முருங்கை பருப்பு பொடி

தேதி: November 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

முருங்கை இலைகள் - 1 கப்
பொட்டுக்கடலை - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 6
பூண்டு - 10 பல்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 ஸ்பூன்
உப்பு


 

முருங்கை இலையை சுத்தம் செய்து சிறிது எண்ணெய்/நெய்விட்டு வதக்கவும்.
வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, மிளகாய் வற்றல், பூண்டு, சீரகத்தை வறுக்கவும்
சூடு ஆறியதும் மிக்ஸியில் பொடியாக்கவும்.
சூடான சாதத்துடன் நல்லெண்ணெய்/நெய் சேர்த்து பரிமாறவும்.


முருங்கை, பொட்டுக்கடலை, பூண்டு, சீரகம் அனைத்தும் பால் பெருக்கும் பொருள்கள்
பெருங்காயம் கர்ப்பகால அழுக்குகளை வெளியேற்ற உதவும்.
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகச்சிறந்த பொடி

மேலும் சில குறிப்புகள்


Comments

வாழ்த்துகள் நாகா

இதை நானும்/யாரும் சாப்பிடலாமா இல்ல பாலுட்டும் தாய்மார்கள் தா சாப்பிடணுமா பா பூண்டீன் வாடை அதிகமா வருமா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நன்றி ரேணு.. ஆண், பெண், குழந்தைகள், வயதானவ்ர்கள் அனைவரும் சாப்பிடலாம். தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. பூண்டு வறுத்துட்டா வாசனை வராது.

KEEP SMILING ALWAYS :-)