ஹாலிவுட் - க்கு போகலாம் வாங்க...!!!

ஹாலிவுட் - க்கு போகலாம் வாங்க...!!!

அழகாய் புலர்ந்திருந்தது அன்று காலை பொழுது
ஓரிரு freeways/highways எனப்படும் trafiic signal களே இல்லாத நெடுஞ்சாலைகளின் வழியே வடஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தென் பகுதியில் அமைந்துள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரத்தின் ஒரு பகுதியான ஹாலிவுட்டுக்கு அழகிய மினி வேனை விரைந்து ஓட்டிக்கொண்டிருந்தேன். குடும்பத்தினர் அனைவரும் ஒய்யாரமாய் வேனில் உள்ளே உல்லாச பயணம் போவது போல் தூங்கிய குழந்தைகளும் "எங்கே வந்து விட்டதா!" என்றபடியே ஹாலிவுட் என்று மலை பகுதியில் எழுதி இருக்கும் "HOLLYWOOD" என்ற எழுத்துக்களை பார்த்து ஆச்சரியமாய் கேட்ட அப்பாவும், அம்மாவும் உள்ளிருக்க இன்னும் இல்லை என்றபடியே நகரத்தின் கூட்ட(வாகன) நெரிசலில் புகுந்து ஒருவழியாய் சென்று நுழை வாயிலில் வேனை நிறுத்தினேன்.

ஒரு வழியாக வந்து சேர்ந்தாச்சு(அத்தனை வாகன நெரிசல்! வாகனத்தை பொருத்து பார்க்கிங் டிக்கெட் ($15 முதல்) வாங்கி உள்ளே போய் ஒரு இடம் பார்த்து வேனை நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கியாச்சு. இந்த உலகத்துல ஒரு சில நாட்டில மட்டும் இதேப்போல "ஹாலிவுட் - யுனிவர்சல் ஸ்டுடியோஸ்" இருக்கு அதுல ஜப்பானும் அடங்கும். நான் ஜப்பானில் திருமணமான புதிதில் எந்த ஒரு முன்னோட்டமும் இல்லாமல் எப்படி திரிலிங்கா போயி எல்லாத்தையும் அத்தனை ஆர்வமா பார்த்தேனோ அதே த்திரிலிங் இன்னும் சொல்ல போனா அதை விட ஆர்வமாய் இருந்தனர் எனது பெற்றோர்.

பொதுவா உள்ளே போய் எல்லாமும் பார்க்க டிக்கெட் எடுக்கணும். "சிட்டி வாக்" எனப்படும் செல்லும் வழி அதாவது யுனிவர்சல்ஸ் ஸ்டுடியோஸ் - க்கு நுழைவாயில் இருக்கும் இடம் கார் பார்க்கிங் செய்து விட்டு ஒரு மைல் அளவு நடக்கணும் அந்த நடந்து செல்லும் வழி தான் சிட்டி வாக். இங்கே பல தரப்பட்ட கடைகள், சாப்பிடும் இடங்கள் எல்லாமே இருக்கு, இந்த இடத்தை மட்டும் பார்த்து செல்லுவோரும் உண்டு. அடிக்கடி வருவோர் இந்த இடத்தை மட்டும் பார்வையிட்டு செல்வது கூட உண்டு. இப்படியாக இந்த நடை பாதையை இரு புறமும் பார்வையிட்டு படங்கள் பிடித்து கொண்டே நுழைவாயிலை அடைந்தோம். உலகம் உருண்டையாய் அதனில் எழுதப்பட்ட "UNIVERSAL STUDIOS" என்ற எழுத்துக்களுடன் சுழன்று கொண்டே இருந்தது. அனைவரும் வீடியோ, ஃபோட்டோ என எடுத்து கொண்டிருக்க நானும் எனது பெற்றோரை வைத்து எடுத்தேன்.
நுழைவாயிலில் பொதுவாகவே வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலை மோதும் அன்று வேலை நாள் எனினும் போதுமான கூட்டம் இருந்தது. ஏறக்குறைய $ 75 ஒருவரின் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று கொண்டு கைரேகை பதித்து ஒரு வழியாய் உள்ளே செல்லும் பொழுது நாம் கொண்டு செல்லும் பேக்கேஜ் அனைத்தையும் தனித்தனியாக செக் பண்ணி தேவையற்ற பொருட்களோ, அளவுக்கதிகமான வீட்டு உணவுகளோ இருக்கான்னு பார்த்து உள்ளே விடறாங்க.... ஹையா....உள்ளே வந்தாச்சு.... எங்கே போவது முதல்ல... என்ன ஷோ இருக்கு... எந்த இடத்துல இருக்கு... எத்தனை மணிக்கு இருக்கு.... இப்போ எங்கே போகலாம்!!!...

3D - ஷோஸ், மம்மி ரைட், ஸ்டுடியோ டூர், ஜுராசிக் பார்க் ரைட், வாட்டர் வேல்ட், அனிமல்ஸ் ஷோ, இன்னும் பல... பார்க்கலாம் வாங்க...

ஆஹா படிக்கவே சுவாரசியமா இருக்கு. இன்னும் சொல்லுங்க. நான் ஆர்வமா இருக்கேன். முதல்ல எங்கே போனீங்க?

நன்றி நசீம் வாங்க, வந்து தொடர்ந்து படித்து நீங்களும் சந்தோஷமாய் இருங்க...

யுனிவர்சல்ஸ் ஸ்டுடியோஸ் - ன் மேப் மற்றும் ஷோ நேரங்கள் குறித்த தெளிவாக கைட் நுழைவாயிலிலேயே அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதை வைத்து ஒரு கோடியில இருந்த அந்த இடத்துக்கு போனோம். வளைந்து நெளிந்து பெரிய லைன் நின்றது. எவ்வளவு நேரம் ஆகுமோன்னு காத்திருக்க வந்தது அந்த பெரிய நான்கு கார்களை கொண்ட ட்ராம். நிறைய பேரு சரியாக சொல்லணும் என்றால் ஒரு காரில் இருபத்தைந்து பேரு போல மொத்தம் நூறு பேரு ஏறிய பின் அது புறப்பட்டது. இது போல நான்கைந்து ட்ராம் சென்ற பின் நாங்களும் முதல் காரில் ஏறும் வாய்ப்பு வந்தது...

அங்கே காத்திருந்த இடமெல்லாம்... த்திரில்லிங் காத்திருந்தது அந்த ட்ராம் ஸ்டுடியோ டூர் பயணத்தில் நாங்க பார்வை இட போகும் சஸ்பென்ஸ் தான்... ட்ராம் நகர உள்ளுக்குள் ஒரு பயம் கலந்த ஆர்வத்தில் எங்கள் குடும்பத்தினர். கைகளில் வீடியோ கேமரா, ஃபோட்டோ கேமரா என அனைவரும் காத்திருக்க ட்ராம் நகருகிறது... அதனுள் இருந்த கைட் ஒருவர் அனைத்தையும் விளக்கி கொண்டே வந்தார். அங்கே காணும் செட் (நிஜமல்ல உண்மையில் செட் தான்!!!) அனைத்தும் அந்த ஹாலிவுட் மூவியில் வந்தது, இந்த மூவியில் வந்தது என்று சொல்லிகொண்டே வந்தார். சற்று தூரத்தில ட்ராம் நின்றது... பக்கத்தில பெரிய ஆறு போலவும் காட்டுப்பகுதி போலவும் இருந்தது. மரங்கள் காடு அனைத்தும் நிஜம், திடீரென மின்னல் வெட்டு, பலத்த இடி, மழை சும்மா..... பிச்சுகிட்டு ஊத்துவது போல பெய்தது.... ஒரு சில நிமிடத்துல பக்கத்தில இருந்த ஆறில் பலத்த வெள்ளம் போன்ற தண்ணீர் பீரிட்டு ஓடிவருகிறது.... ட்ராம் ஓட்டுனரும் அந்த கைடும் தவிர அனைவர் முகத்திலும் அதிர்ச்சி!!! சத்தம் போட்டனர் அனைத்தும் நின்றே விட்டது... சில வினாடிகளில் ஏதும் நடந்திராதது போல பழைய நிலை திரும்ப ட்ராம் புறப்பட்டது. இப்படியே திகில் நிறைந்த 45 நிமிடங்களுக்கும் மேல் பயணம் தொடர்ந்தது.

பயணம் தொடர்கிறது...!!!

Hi,I am Lavanya Gopinath.I am a new member to this website.Just, registered now..Can you also include me in your talk...But I dont know how to type in tamil

ரொம்ப நல்லாயிருக்கு இன்னும் தொடருங்க... கேட்க ஆவலாயிருக்கோம்

இப்படிக்கு ராணிநிக்சன்

கேக்குறதே அப்டியே கண்முன்னாடி வர்ற மாதிரி இருக்கு... ஃபாரின் போற யோகம் இருக்கோ இல்லையோ நீங்க சொல்றதே போகணும்னு தோணுது தொடருங்க... என்ன மாதிரி ஆசை படுறவங்களுக்கு...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நானும் வரேன் பா இன்னும் தொடர்ந்து சொல்லுங்க ஆர்வமா இருக்கேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பாப்ஸ்.சூப்பர். நீங்க சொல்றத படிக்கிறப்பவே அந்த இடம் எல்லாம் கண் முன் இருக்கிறா மாதிரி இருக்கு. ஆசைய களப்பிவிட்டீங்களே. இன்னும் சொல்லுங்க. அப்புறம் எங்க போனீங்க. கண்டினீயூ பண்ணுங்க/ இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு

எப்படி இருக்கீங்க? உங்க ரெண்டு குட்டீசும் எப்படி இருக்காங்க?
இந்த தலைப்பை பார்த்ததும் ஏதோ ஆங்கில படத்தின் விமர்சனம் போலன்னு நினைச்சேன்....
உள்ளே பார்த்தாதான் தெரியுது..... எங்களை ஹாலிவுட்டை சுத்தி பார்க்க கூட்டிட்டு போறீங்கன்னு.....
ஹைய்யா ஜாலி நானும் ஹாலிவுட் பார்க்க போறேன்...... :)
அந்த திடீர் மின்னல், மழை, வெள்ளம் சூப்பர்ங்க...... ம்ம்ம்ம்........ அப்பறம் என்ன ஆச்சு.....

hai

மேலும் சில பதிவுகள்