கொலவெறி அரட்டை

வாங்க இங்க வந்து கண்டீனீவ் பண்ணுங்க உங்களுக்கு யார் மேல கொலவெறி வரும் எதுக்காக வரும் வீட்லனாலும் சரி வெளியிலனாலும் சரி சமூக பிரச்சைய பத்தியும் பேசலாம் அரட்டையும் அடிக்கலாம் என்னவேணுணாலாம் பண்ணலாம் வாங்க தோழீஸ் கலக்கலாம் ( இது கோமதி சொன்ன தலைப்பு தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம் உங்க தலைப்ப நா யூஸ் பண்ணிட்டதால கோவம் வேண்டாம் மன்னிக்கவும் தோழியே)

ஹாய் தோழீஸ்...எப்படி இருக்கீங்க.... கலகல அரட்டைக்கு வரல்லாம்னு வந்தேன். உங்க கொலவெற்யை பார்த்து இங்க வ்ந்துட்டேன்.......

இப்போதைக்கு ஊழல் செய்யறவங்க, அதிகார துஷ்பிரயோகம் செய்யரவங்க, ட்ராஃபிக் ரூல்ஸை ஒழுங்கா ஃபாலோ பண்ணாதவங்க மேலதான் ரொம்ப கொலவெறியோட இருக்கேன்.
நீங்க....?

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

நான் தான் முதல்ல வந்தேன்
பப்ளிக் ல அசிங்க படுதுரவங்க மேல தான் எனக்கு ரொம்ப ரொம்ப கொடூர கொலைவெறியே by Elaya.G

அட கடவுளே, அறுசுவைக்கும் வந்துடுச்சா இந்த வார்த்தை....இந்த வார்த்தை மேல தான் நான் கொலைவெறி.... :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

என்னலாமோ வருது இந்த வார்த்தைக்கு ஏன் இப்படி சுகி நம்ம அறுசுவை ல வராததுன்னு ஏதும் இருக்க கூடாதுல அதான் by Elaya.G

ஹாய் ரேணு, இளையா, சுகி..... எப்படி இருக்கீங்க.....?

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

அந்த பாட்டு வரும் முன்வரை இந்த வார்த்தை சீண்ட ஆள் இல்ல. இப்போ யார பாத்தாலும், எங்க பாத்தாலும்...இதே வார்த்தை.முடியலடா சாமி......

என்னை பொறுத்த வரை, அந்த பாட்டு சொல்ற மாதிரி ஒன்னும் இல்ல, இபப்டி பேமஸ் பண்றக்கும் ஒன்னும் இல்ல.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நான் நலம் நீங்க நலமா ? by Elaya.G

எப்படி இருக்கீங்க?பேசி ரொம்ப நாள் ஆச்சு, நலமா? குட்டி நலமா? எக்ஸாம் க்கு எப்படி ரெடி ஹ?? மழை அங்க என்ன சொல்லுது?? இங்க இன்னும் வருவேன்னு சொல்லுது

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ம் ஆமா சுகி இப்போ வர எந்த பாட்டுலயும் ஒன்னும் கிடையாது எதோ இசை குரல் வளம் இதான் பிடிச்சதுக்கு காரணங்களா இருக்கு பிடிச்சவங்க கேட்டுட்டு போறாங்க நாம நமக்கு பிடிச்சத நல்லா கேப்போம் இதெல்லாமே creativity தானே by Elaya.G

ஹாய் இளையா, சுகி..... நானும் ஐஸும் நலம். சுகி....இங்க வெயில் அடிக்கிது. இரவு மழை வரும்னு நினைக்கிறேன். ரொம்ப நாளாச்சு அனைவரையும் சந்தித்து.... ரொம்ப சந்தோஷமா இருக்கு....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்