தேதி: December 1, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முட்டைக்கோஸ் - 2கப் (சிறியதாக நறுக்கியது)
பட்டாணி - கால் கப்
வெங்காயம் - ஒன்று (சிறியதாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2 (சிறியதாக நறுக்கியது)
இஞ்சி - ஒரு தேக்கரண்டி (சிறியதாக நறுக்கியது)
பொட்டுக்கடலை மாவு - அரை கப்
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

வாணலியில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பட்டாணி சேர்த்து மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்தது சிறிது நேரம் வதக்கவும்.

கடைசியாக முட்டைக்கோஸை சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

வாணலியை மூடி ஆவியில் 10 நிமிடங்கள் கோஸை வேக விடவும். தணலை குறைத்து கொள்ளவும்.

பொட்டுக்கடலை மாவை சேர்த்து கிளறவும். குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்து இறக்கவும்

கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கலாம். சுவையான முட்டைக்கோஸ் பொடிமாஸ் ரெடி.

Comments
ஆனந்தி
ஆனந்தி இது உங்களுடைய முதல் குறிப்பா இல்லை நிறைய குறிப்பு அனுப்பியிருக்கீங்களான்னு தெரியவில்லை. முதன் முறையா பார்க்கிறேன் உங்க பெயரை. கோஸ் பொடிமாஸ் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
கோஸ் பொடிமாஸ்
பார்க்கவே கலர்ஃபுல்லா அழகா இருக்கு... வாழ்த்துக்கள் :-)
KEEP SMILING ALWAYS :-)
ஆனந்தி
தொடர்ந்து குறிப்பு அனுப்பிட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள். கோஸ்,பட்டாணி சேர்த்து வித்தியாசமான பொடிமாஸ் நல்லா இருக்கு.
ஆனந்தி
ஆனந்தி பொடிமாஸ் பார்க்கவே சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள். மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி
ரேவதி, இதற்கு முன் படங்களுடன் இரண்டும் படங்கள் இல்லாமல் இரண்டு குறிப்புக்களும் இருக்கிறது.உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ரேவதி.
நாகா,வினோஜா,நசீம் தொடர்ந்து குறிப்பு தர உற்சகப்படுத்துகிறீர்கள்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
ஆனந்தி
ஆனந்தி,
கோஸ் பொடிமாஸ் கலர்ஃபுல்லா அழகா இருக்கு! கடைசியில் பொட்டுக்கடலை மாவு சேர்ப்பது புதுசா இருக்கு. வீட்டில் முட்டைக்கோஸ்கூட ரெடியா இருக்கு. உடனே செய்து பார்த்திடறேன். வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுஸ்ரீ
ஆனந்தி
கோஸ் பொடிமாஸ் கலர்ஃபுல்லா அழகா இருக்கு! வாழ்த்துக்கள்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
இது ஒரு புதுமையான பொடிமாஸ்
மிகவும் நன்றாகவுள்ளது படம் அருமை கோசில் செய்தது புதிதாகவுள்ளது
!!! வாழ்த்துக்கள் !!!
ஆனந்தி
ஆனந்தி... கோசில் பொடிமாஸ் என்பது ரொம்ப புதுசா இருக்கு. படங்களும் அழகு. அவசியம் செய்து பார்க்கிறேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஆனந்தி
ஆனந்தி உங்க கோஸ் பொடிமாஸ் செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்வது வித்தியாசமாக இருந்தது.
வாழ்த்துக்கள்.....
அன்புடன்
மகேஸ்வரி