பட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

அன்பு அறுசுவை நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.
முதன் முதலாக பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்றுள்ளேன். நல்ல முடிவைத் தருவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

நடுவர் பொறுப்பு கொடுத்த தோழி வனிதாவுக்கும், அறுசுவைக்கும் நன்றி

நான் எடுத்துள்ள தலைப்பு தோழி யோஹலட்சுமியால் தரப்பட்டது-
ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

நகைச்சுவையான தலைப்பைத் தேடி நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இது....திருமணமான, திருமணமாகாத எல்லா தோழிகளுக்கும் பிடித்தமான (எந்தப் பெண்ணாவது அழகு செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்களா!!!இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு கூட நிறைய ஒப்பனை பொருட்கள் வந்திருக்கிறதே....இதில் அறுசுவைத் தோழர்களும் பங்கு கொள்ளலாம்!!) சீரியஸ் இல்லாத, சிரிக்கச் சிரிக்க பேச முடிந்த ஒரு தலைப்பு இது என்பது என் எண்ணம்!

இப்பொழுது மார்க்கெட்டில் தினம், தினம் புதிது புதிதாக எததனை அழகு சாதனப் பொருள்கள்....அந்த விளம்பரங்களே மனதை மயக்குகிறதே? இந்த பட்டியின் மூலமாக நம் தோழிகளிடமிருந்து எது நல்ல ப்ரேண்ட் என்று தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு அல்ப ஆசைதான்!!

வழக்கமான பட்டி விதிமுறைகள் இதற்கும் பொருந்தும்.
பட்டியின் விதிமுறைகள்
**********************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

எல்லாரும் கலந்துகிட்டு பட்டியை நவரச மேடையா ஆக்குங்க!

தயவு செய்து எல்லாரும் தமிழிலேயே பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

"கருப்பு அழகில்லை என்று நினைக்கிறோம்.இதன் மூலம் நடப்பது என்ன?கருப்பாய் இருக்கும் பெண் கலவரமகிறாள்,கண்ட கிரீம்களை தடவி வெள்ளையாக வேண்டும் என்று நினைக்கிறாள்"

இது நம்ம நாட்டுல மட்டும் இல்ல கோமதி....வெளிநாட்டுக்காரங்க என்ன செய்ய்றாங்க.....கருப்பாகணும்னு ஆசைப்பட்டு வெய்யில் பாழாப் போகாம சன் பாத் இல்ல எடுக்கறாங்க!!(நல்ல வேளை நாம க்ரீமோட விட்டோம்!!)

"க்ளியர் ஆன சருமம் , சுத்தமான உடல். இது பிறக்கும் போது எல்லோருக்குமே கிடைத்திருக்கும். அதை சரியாய் பராமரிக்காமல் விட்டு விட்டு"

எப்படி பராமரிச்சாலும் நம்மை சுத்தி இருக்கிற மாசுகளால நம்ம சருமம் வீணாகிறதைத் தடுக்க முடியாதே? அதைத்தானே மேக்கப் போட்டு ஒப்பேத்தச் சொல்றாங்க எதிரணிக்காரங்க...

"நல்ல லிப்ஸ்டிக் போட்டு, ஏகப்பட்ட மெக்கப்போடு சினிமாகாறங்களே ரோட்டில் வர மாட்டாங்க... வந்தா நாய் தொரத்துமாக்கும்."
அட..அட...அப்படி ஒரு விஷயம் இருக்கா வனிதா இதில....ஹ்ம்ம்...அதான் அதிகபட்ச மேக்கப் போடறவங்க சொகுசா ஏ.சீ காருக்குள்ள உக்காந்து போறாங்களோ? அது மேக்கப் கலையாம இருக்கன்னு இத்தனை நாள் நினைச்சிட்டிருந்தேனே.....நாய்ங்களுக்கு பயந்துதானா?...சரியா சொன்னீங்க வனிதா....இதுக்கு எதிர்க்கட்சிகிட்ட பதிலே இருக்காது....
"சிரிப்பு எனும் அழகை உதட்டுக்கு கொடுங்க... லிப்ஸ்டிக் தேவைப்படாது.
கருணை எனும் அழகை பார்வையில் கொடுங்க... கண்மை தேவைப்படாது.
குணம் என்ற அழகை மனதுக்கு கொடுங்க... ஒப்பனையே தேவைப்படாது...
பவுடருக்கு எதைக் கொடுக்கணும்னு சொல்ல விட்டுட்டீங்களே வனிதா...

ராக்கெட் ரம்யா...வாங்க....சும்மா இயற்கை அழகுக்கான காரணங்களைப் புட்டு புட்டு வெச்சுட்டீங்களே? ஒவ்வொண்ணும் கன் பாயிண்ட் போங்க...ஹ்ம்ம்ம்....எதிரணிக்கு பதில் சொல்லவே முடியாது...(அதான் எல்லாரும் காணாமப் போயிட்டாங்களோ? இல்ல ஒப்பனை செய்துக்க போயிட்டாங்களோ?)

"இப்ப எல்லாம் மேக் அப் செய்து, உதடு சாயம் பூசி, பக்காவா செண்ட் எல்லாம் போட்டு வெளியே கிளம்புபர்களை பார்த்தால் தான், குளிக்காம வந்திட்டாங்களோனு தோணுது."

நீங்களே பச்சைத் தண்ணியை சென்ட் மாதிரி யூஸ் பண்ணச் சொல்லிருக்கீங்க...அவங்க (தண்ணிக் கஷ்டத்தால) சென்ட்டை மட்டுமே உபயோகிச்சு தண்ணியை சேமிக்கறாங்களோ என்னவோ?!!! ஆனா அந்த கெமிக்கல், கேன்சர்....இதெல்லாம் பார்த்தா நமக்கு அழகு சாதனப் பொருட்களே வேண்டாம் சாமீ!!.

நடுவர் அவர்களே நான் பட்டிமன்றத்தில் வாதிடுவதற்காக வரவில்லை. இந்த பாண்டியநாட்டு குடிமகனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளவே வந்துள்ளேன். 1000 பொற்காசுகள் தரமுடியாவிட்டாலும் ஐந்தாவது தருவேன்.

நான் வசிக்கும்/வேலைபார்க்கும் இடத்தை சுற்றிலும் சாஃப்ட்வேர் கம்பெனிகள் நிறைய உள்ளன. தினமும் காலையிலும், மாலையிலும் பரட்டை தலையோடு, பத்திரகாளி போல் சுற்றித்திரியும் பெண்களைக்கண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறேன். பாவம் எண்ணெய் தேய்த்து தலை சீவ பணம் இல்லைபோல. அதனால்தான் இப்படி இயற்கை அழகோடு(அழகோ அழகோடு) சுற்றி திரிகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் என் மனைவியை கேட்டபோது இந்த பரட்டை தலைக்கும் பணம் செலவழிக்கிறார்கள் என்று சொல்கிறாள். மேலும் ஒரு அதிசயமும் சொல்கிறாள் இதுவும் ஒருவகை ஒப்பனைதான் என்று. இப்போது என்னுடைய சந்தேகமெல்லாம் பரட்டை தலை இயற்கை அழகா? ஒப்பனை அழகா? நடுவர் தங்கக் காசு வெல்வாரா என்று பார்ப்போம்..

பின்குறிப்பு: இது இயற்கை அழகு என்றால் ஒப்பனை அழகு அணிக்கும், ஒப்பனை அழகு என்றால் இயற்கை அழகு அணிக்குமே என் ஆதரவு..

அன்புடன்,
ராம்...

நான் பார்த்துட்டேனே! நடுவர் அவர்களே !! நீங்க கூட அழகா காஞ்சி காட்டன் கட்டிக்கிட்டு மனச உறுத்தாத மேக்கப் போட்டுகிட்டு நீதிலட்சுமி போல நடு சென்ட்டர் ல உக்காந்து தானே எல்லாத்தையும் அலசிகிட்டு இருக்கீங்கோ!!!
பிடிங்க நான் சொல்ற பாயிண்ட் களை
1 . சாப்டுவேர் வேலைக்கு போற பெண்கள் சினிமா ஹீரோயன்ஸ் மாதிரி போனா அதுக்கு மேக்கப் கரங்களை குத்தம் சொல்லாதீங்க. அதுலயும் நீட்டா உறுத்தாத லிப் கிளாஸ் போட்டு அருமையா வரவங்கல்லும் இருக்க தான் செய்யறாங்க
2 பரத நாட்யம் , கதக்களி கூத்து செய்யறவங்க இயற்கை அழகோட போய்மேடையில் நின்ன யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டங்க
ஒப்பனைக்காறரை தெய்வமா மதிப்பாங்க,--இவங்கள்லாம். நிறைய பெண்கள் --நடி கைகளை டீவி இல பார்த்துட்டு இப்படி தலை விரி கோலமா வீட்டில் அலைஞ்சா நல்ல பளார் ன்னு அறைஞ்சு
புத்திமதி சொல்லுங்க !! விரலுக்கு ஏத்த வீக்கம் தானுங்களே சரி .
3 ஏர் ஹோஸ்டஸ் வேலைக்கு போயிட்டு நான் சிம்பிள் ஆ இருப்பேன் னு சொன்னா காசு கொடுக்கிற கம்பெனி
உங்கள வேலைய விட்டு தூக்கிடும் இல்லீங்களா
4 நாம எந்த வேலைய செய்யரமோ அதுக்கு உரிய மரியாதைய மிகைபடுத்தாம அழகா நாம் முகத்தில வெளிபடுதத்றதுக்கு ஒப்பனை அவசியம் வேனும்கோ
ஏன் எல்லாரும் வீட்டிலிருக்கும் மனைவியை எண்ணெய் வழியும் முகத்தோடவே இருக்கணும் னு எதிர்பாக்கறீங்க? நமக்கு பிடிச்ச எதுவும் அழகுன்னு நாம நினைச்சாஅழகு தான்
காசு அதிகமா இருக்கேன்னு கண்ட கண்ட ப்யூட்டி பார்லர் படி ஏறாதீங்க --- சாம்பார் போடி நிறைய இருக்குன்னு 5 ஸ்பூன் பொடியை அரை டம்ளர் குழம்புக்கு போடலாமா?
அதிக பேசியல் ஆபத்து !!!
சிம்பிள் டச் அப் பண்ணி மத்தவங்க ஹார்ட் ஐ டச் பண்ணுங்க!!!
கண்ணுக்கும் மை அழகு ( பாட்டி யாவர வரைக்கும் கண்ணு தெரியத்தான் --லேட்டஸ்ட் கிளாசிக்
மேக்கப் பத்தி 2050 ல தெரிஞ்சுக்க)
அதனால ஒரு டப்பா மை அனுப்பறேன். வீட்டு மேக்கப் கிட் ல கிடக்கு பாருங்க !!
நல்ல மை போட்டு நம்ம அணிக்கே
தீர்ப்பு வழங்க கேக்குறேன்!! மருதாணி இட்ட கை களுடன் அழகாக டைப் செய்யும்
ஒப்பன சுந்தரி!!

தலைமுடிக்கு மட்டும் 1000திர்கம்ஸ் சிலவு செய்து, நேராக ஆக்கி கொள்கின்றனர்....அதை சுருட்டயாக ஆக்க் தனி காசு...பாதி சுருட்டை பாதி நெராக இருக்க தனி காசு,,,,,தலை வேரிலிருந்து பளபளன்னு தெர்ய தனி காசு....ஸ்ட்ரெய்டாக,யூ ஷேப்ல,அடுக்காக,மின்னாடி நெற்றியில் கொத்தாக,அல்லது கொஞ்சூண்டு விழுற மாதிரியோ,காதுக்கு பக்கம் சுருட்டையாகவோ,மாத்திக் கொள்ள தனி காசு,இவ்லோ செலவு செய்திட்து இழுத்துக் கட்டிக் கிட்டுப் போனால் தலை முடி பழய மாதிரி ஆகிடும்சரியா வருமா?மனது விடுமா?அதான் இப்படி தலைவிரி கோலமாக போகின்றர்...இன்னொன்று இப்போது பெரிய தொல்லை முடி உதிர்ந்து அதை அப்படியே உருவி சரிசெய்து கீழே நழுவ விட்டுடுவது போல கீழே போட்டு விடுகிறார்கள்

அது பரந்து பின்னால் வருபவர் முகத்திலோ ,கைபய்யிலோ விழுகிறது....நான் ஹாஸ்பிட்டல் சென்று இருந்தேன்...ஒரு ஆங்கில பெண் வீல்சேரில் முடியை கோதிக்கொண்டிருந்தார்..அவரை அழைத்து வ்ந்தவர் கிட்ட வந்ததும்

தூக்கி பின்னால் போட்டு விட்டு சென்றிட்டார்..க்ளீன் செய்தவருக்கு கோபம் வந்து விட்டது...சுற்றும் முற்றும் பார்த்தார்...நான் பர்தா போட்டு நின்று இருந்தேன் அதனால் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்,,,நிச்சயம் மனதில் திட்டி இருப்பார் அப்peண்ணை
இதுதேவையா?அழகாக தலையை க்ளிப் செய்து வைத்தால் என்ன?எத்தனை வகையான தலை அலங்காரம் உள்ளன....சோம்பேரி பெண் அழுகுக் கலையில் நுழைந்ததால் வந்த விபரீத ஸ்டைலாக இருக்கலாம்...ஹீம்
இப்படி தலைவ்ரி கோலமாக செல்வது அவரின் முகத்துக்கு இயற்கை அழகை கொடுக்கிறதாம்,,,வேகமாக செல்லும் போது காற்று எதிர்திசையில் அடித்தால் முடி முகத்தில் விழுந்து கண்ணை மரைத்து சரி செய்வதற்குள்,,,ஏதாவது வாகனதில் மோதிஅல்லது சாக்கடையில் விழுந்தாலோ,,,?????? இனியும் சொல்ல வேணுமா?

"மேக்கப் என்பது தனிப்பட்ட நபருக்கு தன்னம்பிக்கையை தருவதோடு அல்லாமல் நாம் சம்பந்தப்பட்ட பணியிலும் தன்னம்பிக்கையை சேர்க்கும். புத்துணர்ச்சி தரும். அந்த இடத்தின் சூழலையே மாற்றி விடும்."
இது சரியான வாதம் கல்பனா....ஆனா அதை சரியா புரிஞ்சுக்காதவங்களை என்ன சொல்ல?

"ஒரு புடவை கட்டுவதற்கு நாம என்னவெல்லாம் மெனக்கெடறோம். நாலு பேர் பார்த்தால் அழகாஇருக்கே அப்படீனு பாராட்டு வாங்கனும் என்றுதானே நினைப்போம். அதுபோலத்தான் நாங்க முகத்துக்கும் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கறோம்"
ஆமாம்...ஆமாம்...ஆனந்தா...பெண்களுக்கே உள்ள குணம்தான அது, அடுத்தவர் நம்மைப் பாராட்டணுங்கறது....இது ஒப்பனை இல்லாம கிடைக்குமா?

ஹய்யோ தளிகா....உங்களுக்கும் சந்தேகமா...(ஜெயலட்சுமி சந்தேகத்துக்கு பதில் சொன்னேன்...ஆளே காணாப் போயிட்டாங்க....தேடிக்கிட்டிருக்கேன்...)
எனக்கே இப்போ ஒரு சந்தேகம் வந்துடுச்சே?
ஒப்பனை என்பது...அளவான பவுடர் பூச்சா? அப்பின பவுடர் பூச்சா?
இதுக்கு ஒரு பட்டி மன்றம் வெச்சுடலாமா?!!

"ஃப்ரண்ட் ஆபிஸ் பொண்ணுனா அழகா இருக்கனும், லிப்ஸ்டிக் போட்டு தான் வரணும்னு ரூள்சே செட் பண்ணிட்டாங்க.. அதை மாற்ற முடியாது."
அட ரம்யா...ஃப்ரண்ட் ஆஃபீஸ் பொண்ணுகளை சொல்லறீங்களே.....எங்க வீட்டு வேலைக்காரியே புருவம் தீட்டாம, லிப்ஸ்டிக் போடாம வரதில்லயே....

நடுவர்..அவர்களே,என்..கீபோர்டில்..ஸ்பேஸ்பார்..உடைந்து..விட்டதால்..
என்னால்..தொடர்ந்து..வாதிட..முடியவில்லை..
கீபோர்ட்..சரியானதும்..வருகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாங்க வாங்க ராமய்யா!!
வழக்கு என்ன சொல்லுங்கய்யா!!

பரட்டைத்தலைப் பெண்களைப் பார்த்து நடுநடுங்கும் உங்களைப் பார்த்து "அய்யோ பாவம்"னு இருக்கு....என்ன பண்ண? காலத்தின் கோலம்!!!

அன்று சுந்தர பாண்டியன் கேட்டதும், இன்று நீங்கள் கேட்பதும் "தலையாய பிரச்னைதான்"....சந்தேகமே இல்ல.!!...

உங்க மனைவி சொல்லே மந்திரம்!! அவங்களுக்கு தெரியாத ஃபேஷனா இருக்கப் போகுது?! இன்றைய நாகரீகமே அழகை அலங்கோலம் ஆக்குவதுதான?

இயற்கை அழகு என்று எண்ணை தடவாமல் இருப்பவர்கள் தலையும் பறக்கும்....பார்லருக்கு போய் பணம் கொடுத்து முடியைக் கண்டபடி வெட்டி தாறுமாறாகக் கலைத்து விட்டுக்கொள்பவர் முடியும் பரட்டையாகத்தான் இருக்கும்...இதற்கு அந்த மதுரை சுந்தரேச்வரர்தான் வந்து தீர்ப்பு சொல்ல வேண்டும்!!!

உங்க ஆதரவை எந்த அணிக்கு வேணுமானா கொடுத்துக்குங்க....ஆனா தங்கக் காசை மட்டும் எனக்குக் கொடுத்துடுங்க!!!

அய்யோ உத்ரா...நீங்க வெச்ச ஐஸுல எனக்கு குளிர் ஜுரமே வந்தாச்சு!!! காஞ்சி காட்டன், நீதி லட்சுமி, நடு சென்டர்(எங்க வீட்டில ஹால் ஓரமாதான் உத்ரா கம்ப்யூட்டர் இருக்கு) உங்க வார்த்தை ஜாலம் அபாரமுங்க...
(நல்ல வேளை நீங்க அனுப்பின மஞ்சப்பொடியைத் தேச்சு "நம்ம வீட்டு தெய்வம் கே.ஆர். விஜயா மாதிரினு சொல்லாம விட்டீங்களே!!)

"நாம எந்த வேலைய செய்யரமோ அதுக்கு உரிய மரியாதைய மிகைபடுத்தாம அழகா நாம் முகத்தில வெளிபடுதத்றதுக்கு ஒப்பனை அவசியம் வேனும்கோ"
நூறு சதவீதம் சரியான வார்த்தைங்கோ....

"சிம்பிள் டச் அப் பண்ணி மத்தவங்க ஹார்ட் ஐ டச் பண்ணுங்க!!!"
என் ஹார்ட்டை ரொம்பவே டச் பண்ணீட்டீங்க!!!
ஆமா மை உங்க வீட்டில தயார் பண்ணிருந்தா அனுப்புங்க....நான் கடையில வாங்கற மையை யூஸ் பண்ணறதில்லீங்க!!!

.ரியாஸா...நீங்க சொல்வது மிகவும் சரி...இப்போ தலைவிரி கோலம்தான் நாகரீகமா இருக்கு...ஹ்ம்ம்ம்...இன்னும் நிறைய பாயின்டோட வாங்க...

சும்மா வாதத்துக்கு சொல்றேன்னு நெனச்சுக்காதீங்க..இந்த நேர்த்தியான மேக் அப் என்ற அளவு எத்தனை பேருக்கு எந்த அளவு வரை எப்படி பொருத்தமாகன்னு தெரியும்னு நினைக்கறீங்க?முக்கால்வாசி எதாவது பூசிட்டா அழகாகிட்டோம் என்று நினைத்துக் கொள்பவர்கள் தான்..எனக்கு என்னமோ சாதாரணமாக இருக்கிறவங்களை தான் பிடிக்கும்.சிலவங்க அழகா இருப்பாங்க கல்யாணம் ஃபன்க்ஷனு வந்துட்டா ஆளே மாறி ஒரு மாதிரியா இருப்பாங்க..என்னன்னு யோசிச்சா மேக் அப்பா இருக்கும்..இது என்னக்கு மட்டும் தானா இல்ல பலருக்கும் தோன்றுமோ தெரியாது ஆனால் பலரையும் மேக் அப்பில் பார்த்தால் எனக்கு பிடிக்கிறதே இல்லை..நம்ப ரம்யா இதற்கு ஒரு எடுத்துக் காட்டு சிம்பிளா அம்சமா.

லைட்டா மேக் அப் டச் பண்ணி மத்தவங்க ஹார்ட்டையும் டச் பண்ண நடிகையாலும்க் கூட முடியாது :) நடிகையோட பிழைப்பே ஒப்பனை போடறது தான்.. அவங்களாலே எத்தனை பேரு ஹார்ட்ட டச் பண்ண முடியும்னு நினைக்கறீங்க? சும்மா பார்த்தமா ரசிச்சமானு போயிட்டே இருப்பாங்க..

நாம் யார் ஹார்ட்டை டச் செய்யனும்னு கேக்கறேன்..நடிகைக்கு தான் தேவை...நமக்கு யார் ஹார்ட்டையும் டச் செய்ய தேவையில்லையே.. சம்பளம் கொடுத்தால் வேலை.. நீ வேலை செய்தால் சம்பளம்.. எல்லா இடத்திலும் ஒன்று கொடுத்து தான் ஒன்று வாங்க முடியும்..பலனை எதிர்ப்பார்த்து தான் காரண காரியம் எல்லாம் ..

எதையும் எதிர்ப்பார்க்காதது நம் பாசமான குடும்பத்தில் மட்டுமே.. அதுவும் இந்த கலிகாலத்தில் ஆட்டமா இருக்கு? நம் குடும்பத்தில் இருப்பவர் ஹார்ட்டை டச் செய்ய மேக் அப் டச் தேவையில்லையே.. அப்போ யார் ஹார்ட்டை நாம் டச் பண்ணனும்.. அவசியமே இல்லை தான்..

மேலே தோழர் கூறியது போல 1000 ரூபாய் கொடுத்து பரட்டை தலை விரிக் கோலமாய் அலைகிறார்கள் நடுவரே.. ஆண்களின் கேலிக்கும் ஆளாகுகிறார்கள்.. ஏன் பெண்களே..முகம் சுழிக்கிறார்கள்..

என்னதான் சொல்லுங்க.. என்றுமே நிலையாய் இருக்கும் இயற்கைக்கு நிகர் ஏதும் இல்லை.. எப்படி தான் இவர்களுக்கு நேரம் இருக்கோனு தோனும்..குளிப்பதற்கு 3 நிமிஷம் எடுத்துட்டு ஓடி வந்திடுவாங்க.. ஆனா ஃபவிண்டேஷன் தொடங்கி ஒன்னொன்னா போகும் நெயில் பாளிஷ் வரை.. 15 நிமிடமாவது எடுப்பாங்க.. அதுக்கு 10 நிமிஷம் நல்லா தாரளமா எடுத்து குளிச்சிட்டு வரலாம்.. எண்ணேய் தலைக்கு அப்பி இருப்பதை பார்த்தாவே ஒரு மாதிரியா இருக்கும்னு சொல்றாங்க.. எப்படி தலைக்கு எண்ணேய் வைக்காம இருக்க முடியுதே தெரியலை.. தேங்காய் நாரு போல ஜீவனே இல்லாம,, பாவம் மண்டை எண்ணேய் கேட்டு கெஞ்சி கதறும்..அப்றம் தலைவலி, உடல் சூடுனு இருப்பாங்க..

இயற்கைனு சொல்லும் போதே அது அழகு தான்.. ஒப்பனைனு கேட்டாவே.. தலை சுத்துது.. சிம்பிளா ஒரு லாங் தொங்கட்டான்க் கூட போட எனக்கு ஒரு மாதிரி தான் இருக்கு.. ஏதோ கரகாட்டம் ஆட போற மாதிரி ஒரு ஃபீல்.. அதனாலையே இந்த அலங்கார ஐட்டம்னாலே ஒரே ஓட்டம் தான்.. இயற்கையா இருந்து ரசிச்சு பார்த்துட்டா ஒப்பனை என்ற செயற்கை தேவைப்படாது நடுவரே..

தளி.. என்னை அப்படியே புகழ்ந்துட்டிங்க..:) ..ரொம்ப தேங்கஸ்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்