கேப்ஸிகம் ஃப்ரைட் ரைஸ்

தேதி: November 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

அரிசி - 1 கப்
கேப்ஸிகம் - 1
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
நிலக்கடலை - 15
கறிவேப்பிலை- 1 ஆர்க்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
எண்ணெய்
உப்பு


 

ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி உதிராக வடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளிக்கவும்.
பின்னர் நிலக்கடலை, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்க்கவும்.
நிலக்கடலை நிறம் மாறியதும், குடைமிளகாய், மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வடித்த சாதம், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, துருவிய தேங்காய் சேர்த்துகலந்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்