பேப்பர்கள்
ஃபேப்ரிக் க்ளூ
கத்திரி
முத்துக்கள்
சாட்டின் ரிப்பன்

 

வாழ்த்து அட்டையின் இரண்டு அட்டைகளையும் படத்தில் உள்ளது போல் 3/4, 1/4 பாகமாக பிரித்து மடிக்கவும்.
மடித்ததில் ஒரு பக்கத்தில் உள்ள 1/4 பகுதியை மட்டும் வெட்டி விடவும். இப்போது பர்ஸ் போன்ற வடிவம் கிடைக்கும்.
அட்டையின் அளவுக்கு ஒரு துணியை வெட்டி எடுக்கவும்.
அதை அட்டையின் உள் பக்கம் முழுவதுமாக ஒட்டி விடவும்.
இப்போது அட்டையை விட ஒரு இன்ச் 4 பக்கமும் கூடுதலாக விட்டு ஒரு துணியை வெட்டி எடுக்கவும்.
அந்த துணியின் ஓரங்களை அட்டையின் உள் பக்கம் மடித்து அட்டையோடு இணைத்து தைக்கவும்.
4 பக்கமும் அட்டையோடு துணியை இணைத்த பின் பார்க்க படத்தில் உள்ளது போல் இருக்கும்.
அட்டையின் உள்ளே பொருந்தும் அளவில் காகிதங்களை வெட்டி ஊசி கொண்டு தைத்து நோட்டு புத்தகம் போல் தயாரிக்கவும்.
அந்த புத்தகத்தை படத்தில் காட்டி இருப்பது போல் பட்டு துணி வைத்து தைத்த அட்டையின் உள்ளே ஒட்டி விடவும்.
இப்போது மேலே மூடி போல் வரும் 1/4 பாகம் அளவு உள்ள பகுதின் நுனியில் சிறு முத்துக்களை வைத்து கையால் தைத்து விடவும்.
புக்கை மூடி, அதன் மேல் உல்லன் நூல் அல்லது சாட்டின் ரிப்பன் கொண்டு கட்டி முடிக்கவும்.
பெண்கள் கையில், பையில் வைக்க உகந்த அழகான சுலபமாக செய்யக்கூடிய ஹேண்ட் புக் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் ஐடியா வனி. அழகா இருக்கு, பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு வனிக்கா. க்ரேட் ஜாப்.

வனி ரொம்ப அழகா இருக்கு, நீங்க என்ன ஜாப் பாத்துட்டு இருந்தீங்க?

இப்படிக்கு ராணிநிக்சன்

எப்படி வனீ அக்கா!!!!! சமையலாகட்டும், கைவேலையாகட்டும், அரட்டையாகட்டும்,விவாதமாகட்டும், எல்லாவற்றிலும் கலக்கோ கலக்கிரீங்க.எப்படித்தான் உங்களுக்கு நேரம் கிடைக்கிதோ.மறுபடியும் சொல்கிரேன் நான் உங்கள் ரசிகைதான்.ஐஸ் வைக்கவில்லை உண்மையைத்தான் சொல்கிரேன்.நான் தான் அருசுவையில் வெரும் பார்வையாளராவே இருக்கேன்.உங்களைப் போல் பலரிடமிருந்துதான் நிறைய தகவல்கள் கற்றுக்கொள்கிரேன். ஓ மறந்துட்டேன் இவ்வேலைப்பாடு பிரமாதம்.வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. கிபா.

எளிமையான அழகான உபயோகமான கைவேலை வனிதா....வாழ்த்துக்கள்....

அழகோ அழகு ஈஸியா செய்யலாம்ல வாழ்த்துகள் இனிமே உங்கள பாராட்ட வார்த்தைய தேட போறேன் போங்க முடில பா என்னால எனக்கு அத கொடுத்துடுங்க அக்கா அழகா இருக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

Nandru

நல்ல ஐடியா வாழ்த்துக்கள். இவ்வளவு ரிச்சா இந்த மாதிரி ஹேண்ட் புக் யாரும் வைச்சு இருக்கமாட்டாங்க. அழகா இருக்கு வனி. நானும் ஒன்னு செய்து வைச்சுக்கப்போறேன்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

சின்ன குறிப்பு:

புது வருடம் போன்றவைக்கு வரும் சாதா டைரியில் இதே போல் வேலைகள் செய்து பெண்களுக்கு அன்பளிப்பா கொடுக்கலாம். ட்ரை பண்ணி பாருங்க.

இமா... கைவினைன்னா முதல் இமா தான் :) மிக்க நன்றி இமா.

யாழினி... மிக்க நன்றி. :)

ராணி... மிக்க நன்றி. என்ன ஜாப்... Tata Consultancy Services'ல Assistant System Engineer’அ வேலை பார்த்துட்டு இருந்தேன். :)

கிபா... நீங்க தான் இப்படி சொல்றீங்க, எங்க வீட்டில் நான் எதையும் உருப்படியா செய்யுறதில்லைன்னு சொல்றாங்க ;) ஹிஹிஹீ. மிக்க நன்றி. //மறுபடியும் சொல்கிரேன் நான் உங்கள் ரசிகைதான்// - எனக்கா எனக்கா??? அடடா... என்னால நம்ப முடியலயே... பயங்கர சந்தோஷமா இருக்கு கிபா. :)

ராதா... மிக்க நன்றி :)

ரேணு... வார்த்தை கிடைக்கலன்னா விடுங்க... ஏன் கஷ்டப்பட்டு தேடிகிட்டு ;) மிக்க நன்றி.

இதயராஜா... நன்றி.

வினோ... அவசியம் செய்துட்டு எனக்கு ஒரு போட்டோ அனுப்பிடுங்க :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு வனி.வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அசத்திட்டீங்க போங்க. எப்படிதான் இப்படி யெல்லாம் யோசிக்கிறீங்களோ? உங்க வீட்ல உள்ளவங்க கொடுத்து வச்சவங்க. கலக்குங்க. வாழ்த்துக்கள்.

வனி. அசத்லா இருக்கு. வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

எப்படி இவ்ளவும் செய்ய நேரம் கிடைக்குது...எல்லா topic ளையும் கலக்கறிங்க.. சான்சே இல்ல...நானும் கிபா மாதிரி பாத்துட்டு தான் இருக்கேன்.. ஆனா ஏதும் செய்து போஸ்ட் பண்ண முடியல... ஆனா உங்க எல்லார் கிட்ட இருந்தும் நிறைய கத்துகறேன்...நானும் உங்க ரசிகையவே ஆகிட்டேன்..வாழ்த்துகள் வனிக்கா...

SaranyaBoopathi

சுவர்ணா... மிக்க நன்றி :)

நசீம்... மிக்க நன்றி //அசத்திட்டீங்க போங்க// - எங்க போக?? எல்லாரும் இதையே சொன்னா நான் எங்குட்டு போறது ;)

மஞ்சுளா... ரொம்ப நன்றிங்க :)

சரண்யா... இதை செய்ய அதிக நேரம் எடுக்காது. அதிகபட்சம் 1 மணி நேரம்... //நானும் உங்க ரசிகையவே ஆகிட்டேன்// - அச்சச்சோ... எனக்கு குஷியா இருக்கே... ;) நானும் ஏற்கனவே இங்கே இருக்கும் பலரது ரசிகை... :) ரொம்ப ரொம்ப நன்றி சரண்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கு தெரியாத விசயமே இல்ல போலிருக்கு ரொம்ப அழகா இருக்குங்க. வேலைக்கு போய்ட்டே எப்படி இதல்லாம் செய்ய நேரம் கிடைக்குது நான் வீட்டீல் சும்மா தான் இருக்கேன் ஆனா இந்த மக்குக்கு ஒன்னுமே தெரியாது.இப்பதான் சமையல் கொஞ்சம் தெரியும்.வழ்த்துக்கள் வனி இப்படி டலன்ட் மனைவி கிடச்சதற்கு உங்க கணவர் குடுத்துவச்சிருக்கனும்.

மிக்க நன்றி. ஆனா நான் இப்போ வேலைக்கு போகலங்க... வேலையை விட்டு பல வருஷம் ஆச்சு :) இந்த மக்குக்கும் எதுவும் தெரியாது... ஏதோ அம்மா சொல்லி தரும் ஐடியாஸ் வெச்சு எதாவது ட்ரை பண்ணுவேன்... அவ்வளவு தான். //உங்க கணவர் குடுத்துவச்சிருக்கனும்// - ஹிஹிஹீ. பாவம் அவரு. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகோ...!! அழகோ...!! எப்படியெல்லாம் செய்து அசத்திறிங்க...!!!!!! நான் உங்களோட பரம ரசிகை ஆயிட்டேன்...

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

அன்புடன்,
மலர்.

அடடா... //நான் உங்களோட பரம ரசிகை ஆயிட்டேன்...// - எனக்கு வெட்கம் வெட்கமா இருக்கு ;) மிக்க நன்றி மலர். உங்க பெயர் ரொம்ப அழகா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா இருக்கு வனிக்கா....வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க....வாழ்த்துக்கள்....

மிக்க நன்றி சுமி... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா