தக்காளி வெஜ் ஆம்லெட்

தேதி: November 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 5 (விருப்பப்பட்டால்)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 ஸ்பூன்
உப்பு
எண்ணெய்


 

தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோலுரித்துக்கொள்ளவும்.
தோலுரித்த தக்காளியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் பொடி, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல்லில் தக்காளி கலவையை ஒரு கரண்டி ஊற்றி (தேய்க்க வேண்டாம்) எண்ணெய் சேர்த்து வேகவிடவும்.
சுவையான தக்காளி வெஜ் ஆம்லெட் ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

புதுசு புதுசா இருக்கே ம்ம் கலக்குங்க வாழ்த்துகள் நாகா புது குறிப்பு நிறைய குடுங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நன்றி ரேணு.. குறிப்பு நிறைய இருக்கு. நேரம் கிடைக்கும்போது இன்னும் அதிகம் தரேன்.

KEEP SMILING ALWAYS :-)

practise makes a man perfect(even in cooking)