கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

நான் FB la பதில் அனுப்பிருக்கேன்...பாரு அங்க பேசலாம் வா

ஏன் இப்படி இருக்கீங்க ரேனு,ராணி,ராதா,மீனு நேற்றும் அப்படித்தான் நான் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை உங்கள் அரட்டையை தொடர்ந்து அடிச்சிட்டுத்தான் இருந்தீங்க இன்னைக்கும் அதே போல் தான் நான் கேட்டது வேர தளமா இருந்தா இந்த கேள்வி இங்க கேட்க கூடாதுனு சொல்லுங்க இப்படி உங்க 4,5 பேர்கள் மட்டும் தான் இங்க பேச முடியுமா? ஒரு வேலை நான் புதுசுனால தெரியலையானு தெரியல தவரு இருந்தா மன்னிச்சிடுங்க.அப்படி இல்லைனா யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுங்க பா

அப்டிலாம் இல்லப்பா மேலே சர்ச் பாக்ஸ்ல சமையல் டிப்ஸ்னு போட்டு பாருங்க நிறைய கிடைக்கும் ஏற்கனவே தோழிகள் பேசியிருப்பாங்க சரீங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ப்ரண்ட்ஸ் அனைவருக்கும் வணக்க்க்க்கம், நானும் வ்ந்துடேன் இந்த அரட்டைக்கு தெம்பா சாப்பிட்டு வ்ந்திருக்கேன்

அபி கோவப்படாதீங்கப்பா. எங்களுக்கு தெரிஞ்சா சொல்லுவோம். நேத்து கேட்ட கேள்விக்கு தெரிஞ்சா சொல்லுவோம்பா. உங்க கூடபேசக்கூடாதுன்னு இல்ல. எல்லர்கூடயும் பேசுவோம்பா. சமையலே இந்த லிங்க் பார்த்து கத்துகிட்டோம். நீங்க டிப்ஸ்னு சொன்னதால எல்லாம் சும்ம இருக்காங்க. கோவிச்சுக்காதீங்க சரிங்களா.

அபி உங்க கேள்வி கிளியரா இருக்கலாம்... நான் ஃபிரிட்ஜ் பத்தி கேட்டேன் பதில் சொன்னாங்க குறிப்புன்னு நீங்க கேட்டா யார் என்ன சொல்ல முடியும்? உங்க தேவைய குறிப்பிட்டு கேக்குறது தப்பு இல்லையே... இங்க யாரு வேணா கேள்வி கேக்கலாம் ஆனா கேள்வி தெளிவா இருக்குறது அவசியம்.. தெரிஞ்சவுங்க கண்டிப்பா பதில் போடுவாங்க... அபி

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நன்றி ரேனு
நான் தவறா பேசியிருந்தா என்னை மன்னிச்சிடு பா

அபி மன்னிப்பெல்லாம் வேணாம்பா ஆனா இவ்வளவு டென்ஷன் எதுக்கு மன்றத்துக்கு போய் பாருங்க அங்க சின்ன சின்ன சந்தேகங்கள்ன்னு இருக்கும் அங்க எல்லா பதிலும் இருக்கு குறிப்பிட்ட தேவை இருந்தா இங்க சொல்லுங்க தெரிஞ்சா சொல்வாங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல பா.நீங்க பேசுறத நா தப்புனு சொல்ல வரல ஆனா இதில யாராவது கேள்வி கேட்டாங்கனா அதுக்கு பதில் சொல்லிட்டு அரட்டை அடிக்கலாமே அப்படி பதில் தெரியலனா அதுக்கு பதில் தெரியல அல்லது ஆருதலா எதாவது பேசுனா கொஞ்சம் தனிமையில் கவலை போகும் அல்லவா சரிதானே நீங்கள் உங்களுக்குள் பேசும் போதும் மற்றவர்களுக்கு யுசார(usesa) பேசினால் சந்தோசம்

நன்றிலாம் வேணாம் பா சரீங்களா எங்க அரட்டைல எல்லாம் இருக்கு மத்தவங்களுக்கு யூசாகுற போலவும் இருக்கு பா கண்டிப்பா தேடி பாருங்க கிடைக்கும் இல்லனா சின்ன சின்ன சந்தேகங்கள் பகுதியில நீங்க இந்த கேள்விய கேட்ட மத்தவங்களுக்கு உதவும் எல்லாரும் பதில் சொல்வாங்க இது அரட்டை சரீங்களா இதிலும் பதில் கிடைக்கும் ஆனா கேள்விய பொறுத்துதா பதில் கிடைக்கும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்