வெஜிடபுள் ரைஸில் உப்பு கூடிவிட்டது

அன்பு தோழிகளே, நான் இன்று செய்த வெஜிடபுள் ரைஸில் ஏகமாக உப்பு கூடிவிட்டது. அவ்வளவு சாதத்தையும் வீணாக்க மனமில்லை. அனுபவம் வாய்ந்த தோழிகளே,உங்களுக்கு தெரிந்த மாற்று வழி ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.

நலமா.. உங்க குட்டீஸ் சுகம் தானே.. :) உப்பே போடாமல் குருமா வைத்து சாதத்துடன் கலந்து விடுங்கள்.. :) எதோ எனக்குத் தெரிந்த ஐடியா!! கேவலமா இருந்தா திட்டாதீங்க... ;)

ஹாய் கல்பனா நலமா?இன்னும் கொஞ்சம் காய்கறிகளை நறுக்கி வதக்கி சேருங்கள்....பனீர் இருந்தால் அதையும் பொரித்து போடுங்கள்....ப்ரட் துண்டுகளையும் பொரித்துப் போடுங்கள்...உப்பும் குறையும்.... சுவையும் ஏறும்...என்ன சாதம் கொஞ்சம் அதிகமாகி விடும்....ஃப்ரிட்ஜில் வைத்து நாளைக்கும் உபயோகித்துக் கொள்ளுங்கள்...

சாந்தினி, நான்,குட்டீஸ் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? இது மாதிரி எதாச்சும் டவுட் கேட்டு இழை ஓபன் பண்ணாதான் நாங்களாம் வெளிய வரும்வோம்னு அடம் பிடிச்சீங்கன்னா, நாங்க இப்படி தான் சந்தேகம் கேட்டு இழையை ஓபன் பண்ணனும். எப்படின்னு கேக்கறீங்களா, சுடுதண்ணியை சூடு பண்ணும்போது சூடு அதிகமாகிவிட்டது குறைப்பது எப்படின்னு? ;) அடிக்கடி வரமுடியலனாலும் அப்ப அப்பவாச்சும் வாங்க பா ;) நீங்க எங்களை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்கன்னு கன்பார்ம் பண்ணிப்போம்.

நீங்க சொன்ன மாதிரியும் ட்ரை பண்றேன் பா. அந்த குருமாவை காலைலயே வச்சுட்டா டூ இன் ஒன் மாதிரி யூஸ் பண்ணிப்போம். இன்னைக்கு வெஜிடபுள் ரைஸை ஓரம் கட்டி வச்சாச்சு. நாளைக்கு தான் எடுக்கனும். ஓடிவந்து ஆலோசனை தந்தது நன்றி பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ராதாம்மா, நான் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? நீங்க சொன்ன ஐடியாவும் நல்லாருக்கு. பாதி வெஜிடபுள் ரைசில் இதை ட்ரை பண்ணி பார்க்கறேன்.

//ஃப்ரிட்ஜில் வைத்து நாளைக்கும் உபயோகித்துக் கொள்ளுங்கள்...// நம்ம வாழ்க்கையே ப்ரிட்ஜ்ல தானே ஓடுது ;) என் ப்ரிட்ஜ்ல 6 மாசத்துக்கு முன்னாடி பண்ண சமையல் கூட இருக்குமே ;) என்னை தெரிஞ்சவங்களுக்கு இது தெரியும் :D. தக்க நேரத்தில் பதில் போட்டதற்கு நன்றி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எங்களை பயப்பட வைக்க உங்க கைவசம் காங்கோ ஜூஸ் மட்டும் தான்
இருக்குன்னு இத்தன நாளா தப்பு கணக்கு போட்டுட்டோம்.......
இப்பதானே தெரியுது...... வெஜிடபுள் ரைஸ், பிரிட்ஜில் ஆறு மாதத்துக்கு முந்தைய ஐடேம்ஸ்ன்னு இப்படி நிறைய இருக்குன்னு....... : D
பாவம் எங்க அண்ணா......

கல்ப்ஸ்.....
நானும் ராதாம்மா சொன்னது போல ப்ரெட் துண்டுகளை தான் சேர்ப்பேன்.....
ஆனா பார்த்து அதுக்கு சால் ப்ரெட் போட்டுடாதிங்க......

நான் ஜெர்மனிக்கு என் மகன் வீட்டுக்கு போகும்போதல்லாம்தான் பார்க்கறேனே....என் மருமகள் கூசாம சமையல் மீந்தா தூக்கி ஃப்ரிட்ஜில வெச்சுடுவா... அதையே சாப்பிட மறுநாள் போரடிக்கும்னு..அப்பறம் ரெண்டு நாள் கழிச்சு மைக்ரோவேவ்ல வெச்சு சாப்பிடுவோம்....ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ்லாம் வரம் போங்க ...சரி குட்டீஸ் ரெண்டும் நலமா?

எனக்கு தெரிஞ்சி உப்பில்லாம குருமா வச்சி சேர்த்து சாப்பிட்டா உப்பு தெரியாது அதுவும் நீங்க சரியாவராதுன்னு சொல்லிட்டீங்க அதனால ராதாம்மா சொன்ன மாதிரி ட்ரை பன்னுங்க உப்பு குறையும் என்ன சாதம் தான் அதிகமாயிடும்.....

//.ஃப்ரிட்ஜில் வைத்து நாளைக்கும் உபயோகித்துக் கொள்ளுங்கள்...// இதெல்லாம் சொல்லித்தான் செய்யனும்னு இல்லைங்க ராதாம்மா அந்த வேலையை நல்லாவே செய்வாங்க நம்ம கல்ப்ஸ்........:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நான் நலமே!!

ஹூம்ம்.. ஃப்ரிட்ஜ் இருக்க பயமேன்.. :)

“சுடுதண்ணியை சூடு பண்ணும்போது சூடு அதிகமாகிவிட்டது குறைப்பது எப்படின்னு? ;)” ஹி ஹிஹி...

ஞாபகம் இருக்கானு நீங்க கன்ஃபாம் பண்ணனும்னு அவசியமே இல்லை பா.. எப்போதும் நீங்க எல்லாம் நியாபகத்தில் இருந்துட்டே தான் இருக்கீங்க..சில பல காரணங்களால் அறுசுவைக்கு வரமுடிவது இல்லை வந்தாலும் பதிவிட முடிவது இல்லை அவ்வளவே!... உங்க ஃபேஸ்புக் ஐடிக்கு ரெக்வெஸ்ட் அனுப்புறேன் கன்ஃபார்ம் பண்ணுங்க பா..

தீப்ஸ்,
//இப்பதானே தெரியுது...... வெஜிடபுள் ரைஸ், பிரிட்ஜில் ஆறு மாதத்துக்கு முந்தைய ஐடேம்ஸ்ன்னு இப்படி நிறைய இருக்குன்னு....... : D// ப்ரிட்ஜ்ல வச்சா 6 மாசம் தான் வைக்க முடியும்னு ரொம்ப வருத்தமா போச்சு :( இதுக்காகவே பழைய உணவுக்காக தொல்பொருள் பண்ட ப்ரீசரே பெருசா வாங்கி வச்சுட்டோம்... இப்ப என் கஷ்டமெல்லாம் போச்சு.. வருஷத்துக்கும் தேவைப்பட்டதை செய்து வச்சுட்டு, டெய்லி மாத்தி மாத்தி சூடு பண்ணி சாப்டுப்போம் ;))

நீ சொன்ன ஐடியாவும் நல்லாவே இருக்கு தீப்ஸ். எந்த பொருள் கிடைக்குதோ அதை வச்சு ட்ரை பண்ணிடறேன். தேங்க்ஸ் பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்