கொலவெறி அரட்டை

வாங்க இங்க வந்து கண்டீனீவ் பண்ணுங்க உங்களுக்கு யார் மேல கொலவெறி வரும் எதுக்காக வரும் வீட்லனாலும் சரி வெளியிலனாலும் சரி சமூக பிரச்சைய பத்தியும் பேசலாம் அரட்டையும் அடிக்கலாம் என்னவேணுணாலாம் பண்ணலாம் வாங்க தோழீஸ் கலக்கலாம் ( இது கோமதி சொன்ன தலைப்பு தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம் உங்க தலைப்ப நா யூஸ் பண்ணிட்டதால கோவம் வேண்டாம் மன்னிக்கவும் தோழியே)

ரேணு.... என்ன சொல்றீங்க நீங்க.... அந்த இழைதான் முடிஞ்சு போச்சுல.... இந்த புது இழைல தான அரட்டை அடிக்கனும்.... மறுபடியும் அங்கேயே கூபுடுறீங்களே.... ஹிஹிஹி.... பரவாயில்லை.... எனக்கு இங்கேய்ந்ந் ரோஸ்மில்க் கொடுத்திடுங்க......

வனிதா...எப்படி இருக்கீங்க...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மீனு ///எப்டி இருக்கிங்க.... அண்ணா பாப்பா எப்டி இருக்காங்க.../// எல்லாருக்கும் கோல்ட்.. பாப்பா ரொம்ப அழறா
இளையா ///இப்போ எங்க இருக்கீங்க சென்னை ல யா/// ஆமா இளையா சென்னைதா
ஜெஸி ///நேற்று பூண்டு சட்னி செய்தன் அவருக்கு ரொம்ப பிடிச்சுதுபா/// :-) நைஸ்
ரேணு ///குட்டிமாவோடா போட்டோ போடுங்கபா/// மொபைல் காணும் ரேணு.. ஆபிஸ்ல மிஸ் ஆகிடுச்சு :-(
கோமதி ///நாகா உங்க fரிஎன்ட் க்கு கிப்ட் செலக்ட் பண்ணிடீங்களா ?/// டின்னர் செட், மைக்ரோவேவ் செட் வாங்கிருக்கேன். அவளுக்கு லவ் மேரேஜ்... அவளால திடீர்னு எல்லா பொருளுக்கும் நேரம் செலவுபண்ண முடியாது அதுனாலதா இது வாங்கினேன்..

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் ஃப்ரண்ட்ஸ்....குட் ஈவினிங்....அரட்டைக்கு வாராது வந்த மாமணிகளே....வெல்கம்....நமக்கு கொலைவெறியெல்லாம் வேண்டாம்ப்பா...அந்த வார்த்தையே ஏதோ மாதிரி இருக்கு.....அன்பு வெறி மட்டுமே போதுமே....என்ன நான் சொல்வது சரியா?

கிப்ட் அருமையா செலக்ட் பண்ணி இருக்கீங்க நாகா அக்கா நாளைக்கு நான் ஊருக்கு கிளம்பிடுவேன் .என் தோழிக்கு இப்போ ஆறு மாசம் threading பண்ணலாமா அக்கா ? by Elaya.G

ஊர்ல பாலம் எல்லாம் ஆத்துல அடிச்சுட்டு போய்டுச்சாமே நேத்து நியூஸ்ல பார்த்தேன். சிங்கம்புணரி, மருதிப்பட்டி பக்கம் ரொம்ப மோசமா இருக்குபோல. threading பண்ணக்கூடாது.

KEEP SMILING ALWAYS :-)

ராதா ஆன்டி மாலை வணக்கம் நலமா ?நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு சரியே வாருங்கள் அன்பு வெறியோடு by Elaya.G

ஃப்ரண்ட்ஸ் எனக்கு ஆபிஸ் டைம் முடிஞ்சுட்டு நான் கேட்டத எல்லாரும் பதில் சொல்லுங்க நான் காலைல வந்து படிக்குறேன்.. பை பை

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆமா அக்கா ஊருக்கு போன் பண்ணப்போ சொன்னாங்க பாலத்தோட பலம்லாம் இப்போ தான் தெரியவரும் நமக்கு தான் தொல்லைய தருது இதெல்லாம் .

என் friend பிறந்த நாள் வருது .அதான் threading பண்ணலாமான்னு எண்ட கேட்டா நா உங்கள்ட கேட்டு சொல்லுறேன் சொன்னேன் அக்கா ரொம்ப நன்றி by Elaya.G

என்ட்ட கடவுள் கேட்டா என்னை சுத்தியிருக்கறவங்களும் எனக்கு தெரிஞ்சவங்களும் உலக மக்கள் எல்லாரும் நோய் நொடி இல்லாம பஞ்சம் பட்டினி இல்லாம இருக்கணும் தா கேட்பேன் இப்பவும் அத தான் கேக்கறேன் எப்பவும் அதையே தா கேப்பேன் ப்ரியா உங்களுக்கில்லாததா இந்தாங்க தோழீஸ் எடுத்துக்கோங்க ஸ்பெஷல் ரோஸ்மில்க் வாழைகாய் மிளகாய் பஜ்ஜி வெங்காய பக்கோடா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணுகா எவ்வளோ நல்லவங்களா இருக்காங்கப்பா :-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்