கொலவெறி அரட்டை

வாங்க இங்க வந்து கண்டீனீவ் பண்ணுங்க உங்களுக்கு யார் மேல கொலவெறி வரும் எதுக்காக வரும் வீட்லனாலும் சரி வெளியிலனாலும் சரி சமூக பிரச்சைய பத்தியும் பேசலாம் அரட்டையும் அடிக்கலாம் என்னவேணுணாலாம் பண்ணலாம் வாங்க தோழீஸ் கலக்கலாம் ( இது கோமதி சொன்ன தலைப்பு தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம் உங்க தலைப்ப நா யூஸ் பண்ணிட்டதால கோவம் வேண்டாம் மன்னிக்கவும் தோழியே)

நான் வனியோட பாயின்ட் ஒவ்வொன்னையும் உண்மைன்னு தான் சொல்வேன்.. ரொம்ப கரெக்ட்....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் மீனு தேவா நாகா வர்தினி ரேணு மற்றும் பல தோழிகள் நானும் அரட்டைக்கு வரலாமா? என்னை அப்பொழுதுள்ள யாருக்கும் தெரியாது நான் பழைய உறுப்பினர் தான்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நன்றி மீனு... எங்க அறுசுவையே சண்டைக்கு வர போகுதோன்னு நினைச்சேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இதுல சண்டை போடுறதுக்கு.. ஒண்ணுமே இல்ல.. நானும் அனுபவிச்சுருக்கேன்.. நீங்க சொன்னத.. அதான் அக்சப்ட் பண்ணி சப்போர்ட் பண்றேன். ரேவதி வாங்க இதுல என்னங்க கேள்வி.. வாங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

///ஒருவரது சூழ்நிலை தள்ளி வைக்க காரணம் ஏதும் புரியாமல் நாம் “காட்டுமிராண்டி” என்பது தப்பில்லையா?///
உடல்நிலை சரியில்லாமலோ, புரிதல் இல்லாமலோ குழந்தை பெறுவதை தள்ளிபோடுற கணவன், மனைவிய நான் தப்பு சொல்லல. யாரும் சொல்லவும் மாட்டாங்க.முழுதகுதி இருந்தும், காதல் திருமணமோ அல்லது பெற்றோர் நிச்சயித்த திருமணமோ எதுவா இருந்தாலும் 2, 3 வருஷத்துக்கு குழந்தை வேண்டாம்னு முடிவு பண்ற "காட்டுமிராண்டி"களைதான் சொன்னேன். இவ்வளவு ஏன் குழந்தை பெற்ற சில பெண்களும் குழந்தை இம்சைனுதா சொல்றாங்க. அந்த காட்டுமிரண்டிகளும் இதில் அடக்க்ம்.

இதுமாதிரி ஆட்களை நா பார்த்திருக்கேன். ரேணுவுக்கும் அப்படி அனுபவம் இருந்ததால சொன்னாங்க

KEEP SMILING ALWAYS :-)

எனக்கு தெரிந்து குழந்தை தள்ளிப் போடுபவரை கூட பொறுத்துக் கொள்ளலாம். பிறந்த குழந்தையை கொள்பவரையும். வயிற்றில் இருக்கும் குழந்தை அழிப்பவர்களும் தான் கொடுஞ்செயல்வாதிகள் இவர்களை தான் கொல்ல வேண்டும். சில சமயம் கடவுளிடம் கூட கோபம் வரும். எத்தனையோ பேர் குழந்தையில்லாமல் கஷ்டப்படுறாங்க அவங்களுக்கெல்லாம் கொடுக்காமல் குழந்தை அழிப்பவர்களுக்கு குழந்தையை நல்ல முறையில் வளர்க்க தெரியாதவர்களுக்கு குழந்தை வரன் கொடுப்பது தான் அதை விட கொடுமையான விஷயம்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் மீனு எப்படி இருக்கீங்க? உங்களோடு நான் இது தான் முதன் முறையா பேசுகின்றேன் என்று நினைக்கிறேன். உங்களை பற்றி சொல்லுங்கள்? நீங்கள் அறுசுவையில் எத்தனை நாட்களாக உள்ளீர்கள்?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

என் கல்லூரி தோழியின் பள்ளிப்பருவ தோழி மிகவும் கருப்பாக இருக்கிறாள் என்ற காரணத்திற்காக அவளை அவள் அம்மா ஏற்றுக்கொள்ளவில்லையாம். வேறு ஒருவர் எடுத்து வளர்த்திருக்கிறார். அவர்கள் லோயர் மிடில்கிளாஸ் குடும்பமானாலும் அந்த குழந்தையை மிக அருமையாக வளர்த்திருக்கிறார்கள்.

அந்த பெண் என் தோழியிடம் பெற்ற அம்மா இன்னும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மிகவும் வருத்தப்படுவாளாம். ஆனால் அம்மா(வளர்த்த அம்மா) என்னை மிகவும் அன்பாக நடத்துகிறார். எனக்கு இரண்டு அம்மாவுடனும் ஒரே வீட்டில் வாழ ஆசை என்று சொல்லியிருக்கிறாள்.

என் தோழியும், அவளது தந்தையும் அவர்கள் குடும்ப பெண்ணாகவே பார்ப்பார்கள். மற்றவர் குழந்தையை தான் பெற்ற குழந்தையாக நினைக்கும் தெய்வப்பிறவிகளும் உண்டு குழந்தையை பிடிக்கவில்லை என்று கூறும் இதுபோன்றவர்களும் உண்டு.

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் மீனு நலமா ? வனி நீங்க இப்ப எங்க இருக்கீங்க , ரேவதி நலமா?

நீங்கள் சொல்வது உண்மை தான் நாகா. ஒவ்வொருதர் வாழ்வில் இன்பமும் உண்டு துன்பமும் உண்டு. சில பேரை பார்க்கும் போது கடவுள் இருக்கிறாரா என்கின்ற கேள்வி அடிக்கடி என் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

கொலைவெறி யார் மீது எனக்கு வரும் என்றால் ஒன்றும் அறியாத சின்ன சிறுமிகளையும் சிறுவர்களையும் ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்யும் அந்த கொடும் பாவிகளைதான் கொல்ல வேண்டும் என்று கோபம் வரும். சில மாதங்களுக்கு முன்பு நடந்த இரண்டு விஷயங்கள் என் மனதை ரொம்ப கலங்க வைத்தது. ஒன்று பூவரசி என்பவள் ஒரு அழகான ஆண்குழந்தை கொலை செய்தது. இன்னொன்னு கோவை என்று நினைக்கிறேன். அந்த ஊரில் இரண்டு குழந்தைகள் அக்கா தம்பியை கொலை செய்த ஒரு கொடுரன். இவர்களை தான் அடித்தே கொல்ல வேண்டும் என்கிற அளவிற்கு கோவம் வந்தது.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்