வாழைக்காய் பொடிமாஸ்

தேதி: November 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

வாழைக்காய் - 2
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
வற்றல் மிளகாய் - 4
எள் - 1 ஸ்பூன்
கொப்பரை துருவல் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஆர்க்
புளி தண்ணீர் - 1 ஸ்பூன்
மஞ்சள் - 1 ஸ்பூன்
உப்பு
எண்ணெய் - 2 ஸ்பூன்


 

வாழைக்காயை சிறிது புளிதண்ணீர், மஞ்சள், உப்பு சேர்த்து முக்கால்பதமாக வேகவைத்து தோலுரித்து நறுக்கவும்.
உளுந்து, கடலைபருப்பு, தனியா, 3 மிளகாய், எள், கொப்பரை துருவல், பெருங்காயத்தை வறுத்து பொடி செய்யவும்.
கடுகு, உளுந்து ஒரு வற்றல் மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வாழக்காயை வதக்கவும்.
இறுதியாக பொடி தூவி பிரட்டி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Sema matter pa unga kitta. nichayam seydhu parkiren