இப்படிப்பட்ட பிரச்சனை யாருக்காவது இருக்கிறதா?

ஹாய் தோழிகளே
என்னுடைய மகளுக்கு இன்றுடன் 90 நாட்கள் முடிந்துவிட்டதுஅவள் பிறந்த சமயத்தில் பகல் முழுவதும் கால நேரமின்றி எந்த நேரமும் தூங்கிகொண்டே இருப்பாள்,இரவில் சுத்தமாக தூங்க மாட்டாள்,40 நாட்கள் சென்ற பிறகு இரவில் 11 மணிக்கு மேல் தூங்க தொடங்கினால்,நான் காலையில் எழுந்திருக்கும் வரை தூங்குவாள்.இப்பொழுதும் அப்படித்தான்,நான் காலையில் 8 மணி வரை தூங்கினால் அவளும் 8 மணி வரை தூங்குவாள்,5 மணிக்கு எந்திரித்துவிட்டால்அவளும் 5 மணிக்கு எழுந்துவிடுகிறாள்.

இப்பொழுது என்னுடைய பிரச்சனை அதுவல்ல,என்னுடைய குழந்தை 40 நாட்களுக்கு பிறகு,பகலில் ஒழுங்காகதான் தூங்கினால்,இரவிலும் 11 மணிக்குமேல் ஒழுங்காகத்தான் தூங்கினால்,அவளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறது,இப்பொழுது 1 மாதமாக காலையில் அரைமணி நேரம் தான் தூங்குகிறாள்.
திரும்ப 3 மணிநேரத்திற்கு பிறகு அரைமணி நேரம் தூங்குகிறாள்,இப்படியே பகல்முழுவதும் செய்கிறாள்,அரைமணிநேரம் தூங்கி எழுந்த பிறகு தொட்டிலில் ஆட்டினாலும்,பெட்டில் போட்டு அருகில் படுத்தாலும் தூங்கமாட்டேங்கிறாள்,தலையணையை 2 புறமும் வைத்து தூங்க வைத்தாலும் அரை மணிநேர தூக்கம் தான்.என்னால் 1 வேளையும் செய்ய முடியவில்லை

அவள் தூங்கும்போது விரல் சப்புவதில்லை,அவள் விரல் சப்பும் பழக்கத்தை நிறுத்துவதற்காக நிப்பில் இப்பொழுது 10 நாட்களாக உபயோகிக்கிறேன்,அவள் விரல் சப்பும்போது எல்லாம் விரலை எடுத்துவிட்டு நிப்பிலை வைக்கிறேன்,அதனால் ஓரளவு விரல் சப்புவதை நிறுத்தி இருக்கிறாள்,ஆனால் நீண்ட நேரம் நான் நிப்பில் வைக்காவிட்டல் விரல் சப்புகிறாள்.இப்பொழுது அவள் காலை அரைமணி நேரத்தில் தூங்கி எந்திரிக்கும் போது வாயில் நிப்பிள் வைத்தால் திரும்பவும் தூங்க தொடங்கி விடுகிறாள்

என்னுடைய சந்தேகம் என்னவென்றால்:
1. அவள் பகல் பொழுதில் அதிக நேரம் தூங்க என்ன செய்ய வேண்டும்?
2.நிப்பில் உபயோகித்து அவளை தூங்க வைத்தால்,வளர்ந்த பிறகு நிப்பில் இருந்தால்தான் தூங்குவேன் என்று அடம்பிடிப்பாளா?
3.இரவில் மட்டும் நிப்பில் இல்லாமல் நீண்ட நேரம் தூங்குகிறாள்.
4.அவள் குப்புற விழுந்துவிட்டாள்,இதனால் குப்புற படுத்துகொண்டு அடியில் போட்டு இருக்கும் துணியை சப்பிகொண்டே இருக்கிறாள் இதற்கு என்ன செய்வது?
5.நான் செய்வது சரியா?விளக்கம் தாருங்கள் தோழிகளே

இது உங்களூக்கு மட்டும் உள்ள பிரெச்சனை இல்லை... 90% புது தாய்களுக்கு உள்ள பிரெச்சனை... ;) கொஞ்சம் பொருங்க... என் மகளுக்கு காய்ச்சல். அவளை கொஞ்சம் பார்த்துட்டு பொறுமையா வந்து விளக்கமா பதிவு போடுறேன். அதுக்குள்ள நம்ம தோழிகள் வருவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மஞ்சு முதல் குழந்தையா? அதான் இவ்வளவு சந்தேகம் கவலை எல்லாம். கொஞ்சம் நாள் போனால் நீங்களும் இப்படி பட்ட கேள்விக்கு பதில் சொல்வீர்கள்....வீட்டுக்கு வீடு வாசப்படி தான்.

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சில குழந்தைகள் பகலில் தூங்கவே தூங்காது இரவில் முழுதுமாக தூங்கும், சில பகலில் தூங்கி இரவில் ராக்கோழி மாதிரி முழித்துக் கொண்டிருக்கும், சில இந்த மாதிரி கோழி தூக்கம் தூங்கும். சில நேரங்களில் குழந்தை இரவில் நன்றாக தூங்கும் பத்தாவது மாதத்தில் கூட அவர்களின் பழக்கம் மாறி நள்ளிரவில் ஒரு இரண்டு மணி நேரம் விளையாடுவார்கள். இப்படி அவர்களின் தூக்கத்தை நாம் கண்டிப்பாக இப்படி தான் இருக்கும் என்று சொல்லி விட முடியாது. சில குழந்தைகள் இதற்க்கு விதி விளக்கு சொல்லி வெச்ச மாதிரி இதனை மணிக்கு தூங்கி இத்தனை மணிக்கு எழுந்திரிப்பார்கள். சரி நம் கதைக்கு வருவோம்.

முதலில் பறந்த குழந்தைக்கு தனக்கு கை கால் இருப்பது கூட தெரியாது. சில நாட்கள் சென்றபின் தான் அவர்களுக்கு தெரியவரும். அதனுடன் விளையாடுவார்கள். அவர்களுடைய ஆராய்தல் வழிமுறை வாயில் வைத்து சப்பி பார்த்தல் தான். நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரியும். முதலில் குழந்தை கையை சப்பும் பிறகு காலை சப்பும் தவழ ஆரம்பித்ததும் கீழே இருக்கும் அனைத்தையும் எடுத்து வாயில் வைக்கும். இது இயல்பு. அதனால் அவர்கள் விரல் வைத்து சப்புவதும் இயல்பு தான். நீங்கள் நிப்புள் பழக்காமல் விரலை மட்டும் எடுத்து விட்டுக் கொண்டே இருங்கள் அது பழக்கமாகாது. குழந்தை நீங்கள் அருகில் இருந்தால் தான் தூங்குகிறது என்றால் அதற்க்கு உங்களின் அரவணைப்பு தேவை. அதற்காக நீங்கள் எப்பொழுதுமே கூடவே படுத்திருக்கணும் என்றில்லை. குழந்தை தூங்கியது நீங்கள் உடுத்திருக்கும் துப்பட்டா அல்லது எதாவது துணியை அவர்களின் அருகில் அல்லது போர்த்தி விடவும். அவர்களுக்கு போர் அடித்தால் தான் எப்பொழுதுமே விரல் சப்புவார்கள். அவர்கள் விளையாட குழந்தைகளுக்கு ஏற்ற பொம்மைகள், ராட்டல் வாங்கி போடவும். அவர்களை தூங்க வைக்க மெல்லிய இசையை கூட உபயோகிக்கலாம். சில குழந்தைகள் துணியை சப்பும் அதையும் எடுத்து விட்டுக் கொண்டே இருங்கள். பழக்கமாகாது. எப்பொழுதுமே அவர்கள் அப்படியே படுத்துக் கொண்டிருக்க போவதில்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் நகர ஆரம்பித்தால் அது மறந்து போகும். அதனால் கவலை படாமல் குழந்தையுடன் சந்தோஷமாக இருங்கள். இதெல்லாம் ஒன்றுமே இல்லை பகலிலும் இரவிலும் தூங்காமல் அல்லது இரவு ஏழு மணிக்கு மேல் தொடர்ந்து அழும் குழந்தைகள் எல்லாம் இருக்கு. அதெல்லாம் நினைத்து பார்த்து இது ஒன்றுமே இல்லை என்று சந்தோஷமாக இருங்கள். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நான் சொல்ல நினைச்சதை எல்லாம் லாவண்யா அழகா சொல்லிட்டாங்க. அதே தான்... நிப்பில் வாயில் வைக்காதீங்க. கொஞ்ச நாளைக்கு அவங்க கூட பொறுமையா இருந்து விரலை எடுத்து விடுவது, துணீயை எடுத்து விடுவதுன்னு பாருங்க, தானா சரியா போகும். 3 மாத குழந்தை தானே... 6 மாதம் ஆகி மற்ற உணவுகளை உண்ண ஆரம்பிக்கும்போது இது எல்லாமே மாறிடும். சரியா? ஒரு விஷயம் மட்டும் சரி பாருங்க... குழந்தைக்கு தாய் பால் மட்டும் தான் கொடுக்கறீங்கன்னா, அது அந்த குழந்தைக்கு போதுமான அளவு கிடைக்குதான்னு. ஏன்னா சில குழந்தைகள் வயிற்றுக்கு தேவையான பால் கிடைக்கலன்னா இப்படி கோழி தூக்கம் தூங்குவாங்க. எடை கூடுவதை சரியா கூடுதான்னு பாருங்க. ஒரு குழந்தை ஒரு நாளைக்கு 20 - 25 கிராம் எடை கூடும்னு சொல்வாங்க. அதை பாருங்க, அப்போ தேவையான உணவு கிடைக்குதான்னு தெரியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி லாவண்யா,வனிதா
டியர் லாவண்யா, ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க,நீங்க சொன்னதை முயற்சி பண்ணி பார்க்கிறேன்.
வனிதா உங்க ஆலோசனைக்கு நன்றி,
எனக்கு 1 சந்தேகம் மட்டும் உள்ளது,என்னுடைய குழந்தை பசி இருந்தாலும் தூக்கம் வந்துவிட்டாள் என்னிடம் பால் குடிக்கமாட்டாள்,சிறிது தூங்கியபிறகு தான் எழுந்து பால் குடிப்பாள்,அதேபோல் அவள் 5 நிமிடம் கூட பசிக்கும்போது பால் குடிப்பதில்லை,2 அல்லது 3 நிமிடம் தான் பால் குடிக்கிறாள்,அதற்கு பின்னர் திரும்ப 3 மணி நேரம் கழித்துதான் பால் குடிக்கிறாள்,எடை இதுவரை கூடிக்கொண்டுதான் இருக்கிறது,குறையவில்லை,இப்படி குடிப்பது சரியா?

2 நிமிடம் 3 நிமிடம்னு உங்களூக்கு தோனும்... ஆனா குழந்தை இந்த வயதில் அந்த நேரத்திலேயே தனக்கு தேவையான் அபாலை குடித்து விடும். இருந்தாலும் சரியா தூங்காத காரணத்தை டாக்டரிடம் கேட்டுபாருங்க... பால் தான் போதலன்னு சொன்னா கூடுதாலா ஃபீட் பண்ணி பாருங்க, இல்ல வேறு ஏதும் ஃபார்முலா கொடுக்க சொன்னா ட்ரை பண்ணுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்