சரவணபவன் வெண்பொங்கல்

ஹாய், தோழிஸ்
நான் அறுசுவைக்கு புதுசு. நான் வீட்டில் எப்படி செய்தாலும் சரவணபவன் வெண்பொங்கல் போல சாஃப்டாக வருவதில்லை, உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்.

///பொங்கல் செய்முறை.....3/4 கப் அரிசி , 1/4 கப் பயத்தம்பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் லேஸாக வறுத்துக்கோ...குக்கரில் 4 கப் தண்ணிர் வைத்து, அது கொதித்ததும் அரிசி, பருப்பு கலவையை களைந்து போட்டு மூடி 4 அல்லது 5 சத்தம் விட்டு அணைத்து விடு....ஒரு துண்டு இஞ்சியை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளு... முந்திரிப் பருப்பை துண்டாக்கு...1/2 ஸ்பூன் மிளகு, 1/4 ஸ்பூன் சீரகம் எடுத்துக்கோ....1/4 ஸ்பூன் மிளகைப் பொடி செய்துகொள்....6 டீஸ்பூன் நெய்யில் இஞ்சி வதக்கி, முந்திரி வறுத்து வடித்த பொங்கலில் கொட்டு....மேலும் 2 ஸ்பூன் நெய்யில் மிளகு, சீரகம், மிளகுப்பொடி போட்டு பொரிந்ததும் அதையும் பொங்கலில் கொட்டு...தேவையான உப்பு சேர்த்து கேஸில் வைத்து 5 நிமிடம் நன்கு கிளறி இறக்கு...., சட்னியுடன் சாப்பிட்டு எப்படி இருந்ததுனு சொல்லு... வேண்டுமானால் நெய் அதிகம் சேர்த்துக்கோ...///

இது ராதா ஆன்ட்டி சொன்ன செய்முறை.. இன்னைக்குதா சொன்னாங்க.. நானும் இதேபோலதான் செய்வேன் ரொம்ப நல்லா வரும்.. செய்துபாருங்க.. டேஸ்ட்டுக்கு நான் கேரண்டி :-) அளவு மாத்தாதீங்க... ராதாஆன்ட்டி சொன்னா சரியா இருக்கும்.

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் நாகா, எப்படி இருக்கீங்க? இப்பதான் உங்க பதிவைப் பார்த்தேன்.ரொம்ப தேங்ஸ். நீங்க சொன்னபடி நாளை செய்து பார்க்கிறேன். அப்புறம் வெண்பொங்கலுக்கு டால்டா சேர்க்கலாமா நாகா?.

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

ந்ல்லா இருக்கேன் ப்ரியா... நீங்க எப்படி இருக்கீங்க...? டால்டா வேண்டாம் நெய் மட்டும் சேருங்க... எந்த சமையலிலும் சேர்க்காதீங்க. உடலுக்கு நல்லதில்லை...

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் நாகா, நீங்க சொன்ன மாதிரி இன்னைக்கு காலைல பொங்கல் செய்தேன். ரொம்ப நல்லா வந்தது. ஹஸ்பெண்ட் கூட பாராட்டினார்.
நீர்க்கட்டிக்காக ட்ரீட்மெண்ட் எடுத்தா "ட்வின்ஸ்" பிறக்குமாமே? உங்க யாருக்காவது அனுபவமிருந்தால் சொல்லுங்க ப்ளீஸ்!

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

மேலும் சில பதிவுகள்