ஜவ்வரிசி கஞ்சி

6 மாத குழந்தைக்கு
<!--break-->
ஜவ்வரிசி கஞ்சி எப்படி செய்வது?

ஜவ்வரிசியை வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து கொதிக்கும் நீரில் கலந்து கஞ்சி செய்து கடைசியாக தேவைக்கு பால், சர்க்கரை சேர்க்கலாம்.

அல்லது

ஜவ்வரிசியை இரவே ஊற வைத்து காலையில் அதை அரைத்து நீரோடு கலந்து கஞ்சி காய்ச்சி பால் சர்க்கரை சேர்க்கலாம்.

பால் சேர்க்காமலும் செய்யலாம். சர்க்கரைக்கு பதிலாக காரம் விரும்பினால் சிறிது உப்பும், மிளகு தூளும் சேர்க்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிதா...
மொததமாக பொடி செய்து வைத்துக்கொண்டு உபயோகிக்கலாமா?

ஜவ்வரிசி
கு ஆங்கிலத்தில் என்ன சொல்லுவார்கள் ?

ஜவ்வரிசியை sagoனு சொல்லுவாங்க

KEEP SMILING ALWAYS :-)

6 மாத குழந்தைக்கு ஜவ்வரிசி கஞ்சியை விட புழுங்கலரிசி கஞ்சி கொடுப்பது நல்லது...புழுங்கலரிசியை நன்கு களைந்து ஊறவைத்து, அத்துடன் சிறிது ஓமம் சேர்த்து நைஸாக, கெட்டியாக அரைக்க வேண்டும்...அதனை தேங்குழல் படியில் ஓமப்பொடி தட்டைப் போட்டு சின்ன வடாம்களாக பிழிந்து வெய்யிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்...குழந்தைக்கு கொடுக்கும்போது ஒரு வடாமை நீரில் நன்கு கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, அத்துடன் பால், சர்க்கரை சேர்த்து கொடுங்கள்...குழந்தை விரும்பி சாப்பிடுவதுடன், வளர்ச்சியும் நன்றாக இருக்கும்...2 கப் புழுங்கலரிசிக்கு 1 டீஸ்பூன் ஓமம் சேர்க்கலாம்...ஓமம் சேர்ப்பதால் வயிற்றுத் தொந்தரவுகளும் வராது...ட்ரை பண்ணீப் பாருங்கள்...

ஆறு மாத குழந்தைக்கு ஜவ்வரிசி கஞ்சி வேண்டாம்.
இது அதிக குளுமை. சளி பிடிக்கும். கொஞ்சம் ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளலாம்.

ராகி மாவுடன் சேர்த்து வேண்டுமானால் திரித்து கொள்ளுங்கள்

மற்ற படி ராதா அக்கா சொல்லியது போல் செய்து பாருங்கள்

ஏற்கனவே நிறைய ஆறுமாத குழந்தைக்கும்,குழந்தையின் முதல் உணவு என என் குறிப்பில் க்கொடுத்துள்ளேன் பாருங்கள் அதை கிளிக் செய்து பார்த்தீங்கன்னாஅ நிறைய ஐடியா கிடைக்கும் வெரைட்டியாக கொடுக்கலாம்

Jaleelakamal

நன்றி ராதா அக்கா & ஜலீலா அக்கா. குழந்தைக்கு உணவு கொடுக்க எத்தனை சந்தேகம் எனக்கு வருகிறது. அறுசுவையில் அனைவரும் எனக்கு பொருமையாக பதில் சொல்கிறீர்கள். நன்றி.

நான் இன்னும் திட உணவு ஆரம்பிக்கவில்லை. ஏனென்றால் இன்னும் நான் தெளிவாகவில்லை...

குழந்தையின் ஆறாம் மாதம் முதல் செரிலாக் போன்ற திட உணவுகளைச் சிறிது சிறிதாக கொடுக்க ஆரம்பியுங்கள்....புழுங்கலரிசிக் கஞ்சியை திடமாக கொடுக்காமல் பாலை அதிகமாகச் சேர்த்து சற்று நீர்க்கக் கொடுங்கள்...ஒன்றும் பயப்பட வேண்டாம்....புதிய உணவு குழந்தைக்கு ஒத்துக் கொள்ள 2,3 நாளாகும்...பிறகு சரியாகிவிடும்...

எனக்கு ஜவ்வரிசி 6 மாத குழந்தைக்கு கொடுக்கலாமான்னு தெரியாதுங்க, நீங்க கஞ்சி வைப்பது எப்படின்னு கேட்டீங்க, குழந்தைக்குன்னு கேட்டதால் காரம் இல்லாம செய்யும் முறை சொன்னேன். மன்னிச்சுடுங்க, தப்பா நினைக்காதீங்க. அனுபவசாலிகள் ஜலீலா, ராதா எல்லாரும்... அவங்க சொல்றபடி செய்ங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

@வனிதா, அட இதுல என்னங்க இருக்கு. ஒரு பாட்டிமா 5 மாதத்தில ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கலாம்னு சொன்னாங்க. அதனாலதான் கேட்டேன். குளிர்ச்சியான பொருள்னு எனக்கும் தெரியல. இப்ப வேற ஃபுட் கொடுத்தாப் போச்சு. எப்பவாச்சும் கொடுக்க உதவுமே.

மேலும் சில பதிவுகள்