குழந்தைக்கு வாழைப்பழமும்,தயிரும் .

என் 14 மாத குழந்தைக்கு தயிர் மதியம் சாதத்துடன் கொடுப்பேன்.வாழைப்பழம் சாயங்காலம் 5 மணிக்கு கொடுப்பேன்.சில நேரம் yoplait கொடுப்பேன். இப்போது இங்கு குளிர் அதிகமாக இருப்பதால் தினமும் அவளுக்கு இதை தரலாமா?.தயிரை மைக்ரோவேவில் கொஞ்சமாக வார்ம் செய்து தரலாமா?அவளுக்கு 7 மாதத்தில் வீசிங் வந்தது. வாழைப்பழமும் ,தயிரும் தினமும் கொடுத்தால் சளி பிடிக்குமா?

அனுபவசாலிகள் சொல்லி உதவுங்களேன் ..

Kalai

இங்குள்ள மருத்துவர்கள் வாழப்பழத்துக்கும், தயிருக்கும், சலிக்கும் எந்த விதமான சம்மந்தம் இல்லை என்று சொல்லுவார்கள். நான் என் பிள்ளைகளுக்கு அதனால் எப்போ வேண்டுமானாலும் யோகர்ட் வாழைப்பழம் தருவேன்...."" இதுவரையில் எதுவும் ஆனதில்லை. ஆனாலும் எல்லா பிள்ளைகளும் ஒன்று போல கிடையாது அதனால் உங்களின் குழந்தைக்கு ஒத்துக்கொள்கிறதா என்று பார்த்து கொடுக்கவும். யோகர்ட்டை எடுத்து வெளியில் வைத்து கொடுக்கலாம். சூடு படுத்தி குடுக்க வேண்டாம்.

அனுபவசாலி எல்லாம் இல்லை.....எனக்கு தெரிந்ததை நான் முயற்சி செய்ததை சொன்னேன்.....உங்களுக்கு பொருந்தினால் எடுத்துக் கொள்ளுங்கள்.

அனுபவசாலிகள் வந்து பதில் சொல்லுவார்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

///தயிரை மைக்ரோவேவில் கொஞ்சமாக வார்ம் செய்து தரலாமா?/// தயிர், மோர் போன்ற பொருளுக்கும் சளிக்கும் சம்பந்தம் இல்லை. குளிர்ந்த தயிர், மோர்தான் சேர்க்க கூடாது. தயிரை சாப்பிடுவதற்கு 1 மணிநேரம் முன்பே வெளியில் வைத்துவிடுங்கள். அப்படியும் குளிர்ந்தநிலையில் இருந்தால் சிறிது சுடுதண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அல்லது குக்கர் வைத்தால் அதன் மேல் 1 நிமிடம் வைத்து எடுங்கள்(சுட வேண்டாம், குளிர் குறைந்திருந்தால் போதும்).

///வாழைப்பழமும் ,தயிரும் தினமும் கொடுத்தால் சளி பிடிக்குமா?/// வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் இருக்கிறது. பச்சை வாழைப்பழம் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. அது பெரியவர்களுக்கே சளியை கொண்டுவந்து சேர்க்கும். பூவன், கற்பூரவள்ளி பழங்கள் நல்லது. விதவிதமான பழங்களை வாங்கமுடியாத காலங்களில் பூவன் மிகச்சிறந்த பழம். அனைத்து சத்துக்களும் கொண்டது. வாழையோ அல்லது மற்ற எந்த பழமாக இருந்தாலும் காலை 11 மணி அல்லது அதற்குள் கொடுப்பது சிறந்தது. அங்கு குளிராக இருப்பதாக சொல்கிறீர்கள் அதனால் டாக்டரிடம் கேளுங்கள். என் குழந்தைக்கு குளிரில் வாழை ஒத்துக்காது.

தயிர் கண்டிப்பாக கொடுக்கலாம்(கொடுக்கவேண்டும்) ஆனால் முன் சொன்னதுபோல குளிர்ச்சியாக இல்லாமல் கொடுங்கள். தயிர் அனைவருக்கும் மிக அவசியமான ஒன்று. உடலில் உள்ள டாக்ஸிக்கை வெளியேற்ற ப்ரோபயாடிக் மிகவும் அவசியம். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால் கண்டிப்பாக தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சளி அதிகம் இருப்பவர்களுக்கு இருமல் வரும்போது சளி வெளியே வராமல் தொண்டையை அடைத்து நிற்கும். அப்படி நிற்கும் சளி குடலில் தங்கிவிடும். அதை வெளியேற்றும் சக்தி தயிரில் உள்ள ப்ரோபயாட்டிக்கிற்கு உண்டு. ஆதலால் தயிரை தவிர்க்காதீர்கள்.

KEEP SMILING ALWAYS :-)

சமீபத்தில் மருத்துவர் சொன்னது.தயிர் கொடுப்பதை தவிர்த்து மோர் கொடுக்கலாம்..தயிர் உடல் சூடை அதிகரிக்குமாம்;-0

உண்மைதான் தளிகா அனைவருமே தயிரை தவிர்த்து மோர்தான் எடுத்துக்கனும். சமையலில்கூட தயிர் சேர்க்கிறாங்க. தயிர்பற்றி பயங்கரமான உண்மை சொல்லவா கெட்டிதயிர் சாப்பிட்டால் வாதம் வரும். அதனால் அனைவரும் தண்ணீர் கலந்துதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் குழந்தைக்கு சுடுதண்ணீர் சேர்த்து கொடுக்க சொல்லி இருந்தேன்.

KEEP SMILING ALWAYS :-)

நீரை காய்ச்சு
மோரை பெருக்கு
நெய்யை உருக்கு னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க .
எக்காரணத்தை கொண்டும் குழந்தைக்கு தயிர் கொடுக்காதீங்க,வாழைப்பழம் கூட ரஸ்தாளி அல்லது கற்பூர வாழை கொடுக்கலாம்
பூவன் பழம் வேண்டாம்
அதை மந்தம் பழம் என்பார்கள்.

லாவண்யா நீங்க சொல்றது சரிதான்,இங்குள்ள டாக்டர்ஸ் இப்படிதான் சொல்றாங்க.அதான் நானும் இவ்வளவுநாள் கொடுத்தேன்.நேற்று ஒரு forum la படிச்சேன் பழம் தினமும் குழந்தைக்கு கொடுக்க கூடாதுன்னு அதான் குழப்பம்.அவளுக்கு ஒத்துகுதுதான்,ஆனால் நேத்து திடீர்னு கொஞ்சமா சளி பிடிச்சிருச்சு,இதையும் படிச்சேனா அதான் குழம்பிடேன் .
///அனுபவசாலி எல்லாம் இல்லை///2 குழந்தைய வளர்க்குற நீங்க அனுபவசாலி இல்லையா..

Kalai

நாகாராம் நன்றி...தயிரை வெளியில் எடுத்துவைத்து தான் கொடுக்கிறேன்,கெட்டியாக தருவதில்லை..நல்ல தகவல்கள் பகிர்ந்த்தமைக்கும் நன்றி.

Kalai

உதிரா நன்றி.
//ரஸ்தாளி அல்லது கற்பூர வாழை கொடுக்கலாம்
பூவன் பழம் வேண்டாம்//
இங்கு கிடைப்பது எந்த வகை பழம் என்று தெரியவில்லை.அதனால் கிடைப்பதை கொடுக்கிறேன்

Kalai

நான் சிகாகோவில் இருக்கிறேன். என்னோட பையனுக்கு 1 வயசு ஆகுது. அவனுக்கு கொஞ்சம் சளி பிடிச்சிருக்கு. இங்கே கிடைக்கும் வாழை பழம் நம்ம ஊர் பச்சை பழம் மாதிரி மஞ்சளா இருக்கு. என் மாமியார் டெய்லி காலைல அவனுக்கு வாழை பழம் குடுக்குறாங்க. இதை குடுக்கலாமா இல்லையானு தெரியல. அவங்களையும் ஒண்ணும் சொல்ல முடியல. என்ன பண்ணலாம்?

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்