பட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

அன்பு அறுசுவை நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.
முதன் முதலாக பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்றுள்ளேன். நல்ல முடிவைத் தருவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

நடுவர் பொறுப்பு கொடுத்த தோழி வனிதாவுக்கும், அறுசுவைக்கும் நன்றி

நான் எடுத்துள்ள தலைப்பு தோழி யோஹலட்சுமியால் தரப்பட்டது-
ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

நகைச்சுவையான தலைப்பைத் தேடி நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இது....திருமணமான, திருமணமாகாத எல்லா தோழிகளுக்கும் பிடித்தமான (எந்தப் பெண்ணாவது அழகு செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்களா!!!இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு கூட நிறைய ஒப்பனை பொருட்கள் வந்திருக்கிறதே....இதில் அறுசுவைத் தோழர்களும் பங்கு கொள்ளலாம்!!) சீரியஸ் இல்லாத, சிரிக்கச் சிரிக்க பேச முடிந்த ஒரு தலைப்பு இது என்பது என் எண்ணம்!

இப்பொழுது மார்க்கெட்டில் தினம், தினம் புதிது புதிதாக எததனை அழகு சாதனப் பொருள்கள்....அந்த விளம்பரங்களே மனதை மயக்குகிறதே? இந்த பட்டியின் மூலமாக நம் தோழிகளிடமிருந்து எது நல்ல ப்ரேண்ட் என்று தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு அல்ப ஆசைதான்!!

வழக்கமான பட்டி விதிமுறைகள் இதற்கும் பொருந்தும்.
பட்டியின் விதிமுறைகள்
**********************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

எல்லாரும் கலந்துகிட்டு பட்டியை நவரச மேடையா ஆக்குங்க!

தயவு செய்து எல்லாரும் தமிழிலேயே பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நடுவர் அவர்களே ...அழகாய் இருக்க முதலில் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும்.

எது அழகு என்ற தெளிவு இருக்க வேண்டும்.

ஒருவேளை பிரிட்டிஷ் காரங்க நம்மை ஆட்சி செஞ்சுட்டு போயட்டதுனாலையோ என்னம்மோ தெரியல ’வெள்ளாவியில் வச்சு வெளுத்தாவது’ வெள்ளை ஆகணும் நு நினைக்குறாங்க.கறுப்பு அழகு. வசீகரிக்கும் நிறம்.’ங்கறதை நம்ம வீட்டுக் குழந்தைகளுக்கு சொல்லணும்.நம்மளே கருப்பு கலர் ன்னா ஏதோ அசிங்கம் ங்கற மாதிரி சிகப்பு அழகு கிரீம்களை பத்தி பேசிகிட்டும் போட்டுகிடும் இருந்தா குழந்தைகளும் அதே மன நிலைமையோட தான் வளரும். இதுக்கு நல்ல உதாரணம் என் நாத்தனார் குழந்தை.UKG போற பொண்ணு வந்து வீட்டுல அழுகுது நடுவர் அவர்களே...நான் கருப்பா இருக்கேன்னு என் ன்னோட சில பொண்ணுங்க பேச மாட்டேங்குறாங்க...அவங்களோட விளையாட சேர்த்துக்க மாட்டேன்குறாங்கன்னு ...ரெம்ப அதிர்ச்சியா இருந்துது.இது நடந்தது எந்த காலத்துலையோ இல்ல - இப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி. எங்கிட்ட வேற சொல்லுது..உங்களுக்கு பாப்பா வரும் பொது வெள்ளையா வர வையுங்கன்னு?!!!?

தோல் வறட்சியா -பப்பாளி பழம் நிறைய சாப்பிடுங்க.
முகம் பிரகாசமகனுமா - மாதுளம் பழம் சாப்பிடுங்க.
தோல் சுறுக்கமா - டெய்லி ஒரு நெல்லி கனி சாப்பிடுங்க.

இந்த மாதிரி எத்தனையோ இருக்கு நடுவர் அவர்களே...ராஜம் முரளி ங்கறவங்க ஒரு புத்தகம் எழுதி இருக்காங்க - "பழகின பொருள் அழகிய முகம்" ன்னு...மேக் உப போடறவங்க எல்லாரும் அந்த புக் எ வாங்கி படிக்கணும்.(போடற நேரத்துல டெய்லி கொஞ்சம் கொஞ்சமா படிச்சுடலாம்)

நமக்கெல்லாம் instant காபி , instant noodles ன்னு எல்லாம் இன்ஸ்டன்ட் வந்த மாதிரி அழகையும் இன்ஸ்டன்ட் எ கிடைச்சுடும் நு நினைக்கறவங்க தாரளம மேக் உப போட்டுக்குங்க...நடுவர் அவர்களே நல்ல சாப்பாட்டு முறை இருந்தா உடல் அழகாகும்.உடல் உள்ள அழகானா வெளியே தானே reflect ஆகும் நடுவர் அவர்களே.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நடுவரே!!

நாங்களும் வெள்ளை நிறம்தான் அழகுன்னு சொல்லலையே;)

உலகப்புகழ்பெற்ற மாடல் நயோமி ஒரு ப்ளாக் பியூட்டிதான்...

உலகத்திலேயே சிறந்த அழகியா கருதறதும் க்ளியோபட்ரா ஒரு ப்ளாக் பியூட்டிதான்...

நம்ம ப்ரியங்காவும், சுஸ்மிதா சென்னுமே இந்தியன் கலர்தான் அதாங்க மாநிறம்;)

என்ன இயற்கையா வந்த பிம்பிள்ஸ்னால ( யாராவது சைட் அடிச்சா கூட வருமாமே;)) பள்ளம், சூரியனின் புற ஊதக்கதிர்களால் வந்த மங்கு...இதையெல்லாம் போக்க அல்லது போக்க முடியாதவைகளை கொஞ்சம் சேம் கலர் ஃபேஸ் பவுண்டேசன் வைச்சு கவர் பண்ணிப்பாருங்க க்ளியர் சருமம் கிடைச்ச மாதிரி மின்னுவீங்க. நடுவரே! இயற்கையான பொருள் வைச்சு பண்ணினாக்கூட சில பள்ளங்கள் டேன்கள் அவ்வளவு எளிதா போக்க முடியாது நடுவரே!... சனாஸ் டேன் ரிமுவர் ஃபேசியல்,ஆண்ட்டி அக்னி ஃபேசியல் ஒரு மூணு தடவை பண்ணிப்பாருங்க மொசைக்கல் மாதிரி ஆயிடும் கன்னம்..இல்லைனா VLCC ல ஒரு பேக்கேஜ் கவர் பண்ணிட்டு வாங்க சூப்பர் பியூட்டி ஆயிடுவீங்க;)

அதனால என்ன சொல்றோம்னா இயற்கையா கிடைச்ச அதே ஸ்கின்ன வச்சு காலம் தள்ளமுடியாது ட்ரை ஸ்கின்னா இருந்தா கொஞ்சம் மாய்ஸ்டரைசிங் இல்லைனா ஆலிவ் ஆயிலாவது போட்டு கொஞ்சம் ஆயில் ஸ்கின் மாதிரி மெருகேத்தறது தப்பில்லை அதனால ஒப்பனை அவசியமே அவசியமே ந்னு சொல்லி நடுவரே தங்களது தீர்ப்புக்காக ரொம்ப நேரம் வெயிட்டிங்க் சீக்கிரம் தீர்ப்பு சொல்லுங்க ஹா ஹா ஏன்னா வழக்கமா நடுவர்தான் குழம்புவாரு இப்ப எனக்குமே குழப்பம்தான்;-)

Don't Worry Be Happy.

தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு இருக்குற அழகை கெடுத்துகிட்டது போதாதா எதிர் அணிக்கு??? நான் சொன்ன எல்லாம் நம்மை அழகாக்க இல்லைங்க... இயற்கை நமக்கு கொடுத்த அழகை பாதுகாக்க. இப்படி பாதுகாத்திருந்தா நீங்க போடும் ஒப்பனை தேவை இல்லைன்னு சொல்றோம். இயற்கையாக தினம் தினம் நாம் குளிக்க பயன்படுத்தும் முகம் கழுவ பயன்படுத்தும் பொருளெல்லாம் ஒப்பனையில் வருமா??? எதிர் அணி சொல்லி தான் தெரியுது. இல்லாத அழகை இருப்பதாக கட்டுவதே ஒப்பனை... இருக்கும் அழகை பாதுகாக்க இயற்கையாக சில வழி முறைகளை பின்பற்றுவது ஒப்பனையாகாது நடுவரே. இந்த லிஸ்ட அவங்களே கொடுத்திருந்தா அதுக்கு நாங்க தான் நன்றி சொல்லனும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் instant instant சொன்னதன் அர்த்தம் புரியுதா நடுவர் அவர்களே...நீங்க வேற latest beauty products (இங்கயே எனக்கு ஒரு doubt நடுவர் அவர்களே -உங்க மேல...தீர்ப்பு வரட்டும்...)பற்றி சொல்லுங்கன்னு சொன்னதால அத வச்சு உங்கள எதிர் அணியினர் make up பண்றாங்க நடுவர் அவர்களே...நீங்க மயங்கிடாதீங்க...நம்மல்லாம் இயற்க்கையாவே அழகா ஆகிக்கலாம்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நடுவரே!

கடல்புறானு ஒரு கதை ஆனந்தவிகடன்ல வரும் அதுல வர மஞ்சளழகி மேல தன் காதலன் மதிமயங்கிபோய் இருக்கிறதா தவறாபுரிஞ்சு நம்ம கதாநாயகி மஞ்சளைத் தன்மேனியிலும் பூசி தானும் அதேப்போன்ற அழகிதான்னு கதாநாயகன கவரப்பாப்பாங்களாம்;) நடுவரே சரியா படிக்கலைன்னு பெஞ்ச்மேல நிக்க வைச்சிராதிங்க;)) ஸ்கூல்டேஸ்ல படிச்சது.. அதான் நான் என்ன சொல்ல வரேன்னா மஞ்சளை நாம கிருமிநாசினியாமட்டும் உபயோகப்படுத்தலை ஒப்பனைபொருளாகவும்தான் உபயோகிச்சோம்னு....

நடுவரே!

ஒப்பனைக்கு முக்கியத்துவம் கொடுக்கலைன்னா போருக்கு போன தன் காதலன் அல்லது வணிகத்துக்கு போன காதலன் திரும்பி வராததைக்கண்டு நாயகி அணியிழந்தாள் மேனி நலிந்தாள் ஏன் ஒப்பனை செய்யவும் மறந்தாள்னு எல்லாம் காவியக் கதைகள்ல சொல்றாங்க. அதாவது ஹேப்பியா இருந்தா பொண்ணு ஓடிப்போய் முதல்ல நிக்கற இடம் கண்ணாடிதான்;)

பன்னெண்டு பதிமூணு வயசு ஆனதுமே கண்ணாடிமுன்னாடி நின்னு கண்ணு இப்படி இருந்தா நல்லாயிருக்குமோ காது இன்னும் நீண்டிருந்தா நல்லாயிருக்குமோ, வாய் சின்னதா இருந்தா நல்லாயிருக்குமோன்னு பெண்கள் மட்டுமல்ல ஆண்கள்கூட நின்னு ஆராய்ச்சி பண்ணுவாங்களாம் அப்படின்னு டெவலப்மெண்ட் சைக்காலஜில இந்த பர்ட்டிகுலர் ஏஜுக்கான பாடத்தில இருக்கும். அதனால ஒப்பனைங்கிறதும் நம்ம கூட பொறந்ததுதான் வெளிநாட்டுக்காரனைப்பாத்து காப்பி அடிச்சதில்லை ஒவ்வொருத்தருக்கும் ஒப்பனை அவசியம்...ஆதி காலத்தில இருந்து ஒப்பனை நம்ம கூடயே வந்ததுதான் அது ரொம்ப சாதாரணமான ஒன்று சொல்லப்போனா இயற்கையான குணம்தான் எனவே ஒப்பனை அவசியம் அவசியம்னு சொல்லி வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்;-)

Don't Worry Be Happy.

நடுவரே!!

விடமாட்டேங்குறாங்களே!!!

நடுவரே!!

அன்னிக்கு என்ன பொருள் நம்ம கைவசம் இருந்ததோ அதை வச்சி நாம நம்ம அழகை மெருகேத்தினோம்..இன்னிக்கு இப்பவும் நமக்கு கிடைக்கிற பொருள்களை வச்சி நாம் மெருகேத்தறோம் ...அன்னிக்கான எவ்வளவோ இயற்கை மேக்கப் சாதனங்களை நாம ஒழுங்கா ப்ரிண்ட் போட்டு வைச்சுக்காம ஓலைச்சுவடியோடவே செல்லரிக்கபோக வச்சிட்டோம்..அதுக்காக இன்னிக்கான மேக்கப் சாதனங்களையும் உபயோகிக்காம வெறும் பச்சை தண்ணிய ( நான் விட மாட்டேன்;))மட்டும் வெச்சி கழுவுங்க அப்படின்னு சொன்னா எப்படி??

நடுவரே!

செயற்கை பொருள்களான சோப்பையும் விடமாட்டேங்குறாங்க,,பற்பசையையும் விடமாட்டேங்குறாங்க,,மாய்ஸ்டரைசிங்கையும் விட மாட்டேங்குறாங்க மொதல்ல இப்ப ஆதிகால மேக்கப் டிப்ஸும் எங்களுக்குதான்னு சொல்றாங்க நடுவரே என்ன ஒரே அநியாயமா இருக்கு இப்ப உடனே வந்து தீர்ப்பு என்னன்னு சொல்லப்போறீங்களா ........சரி சரி சும்மாதான் .....7 மணிக்கே தீர்ப்பு சொல்லுங்க;-)

Don't Worry Be Happy.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...........

//.மேலும் அழகு என்கிறபோதே நம் நினைவுக்கு வருவது முகம்தானே? அதற்கு அழகு செய்து சற்று மேருகேற்றுவதுதான் ஒப்பனை.// இது நீங்க சொன்ன பாயிண்ட்தான் ....சோ எப்படி பண்ணி மெருகேற்றினாலும் ஒப்பனை ஒப்பனைதானே;-)அதனால ஒப்பனை அவசியம்னே தீர்ப்பு சொல்லிடுங்க;-)

குறிப்பு: ப்யூட்டி பார்லர் போயி ஃபேசியல் பண்ணா அது ஒப்பனை வீட்டிலேயே கிடைக்கிற பொருளை வச்சி பண்ணினா அது ஒப்பனைல அடங்காதா என்ன கொடுமை சரவணா;-)))

Don't Worry Be Happy.

அன்புத் தோழிகளே...வாதப் பிரதிவாதிகளே...அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்

முதலில் இயற்கை அழகு பற்றி பார்ப்போம்.இயற்கை அழகில் எந்த பாதிப்பும் இல்லை.இயற்கை அழகு என்பது நாம் பிறந்தது முதலே இருக்கும் அழகு. அது எப்படி இருந்தாலும் (அழகோ, இல்லையோ) மாற்ற முடியாது.அழகு எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலர் கருப்பு, சிலர் சிகப்பு, சிலருக்கு வறண்ட சருமம், சிலருக்கு எண்ணைப் பசையுள்ள சருமம்....இப்படி பலவிதம்.

*ஒப்பனைப் பொருட்களால் நம் உடலுக்கு எந்த பாதிப்பும் வராது

*இயற்கை அழகில் தலை பறக்காது; முகம் கறுக்காது; சரும நோய் வராது;ஆரோக்கியமான உடல் கிடைக்கும்.

*நம் உடலை முறையாக பராமரித்தால் என்றும் குழந்தையின் மென்மையான சருமத்தை மெயின்டைன் பண்ணலாம்.

*ஒப்பனை பொருட்கள் உபயோகிக்காதவர்களுக்கு புற்று நோய் தாக்கும் அபாயம் இல்லை.

*அறிவாளிகளும், மேதைகளும் ஒப்பனை போடுவதில்லை
.
*பார்லருக்கு போகாததால் பணமும் மிச்சம்; முகமும் கெடாது.

*நிறைய பழங்கள். காய்கறிகள் சாப்பிட்டால் இளமை அப்படியே இருக்கும்.

*ஒப்பனை இல்லாமல் ஆஃபீசுக்கு போனால் யாரும் பயப்பட மாட்டார்கள்!

*வெளியே ஒப்பனைக் கோட்டிங்க், நம் உள்ளத்தின் கோட்டிங்கை மறைத்துவிடும்;அதனால் ஒப்பனை கூடாது.

*சிரிப்பு எனும் அழகை உதட்டுக்கு கொடுங்க... லிப்ஸ்டிக் தேவைப்படாது.
*கருணை எனும் அழகை பார்வையில் கொடுங்க... கண்மை தேவைப்படாது.
*குணம் என்ற அழகை மனதுக்கு கொடுங்க... ஒப்பனையே தேவைப்படாது... ஒப்பில்லா அழகியாவீங்க.
நல்ல புதுமொழி....

*ஒப்பனை பல ஆபத்துக்களை கொண்டு வரும்.

*இயற்கையை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு ஒப்பனை தேவையில்லை.

*கான்க்ரீட், சிமென்ட் தரையை மூடுவதால் மழை நீர் பூமிக்குள் போகாமல் தண்ணீர் கஷ்டம் வருகிறது;ஒப்பனை பொருட்களை உபயோகிப்பதால் நம் சருமமும் அடைத்து விடும்.

இனி ஒப்பனை அழகு.....
ஒப்பனை என்றால் என்ன? நமக்கு இருக்கும் இயற்கையான அழகை சில உடலுக்கு பாதிப்பு வராத ஒப்பனைப் பொருட்களைக் கொண்டு சற்றே மிகைப் படுத்திக் கொள்வது.

*அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்தான்...அளவான ஒப்பனை அழகுக்கு உத்தரவாதம்.

*மஞ்சளும், மருதாணியும் அன்றைய நாள் தொட்டே அழகுக் கலையில் முக்கிய இடம் பெற்றவை.

*அழகை மிகைப் படுத்திக் கொள்வதால் தன்னம்பிக்கை அதிகமாகிறது.

*அழகு எல்லாராலும் விரும்பப் படுவதை மறுக்க முடியாது.

*ஒப்பனையினால் வயதைக் குறைத்துக் காட்டலாம்
.
*இன்றைய குழந்தைகள் கூட அழகான அம்மாவை அறிமுகப் படுத்த ஆசைப் படுகிறார்கள்.

*அளவான ஒப்பனையில் செய்யப்படும் எளிமையான அழகு யாரையும் பயப் படுத்தாது; யார் கண்களையும் உறுத்தாது.

*இளம் வயதில் நரை, முகச் சுருக்கம், வித்யாசமான சருமத்தை அழகுபடுத்த ஒப்பனை தேவையே.

*நடிகைகள், பெரிய நிறுவனங்களின் வரவேற்பாளர்களுக்கு ஒப்பனை அவசியம் தேவை.

*நம் நாட்டு பெண் தலைவர்களும் ஒப்பனை செய்பவர்களே!

*ஒப்பனை ஒரு பெண்ணுக்கு புத்துணர்ச்சி தரும்.அவ்விடத்தின் சூழலைக் கலகலப்பாக்கும்.

*சிம்பிள் டச்சப் மற்றவர்கள் ஹார்ட்டை டச் பண்ணும்!

*ஐ.டி பெண்கள் டெர்ரர் மேக்கப் செய்து கொள்வது தங்களை மோசமான ஆண்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவே!

*நிறம், அழகு குறைந்த பெண்களுக்கு ஒப்பனை ஒரு வரப் பிரசாதமே.

.இதை எந்தப் பெண்ணும் இல்லை என்று சொல்ல முடியாது.தன்னுடைய உடையையோ, நகையையோ அழகாக இருக்கிறது என்று சொன்னால் மகிழாத பெண் உண்டா?அது போல அளவான ஒப்பனை பெண்ணை மேலும் அழகாக் காட்டும் என்பதும் உண்மை.

சங்க காலம் முதலே பெண்கள் தங்களை ஒப்பனை செய்து அழகாக்கிக் கொள்வதில் விருப்பமானவர்களாகவே இருந்துள்ளனர்.அகநானூறு பெண்கள் மருதோன்றியை (மருதாணி) அரைத்து கைகளிலும், சிவப்புச் சாயத்தை குதிகால்களில் பூசி அழகுபடுத்திக் கொண்டதாகக் கூறுகிறது.

சிலப்பதிகாரத்தில் விவரிக்கப் படும் கண்ணகியின் திருமணத்தில் பெண்கள் தம்மை பொன்னாபரணங்கள் அணிந்து பலவித அலங்காரங்களுடன் வளைய வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி, அவளெ என் காதலி....என்று 1113 வது குறளில் உரைக்கின்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்...

இவற்றால் அக்காலத்திலும் ஒப்பனை இருந்தது என்பதை நாம் அறிய முடிகிறது.

இன்றைய நாளிலும் ஓரளவு ஒப்பனை தேவையே.நல்ல கையளவு சரிகை போட்ட பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு , முகம் அலம்பி, ஒரு சின்ன பொட்டுடன் திருமணத்திற்கு போக முடியுமா?அந்தப் பட்டுப் புடவையின் கெட்டப்பே போய்விடுமே?அழகிய கண்களில் மை இட்டு, லேசாக ஃபவுன்டேஷன்போட்டு ஒரு அலங்கார ஸ்டிக்கரை வைத்துக் கொண்டு,தலையை பின்னலிட்டோ (இப்போதெல்லாம் பின்னிக் கொள்ள முடி ஏது!!) வித விதமாகக் கிடைக்கும் ரெடிமேட் கொண்டையைப் பொருத்திக்கொண்டோ போய்ப் பாருங்கள்....மண்டபமே உங்கள் அழகைப் புகழும்.

அதிக அளவு ஒப்பனை போடுவதால் உடல் நலத்துக்கு கேடு என்பது அனைவரும் அறிந்ததே.சில மணி நேரத்துக்குப் பின் சுத்தமாக அலம்பி விட்டால் எந்த பாதிப்பும் வராது.

வயதானோரையும் இளமையாக்கி வித்தை காட்டுவது ஒப்பனை! என் உறவினப் பெண்ணை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. அவள் தலைமுடி சீக்கிரமே நரைத்து விட்டதால், பள்ளியில் படிக்கும் அவள் பிள்ளையே அம்மாவை டை போட்டுக் கொள்ளும்படி சொல்வதாகச் சொன்னாள்.இந்தக் காலக் குழந்தைகள் கூட தன் அம்மா அழகாயிருக்க வேண்டுமென ஆசைப் படும்போது ஒப்பனை செய்து கொள்வதில் தவறென்ன?

இனி என் தீர்ப்புக்கு வருகிறேன்.
இயற்கை அழகு எல்லாருக்கும் உண்டுதான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்நாட்களில் இயற்கை அழகு மட்டும் போதுவதில்லை. அந்தக் காலம் முதல் இந்த காலம் வரை பெண்கள் அழகு படுத்திக் கொள்வதை யாரும் தவறு என்று சொல்வதில்லை.
பெண் தன்னை ஒப்பனை செய்து கொள்வது அவளது இயல்பு. வயதானாலும் தம்மை இளமையாகக் காட்டிக் கொள்ள எல்லா பெண்களும் விரும்புவது இயற்கை.' உங்களுக்கு இரண்டு குழந்தைகளா? நம்பவே முடியலயே?' என்று யாராவது சொன்னால் வானத்தில் பறக்காத பெண் உண்டா, சொல்லுங்கள்!!

ஒப்பனை என்றவுடனேயே நாம் ஏன் சினிமா நடிகைகளை உதாரணமாகக் கொள்ள வேண்டும்?ரிசப்ஷனிஸ்டுகளுக்கும், ஏர்ஹோஸ்டஸ்களுக்கும், நடனம் ஆடும் நங்கைகளுக்கும் அது அத்தியாவசியம். அது அவர்களுக்கு வருமானம் தரும் தொழில்.நாம் இங்கு விவாதிப்பது நம்மைப் போன்ற குடும்பப் பெண்களின் ஒப்பனை பற்றியே. அதனால் இதில் அப்பிய கண்மை, பவுடர், பளபள லிப்ஸ்டிக், பிரித்துவிட்டு காற்றில் பறக்கும் தலைமுடி....இது போன்ற ஒப்பனைகளை நாம் செய்யவே மாட்டோம்.

சக தோழிகள் கூறியது போல் அழகு குறைவானவர்களுக்கும், நிறம் குறைவானவர்களுக்கும் ஒப்பனை தேவை. அவர்களை சில மணி நேரத்துக்கு அழகாக்கும் ஒப்பனையைக் குறை சொல்ல முடியாது.
ஒப்பனை செய்து கொண்டதால் நாம் அழகாக இருக்கிறோம் என்பதை நினைக்கும்போதே ஒரு தன்னம்பிக்கையும், உற்சாகமும், பெருமிதமும் ஏற்படுவதை உணர முடியும்.
தினசரி வாழ்க்கைக்கு ஒப்பனை தேவையில்லைதான். அதே போல் எப்போதும் மேக்கப்புடன் யாரும் உலவுவதில்லை. ஒப்பனையை வீட்டுக்கு வந்தவுடன் சுத்தம் செய்துவிட வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

நாம் சாப்பிடும் உணவு, வீசும் காற்று, குடிக்கும் தண்ணீர் எல்லாமே சுகாதாரமற்றுதான் உள்ளது. இதில் பால், பழம் சாப்பிடுவதும், யோகா, த்யானம் செய்வதும் இக்கால அவசரத்தில் நினைக்கக் கூட முடியாதே? காலை எழுந்து அத்தனை பேரும் இறக்கை கட்டாத குறையாகப் பறக்கும்போது ஒரு 15 நிமிட ஒப்பனையில் பளிச்சென்று கிளம்ப முடிகிறதே?இக்காலத்தில் 20 வயதிலேயே முடி நரைத்து விடுகிறது. அந்தப் பெண்ணுக்கு டை போட்டுக் கொள்வதால் இளமையாகத் தோன்ற முடியுமானால் அவள் 'இது இயற்கை...நான் இப்படியே இருக்கிறேனே' என்று சொல்வாளா?
கூட்டத்திலும், பஸ், ரயில், மார்க்கெட்டுகளிலும் போகும்போது டியோ போடாமல் போக முடியுமா?முழங்கை வரை மருதாணி இட்டுக் கொள்கிறோமே, எதற்கு? அழகை மிகைப் படுத்தத்தானே?அப்படியே பின்னாலுள்ள நகங்களுக்கு நெயில் பாலிஷ் போடுவதிலும் தவறில்லையே?
இயற்கை அழகு அணியினர் கூறுவது போல் பெண்கள் ஒப்பனை செய்து கொள்வது தவறு என்றால் இன்றைக்கு தெருவுக்கு பத்து ப்யூடி பார்லர்கள் இருக்க வாய்ப்பே இல்லை. முறையாகச் செய்யப்படும் ஒப்பனைகள் தீங்கிழைப்பதுமில்லை. கத்தாழை, துளசி, மஞ்சள், சந்தனம், முல்தானி மிட்டி போன்ற சிறந்த மூலிகைகளால் உருவாக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் சருமத்திற்கு நன்மையே தரும் என்பது ஒப்புக்கொள்ள வேண்டியதே.

ஆரவாரமில்லாத, அளவான, அழகான, மிதமான, இயல்பான, அடுத்தவர் கண்ணை உறுத்தாத இயற்கையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு செய்து கொள்ளும் ஒப்பனை அழகு பெண்களுக்கு தேவையே.அத்தகைய அழகிய ஒப்பனை நமக்கு, நம்முடன் பழகுபவரிடம் மரியாதையையும், மதிப்பையும் நிச்சயம் பெற்றுத் தரும் என்று என் தீர்ப்பைக் கூறி பட்டிமன்றத்தை முடிக்கிறேன்.
வாய்ப்புக் கொடுத்த அறுசுவைக்கு நன்றி.

vandhuttuநல்ல தீர்ப்பு நாங்க ஜெயிச்சுட்டோம்,

//இயற்கையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு செய்து கொள்ளும் ஒப்பனை அழகு பெண்களுக்கு தேவையே.// இயற்க்கை அணி ஜெயிச்சுட்டோம்!!11!!

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்