தேதி: November 19, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பால் - அரை லிட்டர்
தயிர் - அரை கப்
புளி - ஒரு எலுமிச்சை பழ அளவு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கத்திரிக்காய் - 4
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தாளிக்க:
வடகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 8 பல்
வடகம் இல்லை என்றால்,
கடுகு - ஒரு தேகரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

பாலில் தயிரை சேர்த்து கொதிக்க விடவும்.

பால் திரிந்து தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வந்ததும் வேறு ஒரு பாத்திரத்தில் வடிகரண்டியில் துணியை போட்டு வடிகட்டவும். இதை அழுத்தமாக கட்டி தண்ணீர் இறங்கும் வரை வைக்கவும்.

பிறகு கட்டி வைத்துள்ள பனீரை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். வடிந்த நீரில் புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும். (மஞ்சள் நிறத்தில் கிடைத்துள்ள இந்த நீர் தான் குழம்பிற்கு சுவையை கொடுக்கும்.)

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து வடகம், பூண்டு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.

கத்திரிக்காய் வதங்கியதும் புளிக்கரைச்சலை சேர்க்கவும். பிறகு சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

10 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு பனீரை சேர்க்கவும். பனீர் குழம்பில் ஊறியதும் பரிமாறலாம். பனீர் குழம்பில் ஊற ஊற சுவை கூடுதலாக இருக்கும்.

Comments
வித்தியாசமான குழம்பு செய்து
வித்தியாசமான குழம்பு செய்து அசத்திட்டீங்க... படங்களும் ரொம்ப அழகா இருக்குது...
ஆனந்தி மேம்
உங்களுடைய இந்த கத்திரிக்காய் பனீர் குழம்பு வித்தியாசமாகவும்,ஈஸியாகவும் இருக்குது.வாழ்த்துக்கள்.இதே மாதிரி இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Expectation lead to Disappointment
ஆனந்தி
ரொம்ப டிஃப்ரண்ட் காம்பினேஷன்... பார்த்ததே இல்லை. ரொம்ப நல்லா இருக்கு பார்க்க. அவசியம் ட்ரை பண்றேன். :) வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கத்திரிக்காய் பனீர் குழம்பு!!!!
ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்குங்க ..... புளிகூட பனீரான்னு ஆச்சரியமா இருக்கு!!! கண்டிப்பா செஞ்சு பாக்கறேன் ..வாழ்த்துக்கள்.
Don't Worry Be Happy.
ஆனந்தி...
ஆனந்தி... பார்க்கவே ஆசையா இருக்கு போங்க... ரொம்ப வித்தியாசமா இருக்கு... முதல் முறை கேள்விப்படறேன் இந்த காம்போ... கண்டிப்பா செய்து பார்க்கறேன்... வாழ்த்துக்கள்....
வித்யா பிரவீன்குமார்... :)
கத்திரிக்காய் பனீர் குழம்பு
வித்தியாசமான combination.பார்க்க அழகாக இருக்கின்றது. செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் ஆனந்தி மேடம்.
விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்
நன்றி
கருத்து தெரிவித்த சகோதரிகளுக்கு நன்றி
பனீர் குழம்பு
பனீரில் புளீகுழம்பு
இப்ப தான் கேள்விபடுறேன்
வாழ்த்துக்கள்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆனந்தி
ஆனந்தி,
வித்தியாசமான கலவையில் குழம்பு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
ஆனந்தி
உங்களுடைய மூன்று குறிப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கு. தொடர்ந்து பல புதிய குறிப்புகள் தர வேண்டும் வாழ்த்துக்கள்.
super
Simply good, fresh, home made n different combination. thanks for a new dish.
panner kathirikai kulambu
My dear sister anandhi somasundaram,
paneer karhirikai kulambu migaum nandraga irunthathu. nan netru iravu try seithen parota, chappathikku migaum nanraga irukirathu. intha dish seithu kanbithatharku nandri.
panner kadail vangi ubayogithen.
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.