முதல் கட்ட பரிசோதனைக்கு எவ்வளவு செலவு ஆகும்

வணக்கம் தோழிகளே வேலைக்கு செல்வதால் இணையத்தில் நேரம் செலவிட முடியவில்லை. சரண்யா நலமா? டெலிவரி ஆகியிருக்கும்ன்னு நெனைக்கிறேன். பாப்பா நல்லாயிருக்கா. என்னோட பதிவை பார்த்தீங்கன்னா பதில் போடுங்க மறந்திடாதீங்க.
திருமணமாகி 1 வருடம் 8 மாதங்கள் ஆகிறது. May மாதத்தில் மலை வேம்பு சாறு குடித்தேன். எனக்கு மலை வேம்பு சாறு குடித்தும் எந்த முன்னேற்றமும் தெரியலை. கூடிய சீக்கிரமே டாக்டர்கிட்ட போகலான்னு இருக்கோம். கரு முட்டை வள்ர்ச்சி பரிசோதனை முதல்லயே செய்து வளர்ச்சி நார்மலாக இருக்குன்னு சொல்லிட்டாங்க. கணவருக்கும் பரிசோதனை முடிவு நல்லதாகவே இருந்தது. அதனால் 5 மாதமாக காத்திருக்கிறோம். இனி சில நாட்களுக்கு பிறகு மருத்துவரிடம் செல்ல முடிவு செய்து இருக்கிறோம். கருக்குழாய் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பிறகு என்ன பரிசோதனகள் செய்ய வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று தோழிகள் தகவல் தந்து உதவுங்கள்.

ஹாய்
பூர்ணிமா,
ட்யூப் ப்ளாக்கேஜ் டெஸ்ட்க்கு ரூ.2000 வரை ஆகும் என
நினைக்கிறேன்.பரிசோதனை முடிவில் இரு குழாய்களிலும் அடைப்பு இல்லை என்று கூறிவிட்டால் ஓகே.சந்தோசப்படுங்கள்.
ஒருவேளை ஒருக்குழாயில் அடைப்பு என்று கூறினால் கவலைப்பட வேண்டாம்,அதில் கருக்குழாயில் அடைப்பு உள்ளதா என 100% சரியாக தெரியாதாம்.லேப்ராஸ்கோப் மூலம்தான் 100% உறுதியாக தெரியுமாம்.அதற்கு 25ஆயிரம் வரை செலவு ஆகும்.
அடுத்து உங்களுக்கு நீர்க்கட்டிபிரச்சினை உள்ளதா எனத் தெரியவில்லை,ஏன் கேட்கிறேனென்றால்,இதுஇன்றையபெண்களுக்கான காமன் ப்ரச்சினையாகிவிட்டது.இல்லையென்றால் சந்தோசம்..
அடுத்து தைராய்டு ப்ரச்சினை, நீர்க்கட்டி ப்ரச்சினை ,கருக்குழாய் அடைப்பு இருந்தால் அதை மருந்துகள் மூலம் குணப்படுத்த முயற்சிப்பார்கள்.
சில டாக்டர்கள் லேப்ராஸ்கோப் செய்ய பரிந்துரைப்பார்கள், இதன் மூலம் கருக்குழாய் அடைப்பு, நீர்க்கட்டி ப்ரச்சினை இவற்றிற்கு உடனடி தீர்வு காணலாம்.
இப்படி நமக்குள்ள ஒவ்வொரு ப்ரச்சினையாக சரிசெய்து குழந்தைப் பேற்றுக்கு வழி செய்வார்கள்.
எல்லா டெஸ்ட்களும் செய்து ரிசல்ட் பாசிட்டிவாக இருந்து நீங்கள் நார்மலாக இருந்தால் மாதா மாதம் பாலிக்குலர் ஸ்டடி செய்து ஓவுலேசன் டே கண்டறிந்து கருத்தரிப்பு மாத்திரை கொடுத்து இணையச் சொல்வார்கள்.இதற்கு மாதம் 3ஆயிரம் வரை செலவு ஆகும்.
இப்படி ஆறு மாதம் செய்வார்கள். அப்படியும் கருத்தரிக்கவில்லையென்றால் ஐயுஐ செய்வார்கள்.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

உங்களது பதிவுக்கு நன்றி. எனக்கு நார்மல் பீரியட் தான். 27 அல்லது 28 நாட்கள். எனக்கு ஃபாலிகுலார் ஸ்டடி ஒரு மாதம் செய்து கரு முட்டையின் அளவுகளை பரிசோதனை செய்து நார்மல் என்று சொன்னார்கள். FERTOMID 50 tablet period வந்து 5 நாளிலிருந்து 9 நாட்கள் வரை 3 மாதங்கள் சாப்பிட்டேன். 2வது மாதம் ஸ்கேன் எடுத்தார்கள். period வந்தது 38 வது நாள். அந்த 2வது நாள் scan செய்ய சொன்னார்கள். திருமணமாகி 8 மாதங்கள்தான் ஆகியிருந்தது. அதனால் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் இன்னும் எந்த நல்ல செய்தியும் கிடைக்கவில்லை. என் அம்மாவுக்கு திருமணமாகி 1 1/2 வருடம் கழித்துதான் கருவுற்றார் என்று சொன்னார். அது போல எனக்கும் ஆகலாம் என்றும் கூறினார்கள். பொறுமையுடன் கடவுளை பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறேன், மருத்துவ பரிசோதனையெல்லாம் இல்லாமலேயே நிச்சயமாக நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன்.

ஹாய் , பூர்ணிமா
கவலையே படாதீர்கள், ரெகுலர் பிரீயட் என்றால் ப்ரச்சனையே இல்லை. நீங்கள் மருத்துவரின் வழிகாட்டுதலோடு உங்கள் நம்பிக்கையை தொடருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
எனக்கு திருமணமாகி 6 வருடங்கள் முடிந்துவிட்டது, நேர்க்கட்டித் தவிர வேறு ப்ரச்சினை இல்லை, நாங்களும் ஒவ்வொரு மாதமும் எதிப்பார்த்து எதிர்ப்பார்த்து ஏமாற்றம்தான் மிஞ்சும்.அதனால்தான் சொல்கிறேன் மருத்துவரின் வழிகாட்டுதலோடு உங்கள் நம்பிக்கையை தொடருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

தோழிகளே, பூஜையறையில் தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது என்கிறார்களே, எங்கள் வீடு தெற்கு நோக்கிய வாசல், நான் தினமும் வீட்டு வாயிலில் தீபம் ஏற்றி வைப்பேன், இது சரியா? தவறா?, யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

தெற்கே பார்த்து தீபம் ஏற்றுவது நல்லது அல்ல. மற்ற மூன்று திசைகளும் விளக்கேற்ற உகந்த திசைகள். அல்லது 5 முகக் குத்துவிளக்கும் ஏற்றலாம்.

ஹாய் பூர்ணிமா அனைவரும் நலமா ஒரு மகிழ்ச்சியான செய்தி நான் இப்பொது 4 மாத கர்ப்பம்.ரொம்ப நாளா கம்பியூட்டர பாக்கவே முடியல. நீங்க டாக்டர் கிட்ட சீக்கிரமா போங்க கண்டிப்பா சீக்கிரமா ஒரு நல்ல செய்தி சொல்லுங்க all the best

வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் பவி. உங்க ஆரோக்கியத்தை நல்ல விதமா பார்த்துக்கோங்க.
எந்த டாக்டரிடம் பரிசோதனை செய்தீங்க. எனக்கு அந்த விபரங்கள் சொல்ல முடியுமா

மேலும் சில பதிவுகள்