கொழுக்கட்டை கூழ்

தேதி: November 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

அரிசி மாவு - 1 1/4 கப்
சீனி - ஒரு கப்
பொடித்த சீனி - ஒரு மேசைக்கரண்டி
டவுன் ஃபன்டா - 7 இலைகள்
தேங்காய் - ஒன்று
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி


 

டவுன் ஃபன்டா இலைகளை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் தயார்படுத்தி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இலைகளை கசக்கி விட்டு தண்ணீரில் போட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் இறக்கி இலைகள் இல்லாமல் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் எடுத்துக் கொள்ளவும். மீண்டும் அந்த தேங்காய் சக்கையுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் வெண்ணெய், உப்பு, பொடி செய்த சீனி, கால் கப் திக்கான பால் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். அதனுடன் பிறகு தண்ணீர் பாலை சிறிது சிறிதாக ஊற்றி இடியாப்ப மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவில் ஒரு பெரிய ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் பாலை ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
மீதம் உள்ள மாவில் சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். தேவையான வடிவங்களில் செய்யவும். எல்லா உருண்டைகளும் சீரான உருண்டைகளாக இருக்க வேண்டும். அப்போது தான் ஒரே மாதிரியாக வேகும்.
வடிகட்டி வைத்திருக்கும் டவுன் ஃபன்டா தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதித்ததும் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டையை போட்டு மூடி விடவும். கொழுக்கட்டைகளை போட்ட உடனே கிளற கூடாது.
5 நிமிடம் கழித்து கொழுக்கட்டைகள் வெந்ததும் சீனியை போட்டு 5 நிமிடம் கழித்து கரைத்து வைத்திருக்கும் கொழுக்கட்டை மாவை அதில் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது திக்கான தேங்காய் பாலை ஊற்றி கிளறி இறக்கவும்.
சுவையான டவுன் ஃபன்டா கொழுக்கட்டை கூழ் ரெடி.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பல வருடங்களுக்கு பின்னாடி உங்க குறிப்பு வருத்துன்னு நினைக்கறேன், வித்தியாசமான கூழ்.... டவுன் ஃபன்டா - என்னன்னு தெரியல? இந்தியா ல கிடைக்குமா? வேற ஏதாவது உபயோகிக்கலாமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உங்கள் கூழ் புது விதமாஇருக்கு. டவுன் ஃபன்டா என்றால் ரம்பை இலை நு சொல்லுவாங்களே? அதானே. பார்க்க அப்படிதான் இருக்கு. கல்யாணகாரவீட்ல எல்லா உபயோகிப்பாங்களே?அதா? சொல்லுங்களேன். வாழ்த்துக்கள்.

டவுன்டா இலைன்னு அர்த்தம் இதைமலேசியாவில் மலாய்யில் இலைக்கு பேர் டவுன் இந்த இலைக்கு ஊரில் பாண்டான் இலைன்னு சொல்லுவாங்க ரம்பா இலை வேர
பதனிகூல் மாதிரிரி இருக்கு செய்து பாப்போம்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ada super news palkis