மைக்ரேன் தலைவலி கு என்ன பன்னலாம்?

எனக்கு வயது 35. சில வருடங்கலாக தலைவலி, டென்சன் க்கு மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இப்போ சில நாட்களாக அதிக தலைவலி , தலை சுற்றல் மற்றும் வாந்தி. டாக்டர் மைக்ரேன் தலைவலி நு சொன்னாரு. இனிமே கடைசி வரை மாத்திரை சாப்ப்டுகிட்டே இருக்கனுமா? மைக்ரேன் தலைவலி கு என்ன பன்னலாம்? இதனால் என்ன ஆகும் ? எனக்கு பத்து நாளைக்கு முன்னால் மூக்கில் ரத்தம் வந்தது.

இந்த மைக்ரேன் தலைவலிக்கு ஒற்றை பூண்டு தினமும் காலையில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று
கேள்வி பட்டுள்ளேன்..... நீங்கள் முயற்சித்து பாருங்கள்.... மற்றபடி இதை பற்றி எதுவும் தெரியவில்லை... தெரிந்தவர்கள் வந்து சொல்வார்கள்..... கண்டிப்பாக குணமாகி விடும்... உங்களுக்காக பிராத்திக்கிறேன்..... பயப்பட வேண்டாம்....

http://www.arusuvai.com/tamil/node/20351
http://www.arusuvai.com/tamil/node/13167

KEEP SMILING ALWAYS :-)

ப்ரியா அக்கா என்னடா அக்கானு கூப்பரனு பாக்குரிங்லா எனக்கு 24தான் ஆகுது அதுனால தான் பயபடாதிங்க ஒன்னும் ஆகது நீங்க யார் கிட்ட தல வலிக்கு பக்குரிங்க. என்னகும் இது பத்தி ஏதும் தெரியது இர்ந்தாலும் நீங்க ரொம்ப பீல் பன்னரது கஷ்டமா இருதது அத்தான் அனுப்பனன். நா உங்கலுக்காக கடவுல் கிட்ட வென்டிக்கிரன் குணம் ஆக. தோழிகள் யாரவது இந்த தலவலி பத்தி தேரிந்து இருந்த கொஞ்ம் சொல்லுங்க பா,

ப்ரியா.. மைக்ரேன் தலைவலிக்கு முழுமையான தீர்வு எதுவும் இல்லை... தலை வலிக்கும் போது உங்க டாக்டர் கொடுத்திருக்கும் மாத்திரைகளை போட்டுகோங்க... எனக்கும் மைக்ரேன் இருக்கு... உங்களுக்கே தெரியும் எந்த சூழ்நிலைல உங்களுக்கு வலி வருதுன்னு.. உதாரணத்துக்கு எனக்கு வெயில்ல அதிக நேரம் போனா, சாப்பாடு சரியான நேரத்துக்கு சாப்பிடலேன்னா, திடீர்னு டென்ஷன் ஆகற மாதிரி எதும் நடந்தா வலி வந்துரும்... ஸோ நான் முடிஞ்சவரைக்கும் இதெல்லாம் அவாய்ட் பண்ணிருவேன்...
இது மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சிம்டம்ஸ் இருக்கும்... என் பிரெண்ட் ஒருத்திக்கு ரொம்ப சத்தமா பாட்டு கேட்ட கூட மைக்ரேன் வந்துடும்... அவளுக்கும் வலி வந்தா வாமிட் எல்லாம் இருக்கும்... நீங்க முடிஞ்சவரைக்கும் அந்த மாதிரி சூழ்நிலை எல்லாம் அவாய்ட் பண்ணிருங்க.. அதே போல முடிஞ்சவரைக்கும் மாத்திரை போடாம இருக்க ட்ரை பண்ணுங்க... லைட்டா வரும்போதே மாத்திரை போட்டு பழகிட்டீங்கன்னா அப்புறம் அதுவே பழக்கமாயிடும்... கொஞ்சம் கஷ்டம் தான்... நானும் கூட வேலைக்கு போகும் போதெல்லாம் இந்த தலைவலில ரொம்ப கஷ்டப்பட்டேன்... இப்போ வீட்ல இருக்கறதால அதிகம் வர்றதில்ல...
மூக்கில் ரத்தம் வந்துச்சு-னு சொல்றீங்க கண்டிப்பா டாக்டர் கிட்ட காரணம் கேளுங்க... அசால்டா இருக்காதீங்க...

வித்யா பிரவீன்குமார்... :)

ஹாய் ப்ரியா
மைக்ரைன்க்கு ட்ரிட்மென்ட் எதுவும் இல்லை.வலிக்கும் போது மாத்திரை தான் போடனும்.எனக்கும் 6 வருடமாக மைக்ரைன் இருக்கு.அது வரும் போது டாக்டர் குடுத்த மாத்திரை போடுங்க.டென்சன் ஆகாம பாத்துக்கங்க

ஹாய் ப்ரியா
மைக்ரைன்க்கு ட்ரிட்மென்ட் எதுவும் இல்லை.வலிக்கும் போது மாத்திரை தான் போடனும்.எனக்கும் 6 வருடமாக மைக்ரைன் இருக்கு.அது வரும் போது டாக்டர் குடுத்த மாத்திரை போடுங்க.டென்சன் ஆகாம பாத்துக்கங்க

ஹாய் பிரியா எனக்கும் மைக்ரேன் தலைவலி உண்டு.வாரத்தில் 4 அல்லது5 நாள் வரும்.நாள் முழுவதும் கஷ்டமாக இருக்கும். கண்ணை திறக்க கூட முடியாது. 2 வருடத்திற்கு முன் ஒருeye specialist FLUNERIN - 10mg tablet once at night before dinner (3 months) சாப்பிட சொன்னார்.இப்பொழுது ரொம்ப பரவாயில்லை.எப்போதாவது ரொம்ப rareஆகத்தான் தலைவலி வருது. வந்தாலும் சிறிது rest எடுத்தால் சரிஆகிவிடுகிறது. ஆனால் மூக்கில் ரத்தம் வருவது பற்றி தெரியவில்லை.consult your doctor.

எனக்காக பதில் குடுத்த தோழிகள் Deepa Kumar, Naga ram, Jansi, Vidhya, Harsi, Priya vijayan எல்லாருக்கும் நன்றி. டாக்டர் என்னை Auranil 10mg(morning). Indral 10mg(night) எடுக்க சொல்லி இருக்காரு. மூக்கில் ரத்தம் வந்தது கண்டு பிடிக்க முடியலை நு சொல்ராங்க. ENT side normal. உங்க பதில்களை பார்த்த பிறகுதான் மனசு கு நிறைய ஆறுதலாக உள்ளது.

தோழிகளே இந்த ஒற்றைத்தலைவலி என்னையும் படாதபாடு படுத்துகிறது, நீங்கள் சொல்வது போல் டைமுக்கு சாப்பிடாவிட்டால் எதற்க்காகவாவது காத்திருத்தல் வெயில் சனக்கூட்டம் சத்தம் இப்படியெல்லா நிலைகளிலும் ஏற்படுகிறது, எந்த மாத்திரையும் பாவிப்பதில்லை ஏற்படும் நேரத்தில் பெரசிட்டமோல் எடுப்பேன் இஞ்சியை தட்டி நெற்றியில் மெல்லிய துணித்துண்டொன்றை போட்டு அத்ன்மேல் பற்று போடுவேன். அப்படியே சிறிது தூங்கி எழுந்தால் சரியாகிவிடும்,
இத்ற்கு மேலும் ஏதவது கைமருந்துகல் தெரிந்தால் சொல்லவும். உச்சந்தலையில் அதிக வலி ஏற்படுகின்றது அப்போது தலையில் எலுமிச்சைப்பழம் தேய்ப்பேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உங்க ப்ரச்சினைதான் எனக்கும். தலைவலிக்கும் போது நானும் அதே மாத்திரை போட்டுக்குறேன். இந்த லிங்குல http://www.arusuvai.com/tamil/node/15137 சில டிப்ஸ் இருக்கு பாருங்க.

மேலும் சில பதிவுகள்