பட்டாணி சுண்டல்

தேதி: November 23, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பட்டாணி - 2 கப்
தேங்காய் - பொடியாக நறுக்கியது 5 தேக்கரண்டி
மாங்காய் - பொடியாக நறுக்கியது 5 தேக்கரண்டி
வெங்காயம் - பொடியாக நறுக்கியது 3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
மல்லி விதை - 3 தேக்கரண்டி
கடலைபருப்பு - 3 தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு [விரும்பினால்]
லவங்கம் - 2 [விரும்பினால்]
பச்சை மிளகாய் - ஒன்று
கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - சிறிது
உப்பு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

பட்டாணியை ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
இரண்டு மிளகாய் வற்றல், பட்டை, லவங்கம், கடலைப்பருப்பு, மல்லி விதையை வெறு கடாயில் வறுக்கவும்.
இவற்றை கையால் பொடி செய்யவும்.
தேங்காய், மாங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து காய்ந்த மிளகாய் 2 சேர்த்து சிவந்ததும் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதில் பட்டாணியை சேர்த்து சுண்டல் தயார் செய்து அடுப்பில் இருந்து எடுக்கவும்.
சூடான பட்டாணியில் பொடியாக நறுக்கிய மாங்காய், தேங்காய், வெங்காயம், பொடித்த மசாலா பொடி சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து கலந்து விடவும்.
சுவையான மாலை நேர தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுண்டல்னாலே நீங்கன்னு முடிவு பண்ணிடலாம்..மஞ்சள் பட்டாணி இருக்கா?

வாய்ப்பே இல்ல, ரோடு ஓரங்களில் போடும் பொது ஆசையா இருக்கும், அதே பினிஷிங், கலக்கல் கடலை.தக்காளி மட்டும் மிஸ் ன்னு நினைக்கறேன். சரியா வனி? தக்காளி சேத்தலாமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹைய் வனிதா
எனக்காகவே செய்து காட்டியதுப் போல் இருக்கிறது ஏன் நான் இப்படி சொல்கொறேன் என தெரிகிறதா? (நீங்க கடலையில் செய்தால் என்னால் செய்து பார்க்க முடியாதே) இந்த பட்டானி சுண்டலை கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன் இங்க குளிர் தாங்கள இப்ப தான் சூடா என்ன செய்து சாப்பிடலாம்னு நினைச்சேன் சிச்டம் முன்னாடி உட்காந்தா உங்க பட்டாணி சுண்டல் கண்லப் பட்டது நாளைக்கு செய்து சாப்பிட்டுட்டு எப்படி இருந்ததுனும் பதில் போடுறேன் நான் சுண்டலை வச்சி நீங்கனு கொச்சம் நினைச்சேன் ஆனா பாத்திரத்தைப் பாத்ததும் நீங்க தானு கன்ஃபாம் பண்ணிட்டேன். இப்ப உங்க சுண்டல் எப்படினு சொல்லல நாளைதான் எனது பதிவு நான் புறப்படுரேன் சமையல் அறைக்கு

வனி சுண்டல் வாரமா இது ம்ம்ம் அசத்துங்க சூப்பர்ர்ர்ர்:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பீச்சில் சுண்டல் சாப்பிட்டதை நினைவுக்கு வருகிறது.வாழ்த்துக்கள்

எனக்கு இந்த பவுல் பார்க்க பார்க்க ஆசையா இருக்கு;) ரொம்ப அழகா இருக்கு ...ரொம்ப நாளா கேக்கனும்னு இருந்தேன் ;) சுண்டலோட அனுப்புங்க சுண்டல் இல்லாட்டியும் பரவாயில்லை நான் செஞ்சுக்கறேன்;-)

Don't Worry Be Happy.

பீச் ஓரத்தில் ஒரு கடை போட்டுவிடலாம் போல. நல்லா சுண்டல் வியாபாரமாகும். வனி நீங்க சுண்டல் செய்து தாங்க. நாங்க கூவி கூவி நல்லா விற்பேன். படங்கள் சூப்பரோ சூப்பர். வாழ்த்துகள் வனி.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வனிக்கா இப்ப சுண்டலை கயில எடுத்திருக்கீங்களா?ம் கலக்குங்க.கலக்குங்க.. ஊர்ல வாங்கி சாப்பிட்ட ஞாபகம்வந்திருச்சு. .எனக்கு ஒரு கப்ல தந்திருங்க வாழ்த்துக்கள்.

மழைக்கு ஏற்ற ரெசிப்பியா செஞ்சு அசத்துறீங்க. பொடி போட்ட சுண்டல் இதுவரைக்கு செய்தது இல்லை. உங்க முறைப்படி செய்து பார்க்கனும். தள்ளுவண்டில செய்யற சுண்டல் வித்தியாசமா இருக்கே. அந்த செய்முறை உங்களுக்கு தெரியுமா.

வனிதா மேடம்,

ரொம்ப அழகா இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நீங்க தான் நெனச்சேன் நீங்களே தா பொடி சேர்த்து செஞ்சதில்லை செஞ்சி பாக்கறேன் வாழ்த்துகள் கையால இடிச்சி சேர்க்கறதால இன்னும் நல்லாயிருக்கும்ல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

சுகி... மிக்க நன்றி. தக்காளி சேர்த்தா எனக்கு சாலட் டச் கிடைக்குது... அதான் மிஸ்ஸிங்... ;) உங்களூக்கு பிடிச்சா அவசியம் சேருங்க.

மாயா... மிக்க நன்றி. ஆனா செய்தீங்களா என்று வந்து சொல்லவே இல்லையே... ;) வாங்க இந்த பக்கம்.

சுவர்ணா... அப்பப்ப எது கிடைக்குதோ அதுக்கு தாவிடறேன் :) மிக்க நன்றி.

ஆனந்தி... மிக்க நன்றி. நானும் அதை தான் ட்ரை பண்ணிருக்கேன், ஏன்னா எங்க வீட்டில் பீச்சில் வாங்கி சாப்பிட நாட் அலவ்ட் ;(

ஜெய்... மிக்க நன்றி. வெள்ளி கப் உங்களுக்கே தான்... படத்தோட எடுத்துக்கோங்க :D

ரேவதி... விக்க நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை... போட்டுடலாம். ;) மிக்க நன்றி.

நசீம்... மிக்க நன்றி. கண்டிப்பா சுண்டல் பார்சல் :)

வினோ... மிக்க நன்றி. நானே பீச் ஓர சுண்டலை தான் அடம்ப்டு அடிச்சிருக்கேன்... எக்ஸாக்ட்டா எப்படி இருக்கும்னு ஒரு முறை சாப்பிட்டு பார்த்தா தானே தெரியும்... ;( வீட்டில் வாங்க விட மாட்டாங்கறாங்க வினோ.

கவிதா... மிக்க நன்றி. //ரொம்ப அழகா இருக்கு// - கைவினை பகுதி பதிவு மிஸ் ஆயிடுச்சா??

ரேணு... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க. நல்ல வாசம் கொடுக்கும் பொடி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பீச் சுண்டல் கேட்டீங்களே...

http://www.arusuvai.com/tamil/node/3013

இதை பாருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சகோதரி வனி, சுண்டல் முதல் அட்டெம்ட்லியெ சூப்பரா வந்துருச்சு.....கத்தாரில் இப்ப குளிர் அதிகம்.....உங்க சுண்டல் பொருத்தமான ஸ்நாக்ஸ்......நன்றி....!!!

அன்புடன்
Nizamuddin - Doha,Qatar
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

ஹை... செய்து பார்த்தீங்களா?? ரொம்ப மகிழ்ச்சிங்க... மறக்காம பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா