பட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

அன்பு அறுசுவை நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.
முதன் முதலாக பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்றுள்ளேன். நல்ல முடிவைத் தருவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

நடுவர் பொறுப்பு கொடுத்த தோழி வனிதாவுக்கும், அறுசுவைக்கும் நன்றி

நான் எடுத்துள்ள தலைப்பு தோழி யோஹலட்சுமியால் தரப்பட்டது-
ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

நகைச்சுவையான தலைப்பைத் தேடி நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இது....திருமணமான, திருமணமாகாத எல்லா தோழிகளுக்கும் பிடித்தமான (எந்தப் பெண்ணாவது அழகு செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்களா!!!இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு கூட நிறைய ஒப்பனை பொருட்கள் வந்திருக்கிறதே....இதில் அறுசுவைத் தோழர்களும் பங்கு கொள்ளலாம்!!) சீரியஸ் இல்லாத, சிரிக்கச் சிரிக்க பேச முடிந்த ஒரு தலைப்பு இது என்பது என் எண்ணம்!

இப்பொழுது மார்க்கெட்டில் தினம், தினம் புதிது புதிதாக எததனை அழகு சாதனப் பொருள்கள்....அந்த விளம்பரங்களே மனதை மயக்குகிறதே? இந்த பட்டியின் மூலமாக நம் தோழிகளிடமிருந்து எது நல்ல ப்ரேண்ட் என்று தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு அல்ப ஆசைதான்!!

வழக்கமான பட்டி விதிமுறைகள் இதற்கும் பொருந்தும்.
பட்டியின் விதிமுறைகள்
**********************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

எல்லாரும் கலந்துகிட்டு பட்டியை நவரச மேடையா ஆக்குங்க!

தயவு செய்து எல்லாரும் தமிழிலேயே பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அருமையான தீர்ப்பு...பாயிண்ட்ஸ் எல்லாம் நியாயத்தராசுல வச்சமாதிரி மிக சரியா சொல்லியிருக்கீங்க...வாழ்த்துக்கள்

இரண்ரு அணியிலும் வாதங்கள் பண்ணிய எல்லாருமே சூப்பரா கலக்கிட்டீங்க
வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வெற்றி.....வெற்றி.....வெற்றி.......(லேட்டான ரிப்லைகு மன்னிக்கவும்) நம்ம்பவே முடியலை... அருமையான விளக்கங்களைப் பார்த்து ஒரே ஆனந்த அதிர்ச்சி தான். குறிப்பாக திருக்குறளில் ஒப்பனை பற்றி 1113 வது குறளில் நம்ம திருவள்ளுவரே கூறியிருக்கிறார் என்ற செய்தியெல்லாம் உங்களுடைய ப்ரிப்பரேஷனின் ஹார்டுவொர்க் வெளிப்படுகிறது. நிறைவான தீர்ப்புக்கு நன்றி...... வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

அன்பு அறுசுவைத் தோழிகளுக்கு வணக்கம்.என் தீர்ப்பை பாராட்டிய அனைவர்க்கும் நன்றி...நன்றி
.
நான் எடுத்த தலைப்பு சரிதானா என்று நானே கொஞ்சம் குழம்பியிருந்தேன்....அவள் விகடனின் இந்த வார (20 டிசம்பர்) இதழை பார்த்ததும் ஒரு நல்ல விஷயம்தான் டிஸ்கஸ் பண்ணியிருக்கிறோம் என்ற திருப்தி ஏற்பட்டது. புத்தகம் வாங்குபவர்கள் படித்துப் பாருங்கள்.

"இருந்தாலும் கடைசியா இயற்கையான பொருட்களால் ஆன ஒப்பனைகள்னு சொன்னதால் உங்க தலை தப்பியது"
வனிதா....இதைப் படிச்சு நான் ரொம்பவே பயத்தில இருக்கேன்....'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்'னு ஓடிடறேன்ப்பா!! இனி தலைமை (இது தலைக்கு போடற டை இல்ல...நடுவர் பொறுப்பு!!!) பற்றி கொஞ்சம் நான் யோசிக்கணும்னு நினைக்கிறேன்!! (தப்பா நினைக்காதீங்க....சும்ம்ம்ம்மாதான்!!!!)

அழகான தலைப்பை தேர்ந்தெடுத்து அருமையான தீர்ப்பு கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! வேலை பளு காரணமாக என்னால் பதிவு போட முடியவில்லை. அதனால் மன்னிக்கவும். அடுத்த பட்டியில் நிச்சயம் கலந்துக் கொள்வேன். நீங்கள் தீர்ப்பு வழங்கிய விதம் அருமை. வாழ்த்துகள். சீக்கிரம் அடுத்த பட்டிக்கு தயாராகுங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் , ராதம்மா, அறுசுவைக்கு நான் புதுசுன்னாலும்,
என்னமோ ரொம்ப வருஷம் பழகினது போல்,
உங்க பேச்சு, என்கரேஜ்மெண்ட், சக அறுசுவைத் தோழிகளின்
அருமையான , நகைச்சுவைகூடிய ( ரம்யா, ஹெல்பிங்க் ஹாண்ட் கோமதி, சூப்பரப்பு ஜயலக்ஷ்மி,
வனிதா, தளிகா, ஸ்பேஸ்பார் இல்லாமல் கூட, பேச்சில் அசத்திய( மைக் இல்லா மேடையில் பேச்சால் கட்டி போடுவது போல்)-- கல்ப்பு(கலக்கிட்டிங்க) நிறைய கற்றுக் கொண்டேன்.இத்தலைப்புக்கும், உங்களுக்கும் இந்த கவிதையை டெடிகேட் பண்றேன். அடுத்த பட்டியில் சந்திப்போம்.
விரும்பியே ஏற்கிறாள் பெண!!! பெண் என்ன போகப் பொருளா?
சந்தையில் விலை பேசும் மாட்டைப் போல்
கொம்பு சீவி கலரடித்து, குஞ்சம் மாட்டி
மணி மாலைகள் அசைய, ஜிகினாத் துணி போர்த்தி,
என் தர்மப் பத்தினி—என் முன்னே
தலை குனிந்து நின்ற பொழுதில்,
உறுதி கொண்டேன்- என் பெண்ணை
புதுமைப் பெண்ணாய் வளர்ப்பேனென்று!
அஃதே போல் அழகுறப் பிற்ந்தாள்
என் புதுமை மகள்.
ஆண்களைப் போல் டவுசர் மாட்டி,
அரை முடி வெட்டி, வெளிபூச்சு ஏதுமின்றி,
டென்னிஸ் க்ளாஸ் சேர்த்து,
பூரித்து போனேன் –நான் கண்ட கனவு
நனவாகுதென்று!--- ஆனால்
நான் பார்க்கவில்லை என்று எண்ணி
பக்கத்து வீட்டு அக்காவுடன், பூக்கோலத்தை
பூமியில் இடுவதென்ன?
அக்காவின் துப்பட்டாவை எடுத்து
தன் மீது போர்த்தி, தன்னழகைக்
கண்டு வியப்பதென்ன?
அவளின் நீண்டு விரிந்த கூந்தலில்
தன் முகம் நுழைத்து,’ஆ! எவ்வளவு
நீளமான முடி’ என்று
மகிழ்வதென்ன?
நான் பார்க்கிறேன் என்றறிந்து,
தன் மருண்ட விழியில் வெட்கப்
பார்வைப் பார்ப்பதென்ன?
அன்று உண்ர்ந்தேன்-ஒப்பனை
என்பது வெளிப்பூச்சு மட்டுமல்ல!!!
அது ஒரு பெண்ணின் அகமூச்சு!!!
திணிக்கப்பட்டால் கூட
விரும்பியே ஏற்கிறாள் பெண்*

ஆஹா......அருமையான கவிதை! ரொம்ப நன்றி உத்ரா....

"ஒப்பனை
என்பது வெளிப்பூச்சு மட்டுமல்ல!!!
அது ஒரு பெண்ணின் அகமூச்சு!!!"
ஒரு பெண்ணின் மனதை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்...அழகான வார்த்தைகள்!

உத்ரா,

//ஸ்பேஸ்பார் இல்லாமல் கூட, பேச்சில் அசத்திய( மைக் இல்லா மேடையில் பேச்சால் கட்டி போடுவது போல்)-- கல்ப்பு(கலக்கிட்டிங்க)//

உங்கள்..பாராட்டுக்கு..நன்றி..உண்மையை..சொல்லப்போனால்..என்னைவிட..
எம்மணி..தோழிகளும்,எதிரணி..தோழிகளுமே..அதிகமாக..கலக்கோ..
கலக்கென்று..கலக்கிவிட்டார்கள்....இவர்களை..பார்த்த..பயத்தில்..தான்
கீபோர்ட்..உடைந்துவிட்டது..என்றே..நினைக்கிறேன்..;)
உங்கள்..வாதங்கள்..அருமை..இந்த..
கவிதையும்..அருமையோ..அருமை...அர்த்தமுள்ள..வரிகள்....
தொடர்ந்து..இதே..போல..எல்லா..பட்டியிலும்..பின்னியெடுங்க..:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்