கொலவெறி அரட்டை

வாங்க இங்க வந்து கண்டீனீவ் பண்ணுங்க உங்களுக்கு யார் மேல கொலவெறி வரும் எதுக்காக வரும் வீட்லனாலும் சரி வெளியிலனாலும் சரி சமூக பிரச்சைய பத்தியும் பேசலாம் அரட்டையும் அடிக்கலாம் என்னவேணுணாலாம் பண்ணலாம் வாங்க தோழீஸ் கலக்கலாம் ( இது கோமதி சொன்ன தலைப்பு தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம் உங்க தலைப்ப நா யூஸ் பண்ணிட்டதால கோவம் வேண்டாம் மன்னிக்கவும் தோழியே)

வனி நான் என் லைப் ல நடந்தத சொல்றேன்.. முதலாம் குட்டி தான் முக்கியம் அப்டின்னு பெரியவங்க ஆசை படுறாங்க அவங்க ஆசைய நிறைவேத்தணும் அப்டின்னு நினைச்சோம்.. ஆனா இப்ப குழந்தைக்கு ட்ரை பண்றோம். போக போக எங்களுக்குள்ள ஒரு பக்குவம் வருது.. அவங்க கவலை பட்டா நான் இருக்கேன்ன்னு சொல்றேன். நான் தான் ரொம்ப கவலை படுவேன் அப்ப அவங்க கேக்குறாங்க நான் உன் குழந்தை இல்லயா? குழந்தை இல்ல இல்ல சொல்ற அப்டி கேக்குறாங்க.. ஒரு நிமிஷம்... எல்லாமே அப்டியே நின்னுட்ட மாதிரி இருக்கும்.. இந்த புரிந்து கொள்ளுதல் கண்டிப்பா இந்த 2 வருஷத்துல வர்றதுதான்.. வனி... வேற ஒண்ணுமே கிடையாது.. இப்ப அவங்க அம்மா சொந்தம் கேட்டா.. விடுங்க வர்றப்ப வரட்டும்னு அவங்களே சொல்றாங்க.. ஏன்னா என் வலி எல்லாம் புரிஞ்சுக்குறாங்க முன்ன விட..:) மீனுமா நீ கவலை படாத நமக்கு குழந்தை இல்லாட்டினாலும் பரவால்ல நான் உன்ன இழக்க மாட்டேன்.. தூக்கிப்போடு எல்லாத்தையும் உனக்கும் எல்லாம் நான் வாங்கித்தரேன்... நாம நல்லா செட்டில் ஆகிக்கலாம். அதுக்காக கூட கடவுள் தள்ளலாம்.. பீ ஹேப்பி அப்டினு சொல்றாங்க எல்லாம் அந்த இடைவெளினால தான்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

என்னை பற்றியும் சொல்ல அதிகம் இல்லை. நான் சென்னையில் இருக்கிறேன். நான் என்னவர் மட்டும் தனியா இருக்கோம். வேலை செய்றேன்ப்பா. நல்லா போய்ட்டு இருக்கு வாழ்க்கை.

நாகா எதையோ கேட்கனும்ன்னு சொன்னீங்க என்ன

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நன்றி நாகா...ஏமாத்த முடியாது....உன் வீடு தேடி வந்து வாங்க வந்துடுவேன்!!!!!!

ரேவதி....உங்க பேரை "ரேவுதய்"னு ஏன் போடறீங்க? ஏதாவது ந்யூமராலஜியா?!

வனிதா....எப்போ மாலத்தீவு கிளம்பறீங்க? பேக்கிங் எல்லாம் ஆச்சா? போயிட்டு வந்து சொல்லுங்க...நான் ரொம்ப நாளா போகணும்னு சொல்லிட்டு இருக்கேன்....

இது தான் வாழ்க்கை... இது தான் கடைசி வரை நிலையானது. இது போதும், இந்த ஜென்மம் எடுத்த பலன் கிடைக்க. இந்த அன்பே உங்களுக்கு விரைவில் குழந்தையை கொடுக்கும். கவலை இல்லாம இருங்க.

சரி... எனக்கு ட்ரெயின் நேரம் ஆச்சு... நான் கிளம்பறேன். டேக் கேர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராதா இந்த பெயர் நியூமராலஜி இல்லை. இது என்னுடைய பெயரிலுள்ள ரேவதி என்கிற வார்த்தையில் ரே என்கின்ற முதல் எழுத்தும் என்னவர் எழுத்திலுள்ள உதய் என்கிற எழுத்தில் கடைசி எழுத்தும் சேர்த்து ரேவுதய்ன்னு வச்சியிருக்கேன். வேறு எந்த காரணமும் இல்லை. உங்களை நானும் ஆன்டி என்று கூப்பிடலாமா? பேரன் பேத்தி என்றால் நிச்சயம் நீங்கள் எங்கள் அம்மா வயதில் இருப்பீங்க அதனால் கேட்கிறேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நீ சொல்வது ரொம்ப சரி மீனு....எனக்கு இரண்டு வருடம் கழித்துதான் குழந்தை பிறந்தது....அந்த நாளில் நாங்கள் கவலைப் பட்டதில்லை இன்னும் குழந்தை வரலயே என்று....அந்த ரெண்டு வருஷ சந்தோஷம் இப்போ கிடைக்குமா? நெவர்....இன்னிக்கு பேரன், பேத்தியெல்லாம் எடுத்துட்டாலும் அந்த நாள் ஞாபகங்கள் மறக்கக் கூடியதா? நேற்று கூட அதைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம்பா...
அதனால கவலைப் படாதே....கிடைத்த நாட்களை எதையோ நினைத்து ஏங்கி வேஸ்ட் பண்ணாத...சந்தோஷமா இரு...

இப்போ புரிஞ்சுது ரேவதி...நீங்க சென்னையில எந்த இடத்தில இருக்கீங்க?

நான் சென்னையில் கோட்டூர்புரத்தில் இருக்கின்றேன். நீங்க சென்னையா எந்த ஊர்?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஓகே வனி பார்த்து போய்டு சீக்கிரம் வந்து அறுசுவைகும் வாங்க... நல்ல படியா போய்டு வாங்க பை..
அப்டியா ஆன்ட்டி.. அங்கிள் கூட மறக்க முடியாத நிகழ்வுகள்ல...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

என்னை தாராளமா ஆன்ட்டினு கூப்பிடலாம்.....நான் கீழ்ப்பாக்கம்....எங்கே வேலை செய்கிறாய்?

மேலும் சில பதிவுகள்