சர்க்கரை சேர்க்காமல் ஓட்ஸ் கஞ்சி

ஓட்ஸ் - 3 மேசைக்கரண்டி
தண்ணீர் - ஒன்றரை டம்ளர்
பால் - 3 அல்லது 4 மேசைக்கரண்டி
மிளகு சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

ஒன்றரை டம்ளர் தண்ணீரில் ஓட்ஸை போட்டு கொதிக்க வையுங்கள், அடுப்பை மிதமான தீயில் வையுங்கள். ஓட்ஸ் வெந்ததும் பால், உப்பு, மிளகு சீரகத்தூளைப் போட்டு கலக்கி ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள். சுவையான சத்தான ஓட்ஸ்கஞ்சி ரெடி.விரும்பினால் எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக் கொள்ளலாம். ஆயத்தப் படுத்தவும் சமைக்கவும் மொத்தமாக 10 நிமிடம் போதும்.

மேலும் சில பதிவுகள்