மினி பர்ஸ்

தேதி: November 15, 2011

4
Average: 3.3 (10 votes)

 

போம் ஷீட்
ரிப்பன் லேஸ்
கிலிட்டர்ஸ்
ஊசி - பெரியது, சிறியது
நூல்
பட்டன்
ஸ்கேல்
பென்சில்

 

லேவண்டர் மற்றும் பிங்க் நிறத்தில் போம் ஷீட்டை எடுத்துக் கொள்ளவும். மற்றவற்றை தயாராக வைக்கவும்.
லேவண்டர் நிறத்தில் உள்ள ஷீட்டை 9 செ.மீ அளவில் சதுரத்துண்டாக நறுக்கவும்.
பிங்க் நிறத்தில் உள்ள ஷீட்டின் மீது நறுக்கி வைத்துள்ள லேவண்டர் ஷீட்டை வைத்து, அந்த அளவைவிட 6 செ.மீ கூடுதலாக பிங்க்நிற ஷீட்டை அளந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஊசியில் ரிப்பன் லேஸை கோர்த்து,படத்தில் கை வைத்திருக்கும் அமைப்பிலிருந்து ரன்னிங் தையல் போன்று பெரிய தையலாக போடவும். ரிப்பன் லேஸை அடிவழியாக மேல் நோக்கி இழுத்து 3 செ.மீ தள்ளி ஊசியை குத்தவும்.
அடுத்து ஒரு செ.மீ இடைவெளியில் மேல் சொன்ன முறையில் படத்தில் உள்ளதுப்போல் தைத்து வைக்கவும்.
தையல் போட்டு முடித்ததும் லேஸை நறுக்கி விட்டு முடிச்சுப்போடவும்.
பர்ஸின் முன்பகுதியை படத்தில் உள்ள வளைவுபோல் பென்சிலால் முதலில் வரைந்துக் கொள்ளவும். பர்ஸின் கீழுள்ள இரண்டு முனைகளையும் மட்டும் சிறிது வளைவாக நறுக்கி விடவும்.
பிங்க்நிற ஷீட்டில் வரைந்த வளைவுவை கத்தரிக்கோலால் நறுக்கி விட்டு, பர்ஸின் வாய்பகுதிக்கும் சற்று கீழே ஒரு பட்டனை வைத்து ஊசி நூல் கொண்டு தைக்கவும்.
பர்ஸ் மூடும் பகுதியில் உள்ள ஷீட்டில் பட்டன் நுழைவதற்காக கத்தரிக்கோலால் லேசாக நறுக்கி விட்டு பட்டனை மாட்டி வைக்கவும். பர்ஸ் மேல் ஓரங்களில் கிலிட்டர்ஸால் அவுட்லைன் கொடுக்கவும்.
மிக எளிமையாகவும், சுலபமாகவும் செய்யக்கூடிய மினி பர்ஸ் ரெடி. இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் செய்து மொபைல் பெளச்சாகவும் பயன்படுத்தலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் ஐடியா... அழகான கலர் காம்பினேஷன் வழக்கம் போல். சம கியூட்... குட்டீஸ்க்கு ரொம்ப பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா! அழகா இருக்கு. ;)

‍- இமா க்றிஸ்

மினி பர்ஸ் ரொம்ப அழகா இருக்கு டீம்...வாழ்த்துக்கள்....

அழகா க்யூட்டா இருக்கு பா குட்டீஸ்கு அழகா கலர் கலரா செஞ்சி குடுக்கலாம் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

foam sheet enral wht?pls enaku theriyathu.kadaila epdy kaekra?sri lankala iruka?

I love my mahir

foam sheet என்று கூகுள்ள சர்ச் பண்ணி பாருங்க. போம் ஷீட் கிடைக்கலனா பெல்ட் துணில செய்து பார்க்கலாம் நல்லா வரும்.