ஆனியன் கொத்து தோசை

தேதி: November 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.4 (5 votes)

 

தோசை மாவு-- 2 கப்
பெரிய வெங்காயம்-- 1
தக்காளி-- 1
உப்பு-- சிறிது
கடுகு-- 1தேக்கரண்டி
சீரகம்--- 1தேக்கரண்டி
பச்சை மிளகாய்-- 2
காரப்பொடி--- 1/2 தேக்கரண்டி
கரம் மஸாலாபொடி-- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை-- 1 கொத்து
எண்ணை--- 3 தேக்கரண்டி


 

1. முதலில் தோசைகளை வார்த்துக் கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணை விட்டு கடுகு, சீரகம் தாளித்து, அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், தேவையான உப்பு, காரப்பொடி, கரம் மஸாலா, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

3. அதிலேயே தோசைகளை சிறு துண்டங்களாக வெட்டிப் போட்டு மேலும் 5 நிமிடம் வதக்கி எடுத்து சட்டினியுடன் சாப்பிடவும். லன்ச் பாக்ஸுக்கு ஏற்ற உணவு இது.


எப்பொழுதும் தோசையைச் சாப்பிட்டு அலுத்துப்போன பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற லன்ச் பாக்ஸ் உணவு இது. தொட்டுக்கொள்ள சட்டினி, சாஸும், தயிர் பச்சடியும் ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

கலக்குறீங்க போங்க வித்தியாசமான குறிப்பு வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நன்றி என் முதல் ரசிகையே!!!

ரொம்ப நல்லா இருந்தது.