பட்டிமன்றம் -இன்றைய பெண்களுக்கு ஏற்ற ஆடை புடவையா? சுடியா?

வணக்கம்! வந்தனம்!!

அன்பு உள்ளங்கள் அனைவரும் நலம்தானே!

ரொம்ப நாளாக சொல்லாமல் கொள்ளாமல் விடுமுறையில் போய் விட்டேன், சூழ்நிலை அப்படி:( வீட்டில் கம்ப்யூட்டர் மோடம் சதி செய்து விட்ட்து, அத்துடன் நெட் கனெக்‌ஷனும் வேலை செய்யலை, சரியாக இன்னும் நாளாகும். அத்துடன் இன்னும் பலப் பல கமிட்மெண்ட்கள்! விவரித்து சொன்னால் இங்கே அரட்டையா என்று டீச்சர் வந்துடுவாங்க, அதனால் இதோட நிறுத்திகிட்டு விஷயத்துக்கு வர்றேன்.

பட்டிமன்றத்தில் நடுவராக ஒரு முறையாகவாவது இருக்கணும் என்பது இந்த வருடத்திய ஆசைகளில் ஒன்று. வனிதாவிடம் அடிக்கடி சொல்லிட்டே இருந்தேன். இதோ இந்த முறை பதவியைத் தந்துட்டாங்க, நன்றி.

இந்த ஒரு வாரத்துக்கு மட்டும் நண்பர் ஒருவரிடம் அவருடைய லாப்டாப் இரவல் கேட்டிருக்கிறேன் அல்ல்து நான் ப்ரவுசிங் செண்டருக்கு வந்துதான் பதிவுகள் படித்து, பதில் தர முடியும். அதனால் தினமும் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளாக பதில் தருகிறேன். பொருத்தருளும்படி கேட்டுக்கறேன்.

முதல் முறை நடுவராக இருக்கிறேன் , அதோட - நகைச்சுவையான, கலகலப்பான வாதங்கள் கேட்க வேண்டும் என்று ஆசை (நம் தோழிகளின் சென்ஸ் ஆஃப் ஹியூமரில் எனக்கு எக்கசக்க நம்பிக்கை உண்டு).

இதற்காகவே தேடி எடுத்து .......................................................
நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு -

தாஜ்ஃபரூக் தந்த்து – “இன்றைய பெண்களுக்கு ஏற்ற ஆடை புடவையா?சுடியா?

இதெல்லாம் ஒரு சந்தேகமான்னு சிரிப்பு வருதா? என்ன பண்றது? எனக்கு சந்தேகம் வந்துடுச்சே! எல்லாப் பெண்களும் அனேகமாக சுடிதார்தான் போட்டுக்கறாங்கன்னா, அப்புறம் ஏன் புடவைக்கடைகளில் இத்தனை கூட்டம், புடவைகளில் இத்தனை வெரைட்டி அறிமுகம்? எடுக்கற எல்லாப் புடவைகளையும் விரும்பித்தானே எடுத்து அணிகிறார்கள்? அவங்க புடவை அணிந்து அழகாக நடை போட்டு வரும்போது இதுதான் பொருத்தமான உடை என்று தோன்றுகிறதே! வித விதமான சுடிதார் ரகங்கள் அணிந்து அழகு நடை பயிலும்போது ”அழகே கொல்லுதே” என்று பாடி ரசிக்கத் தோணுதே. எல்லா உடைகளும் பொருத்தம்னு நினைப்பதால்தானே விதவிதமாக அறிமுகம் ஆகுது!

எங்கே லகலகன்னு - ஸாரி, ஸாரி(இது புடவை சாரி இல்லைங்க), கலகலன்னு உங்க கருத்துக்களைக் கொட்டுங்க, அத்துடன் புடவை ரகங்கள், சுடிதார் விதங்கள், அணியும் விதங்கள் என்று நிறைய டிப்ஸும் இங்கே கிடைக்கும்னு நினைக்கிறேன். எது ஏற்றது, என்ன காரணம்னு சொன்னால் ..... அடுத்த முறை ஷாப்பிங் போறப்ப உங்க ஐடியாக்கள்படி, நீங்கள் சொல்றபடி கேட்டு, அவற்றையே வாங்கி அணிய ஆரம்பிக்கலாமே!

வழக்கமான பட்டிமன்ற விதிகள் இன்றும் என்றும் பொருந்தும்.

பட்டியின் விதிமுறைகள்
**********************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்

ரெடி .. ஸ்டார்ட் மியூஸிக்!!!

அன்புத் தோழிகளே,

வந்தேன், வந்தேன், சபைக்கு வந்தனம் தந்தேன்.

தலைப்பு கொடுத்தாச்சு. சுவையான, சூப்பரான வாதங்களைக் கொடுத்து, சும்மா திணறத் திணற(வடிவேலு ஸ்டைலில் படிங்க) நடுவரை திகைக்க வைங்க! வாங்க, வாங்க!!!!

அன்புடன்

சீதாலஷ்மி

நடுவரே..!

முதல்ல எனது வணக்கங்களை தெரிவிச்சுக்கேறேனுங்க....

சும்மா தூள் கிளப்புற தலைப்போட வந்திருக்கீங்க .............நீங்க நினைச்ச மாதிரியே பட்டியும் கலகலகலகல..........ன்னு போகுமுங்க அதுக்கு நாங்க உத்திரவாதமுங்கோ;)

நடுவரே.......!

கல்யாணத்துக்கும் போட்டுட்டு போகலாம்...,
கருமாதிக்கும் போட்டுட்டு போகலாம்.................

அதே அதே

சுடிதான் இன்றய பெண்களுக்கு ஏற்ற உடை அப்படின்னு என் வாதத்தை நேரம் கிடைக்கும்போது பதிவு போட்டுறேனுங்க அம்மிணி வரட்டுங்களா;-)

வாழ்த்துக்கள் சீதாம்மா;-)

Don't Worry Be Happy.

நான் அறுசுவைக்கு புதுசு. நானும் இதில் கலந்து கொள்ளலாமா ?

நானும் வந்துட்டேன். வாங்க வாங்க முதன் முறையா பட்டியின் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கின்றீர்கள். இந்த பட்டி சிறப்பாக அமைய வாழ்த்துகள். அம்மிணி இதில் என்ன சந்தேகம்.

புள்ள பொறந்தா அ கண்ணத் தொறந்தா தொட்டில் கட்ட முன்னால் வரும் சேல
பொண்ணு ஒருத்தி அட பூவா சமஞ்சா சொந்தம் எல்லாம் கொண்டு வரும் சேல
ஜிங்குசா ஜிங்குசா சேலச் சத்தம் ஜிங்குசா சேலப் பாட்டு சிங்குசா
பெண்பார்க்கப் போகும்போதும் சேலதான் சேலதான்
கல்யாணம் நிச்சயமா சேலதான் சேலதான்
சீர்வரிச என்றதுமே சேலதான் சேலதான்
சீதனத்தில் முதல்வரிச சேலதான் சேலதான்
கல்யாண மேடயில கட்டுவதும் சேலதான்
கட்டிலுக்கு வேறுதினுசில் கொட்டுவதும் சேலதான்

எங்கே போனாலும் யார் என்ன சொன்னாலும் நம் பண்பாட்டுக்குப் பேரு சொல்லும் சேல
சால்வார் கமீசு அது எல்லாம் தமாசு அட சந்தோஷத்த அள்ளித்தரும் சேல
ஜிங்குசா ஜிங்குசா கொமரிக்குந்தான் ஜிங்குசா கெழவிக்குந்தான் ஜிங்குசா
இந்திராகாந்தி கட்டியதும் சேலதான் சேலதான்
அம்மனுக்குச் சாத்துரதும் சேலதான் சேலதான்
வெள்ளக்காரி இங்கவந்தா சேலதான் சேலதான்
வெளினாட்டிலும் நம்ம பொண்ணுங்க சேலதான் சேலதான்
நாகரீகம் மாறும்போதும் மாரிடாத சேலதான்
வாழ்க்கையோட கடைசிவரைக்கும் வருவதிந்த சேலதான்

இப்ப புரிந்திருக்குமே நான் எந்த அணியென்று. இந்த பாட்டுலேயே எல்லாம் அர்த்தமும் புரிந்திருக்கும். இது மட்டும் இல்லை இன்னும் நிறைய இருக்கு. இப்போதைக்கு விடைபெறுகிறேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மடிசாரு கட்டிண்டு வந்தாலே மகராணி...

நடுவருக்கு என் வணக்கங்கள்....நல்ல தலைப்பு,சிலசமையம் நமக்குநாமே கேட்டுப்போம்....இப்போ அடுத்தவங்க இஷ்ட்டத்தையும் தெரிஞ்சுக்கப்போறோம்......:)
பட்டி நன்முறையில் செல்ல வாழ்த்துக்கள்.....

நான் புடவை அணிங்கோ.......:))
சுடி,மிடி,ஜீன்ஸ்,டாப்ஸ் இதெல்லாம் சீஸ்ன்மா.....சீஸ்ன் போனாலும் சரி,உடலின் சேப் போனாலும் சரி இந்த உடைகள் எல்லாம் அன்பிட் ஆகிடும்.....
ஆனல் நம்ம புடவை இருக்கே.......அட அடா,எப்படிங்க விட்டுட முடியும்??சார்ஜட்,நைலான்,சில்க்கில் எத்தனை வகை, காஷ்மீரி சில்க் முதல் மைசூர் சில்க் வரை.....நெசவு சேலை,பருத்தி சேலை......முதல் பட்டு செலைவரை......
இப்ப கூட முழுக்க பெண்களால் டிசைன் பண்னி நெசவு செய்யப்பட்ட பட்டு புடவை அதிசயத்தில் இடம்பிடிக்க உள்ளது தெரியுமா நடுவரே.....???
அடுத்த கட்ட வாதத்தில் இன்னும் நிறைய பாயிண்ஸ்சோட வரேன் நடுவரே.......

அப்பப்பா... காலையில் இருந்து பார்க்க நேரம் ஓயாமல், என்ன அச்சு பட்டின்னு ஒரே டென்ஷன்.. பார்த்ததும் அசந்துட்டேன்ல. அமர்க்கலமான ஆரம்பம்... அசத்தலான அறிமுகம்... அட்டகாசமான துவக்கம். நடுவரே... கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்.

நான் என்ன கட்சின்னு உங்களுக்கே தெரியுமே... ஆங் ஆங்... அதே தான்... புடவை!!!

4 மணிக்கு மேல் சற்று நேரம் கிடைக்கும்... வாதங்களோடு வருகிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இங்கே உங்க பேர்ல புது ஆள் ஒருத்தவங்க சுத்திட்டு இருந்தாங்க. நீங்கதான் அவுகளா? நீங்க வேறயா? இதை கொஞ்சம் க்ளியர் பண்ணிடுங்க.

சரிங்க நடுவரே,உங்களுக்கு என் முதற்கண் வணக்கங்களோடு வாழ்த்தையும் சொல்லிக்கறேன். நான் எதிர்ப்பார்த்தவங்க நீங்களா இருந்தா அதிகம் சந்தோஷப்படும் முதல் ஆள் நான் தான். சரியான தலைப்பை தான் தேர்ந்தெடுத்திருக்கீங்க. ஒரு கிழி கிழிச்சுபுடலாம். நான் சுடிதார் பக்கம் தான் பேச வந்திருக்கேன் அதையும் இப்பவே சொல்லிடறேன்.

வாதத்தோட வந்துட்டே இருக்கேன் நடுவரே...எங்கேயும் அசையப்புடாது.. பங்கு கொள்ளும் மற்ற தோழிகளுக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பட்டி தலைப்பூ சூப்பர் சீதாம்மா. நம்ம சாய்ஸ் புடவை. பெண்மைக்குறிய்ய நளினத்தை எடுத்துக்காட்டுவதே புடவைதான்.

covert all, lose all

balasri

அமர்க்களமாக வாதங்களை ஆரம்பிச்சு இருக்கீங்க, சூப்பர்

அன்பு ஜெயலஷ்மி,

முதல் ஆளாக வந்து பதிவிட்டு, சந்தோஷப்படுத்தியிருக்கீங்க, மிகவும் நன்றி.
”எங்கேயும் எப்போதும்” சுடிதார்தான் பொருத்தம்னு சொல்றீங்க, அப்படித்தானே. சொல்லுங்க, சொல்லுங்க, சொல்லிட்டே இருங்க, கேட்பதற்குக் காத்துகிட்டு இருக்கோம். இன்னும் பதிவுகளோட வாங்க.

அன்பு கோகிலாவெங்கட்,
வாங்க, வாங்க, புதிய உறுப்பினரான உங்களை பட்டிமன்றத்துக்கு அன்போடு வரவேற்கிறோம். வாங்க, வந்து உங்க கருத்துக்களைப் பதிவிடுங்க.
அன்பு ரேவதி,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
ஓ, நீங்க பாட்டாகவே படிச்சுட்டீங்களா, அப்ப சரி, நடுவில் மானே, தேனே இதெல்லாம் நான் போட்டுக்கறேன், சரியா.
சேலையோட பெருமையெல்லாம் பிரமாதமாக சொல்லிட்டு, அப்படியே நடுவில சல்வார் கமீச, தமாசுன்னு சொல்லி, ஒரு பன்ச் வச்சிட்டீங்க. (கோவை சரளா வாய்சில்) ”ஒரே தமாசு!”
சல்வார் அணியினர் பதில் சொல்வாங்க, காத்திருப்போம். இன்னும் வாதங்களோட வாங்க, காத்திருக்கேன்.

அன்பு ரேணுகா ராஜசேகரன்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.
உங்க வாதத்தை அப்படியே ரஜினி ஸ்டைலில், மாடுலேஷனில் படிச்சுட்டேன். ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிட்டீங்க. உடலின் ஷேப் போயிட்டால், மற்ற உடைகள் அன்ஃபிட் ஆகிடும்னு சொன்னதைத்தான் சொல்றேன். நூற்றுக்கு நூறு உண்மை. இதற்கு மற்ற அணியினரிடம் பதில் கிடைக்குமா? சந்தேகமாக இருக்கு. காத்திருப்போம்.

அன்பு வனிதா,
எப்ப வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாமல்தான் இருந்த்து. ஆனா, வர வேண்டிய டைமுக்கு கரெக்டாக வந்துட்டோம்ல, எப்பூடி?
நீங்க புடவைக் கட்சியா? வாங்க, வாங்க, உங்க கருத்துக்களைத் தெரிஞ்சுக்க ஆவலுடன் காத்திருக்கோம்.

அன்பு கல்பனா,
என்னது, என்னது, என் பெயரில் இன்னொருத்தரா? யாரது? அது யாராக இருந்தாலும் “நான் அவரில்லை”, “அவர் நானில்லை”.
நீங்க எதிர்பார்த்த்து என்னைத்தானே?! அப்படின்னா அது நானேதான். சந்தோஷம்தானே. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.
உங்க வாதங்களால மற்ற அணியினரின் வாதங்களை கிழித்து, தோரணமாக்கி விடலாம்தானே. வாங்க, இதை, இதைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்திட்டு இருக்கோம். வாங்கோ, காங்கோவிலிருந்து, தாங்கோ (வேற ஒண்ணுமில்ல, ரேவதி பாட்டாவே சொன்னதும் எனக்கும் கவிதை வந்துடுச்சு)
அன்பு பாலாஸ்ரீ,
ரத்தினச் சுருக்கமாக புடவை என்றால் நளினம் என்று அழகாக சொல்லியிருக்கீங்க. அடுத்த ரவுண்டில் இன்னும் நிறைய பாயிண்ட்ஸ் சொல்லி, உங்க கட்சிக்கு பலம் சேர்த்துத் தாங்க, சரிதானே.

அன்புடன்

சீதாலஷ்மி

நடுவர் அவர்களே! நம் தமிழர் பண்பாடே இந்த புடவைதாங்க. புடவை கட்டிக்கொண்டு தலையில் பூ வைத்து நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு தெருவில் நடந்துவந்தால் மகாலட்சுமி என்று பார்ப்பவரெல்லாம் சொல்வார்கள். திருமணம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகள் என்று எல்லாம் சுப நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலோனோர் அணிவது புடவை தான் நடுவரே! புடவையும் தாவணியும் நம் பாரம்பரியம். அதை நாகரிகம் என்கின்ற பேரில் ஜீன்ஸ் டாப்ஸ் சுடி ஸ்கட்டு போட்டுகிட்டு சுத்துராங்க. பேச்சிக்கு வேண்டுமானால் சுடி தான் சிறந்தது ஜீன்ஸ் தான் சிறந்தது சொல்லலாம். ஆனால் நம் இந்திய கலாச்சரம் நாம் தமிழர் என்று அடையாளம் காட்டுவது நம் புடவை தான். ஒவ்வொரு ஆடைகளும் ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தாற் போல் போடலாம். ஆனால் புடவை மட்டும் தான் எல்லாம் இடத்திற்கு அணிந்துக் கொண்டு போக சிறந்தது. கல்யாணம் மேடையில் உட்காரும் போது யாரும் சுடியோ ஜீன்ஸே போட்டுக்கிட்டு உட்காருவது இல்லை. நம் கலாசாரமான கூரைப் புடவையோ அல்லது பட்டு புடவையோ கட்டிக் கொண்டுதான் கல்யாணப்பந்தில் உட்கார்ந்திருப்பார்கள். அந்த புடவையின் சிறப்பு முதன் முதலில் குழந்தை பிறந்தால் நம் திருமணத்திற்கு கட்டியிருக்கும் அந்த கூரைப் புடவையில் தான் குழந்தைக்கு தொட்டில் கட்டி போடுவார்கள். ஏன் நாம் சாகும் போது கூட நமக்கு போர்த்துவது சேலைதான். இப்படி சேலையை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இப்பொழுது விடை பெறுகிறேன். (எழுத்துபிழை இருந்தால் மன்னிக்கவும்.)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்