பிரண்டை எள் துவையல்

தேதி: December 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சுத்தம் செய்த பிரண்டை - 1 கப்
வற்றல் மிளகாய் - 5
உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
கருப்பு எள் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 ஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணை - 2 ஸ்பூன்
உப்பு


 

வாணலியில் எண்ணெய்விட்டு வற்றல் மிளகாய், எள், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொள்ளவும்
சுத்தம் செய்த பிரண்டையை நிறம் மாறும் வரை வதக்கவும்
வதக்கிய, வறுத்த பொருட்கள் ஆறியதும் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.
சுடான சாததில் நல்லெண்ணெய், பிரண்டை எள் துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிடவும்.


இட்லி, தோசை, தயிர் சாதத்திற்கும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்