என் 7 வயது பெண் குழந்தைக்கு

என் 7 வயது பெண் குழந்தைக்கு கை, கால் மற்றும் முதுகில் நிறைய முடி இருக்கிறது. என்ன செய்யலாம்? அவள் நல்லா கலரா இருப்பா, அதனால் முடி அப்படியே தெரிகிறது.

பதில் சொல்ல யாருமே இல்லயா? அந்த காலத்தில் பாட்டிகள் எல்லாம் என்னபா யூஸ் பன்னாங்க? அவங்களுக்கு மட்டும் எப்படிப்பா முடி இல்லாமலிருக்கு.
இது குறித்து வேறு எதாவது இழைகள் இருகிறதா? PLEASE சொல்லுங்கப்பா?

மஞ்சள் தேய்த்து குளிப்பாட்டி விடுங்கள் . முடி வளர்வது நின்று விடும். உடம்பு கலர் மஞ்சளாக தெரியுமே என்ற கவலை இருந்தால் முதலில் மஞ்சள் தேய்த்து விட்டு பின் சோப்பு போட்டு குளித்தால் கலர் தெரியாது

குப்பை மேனி இலையும், கஸ்தூரி மஞ்சளும் சேர்த்து கூடவே பச்சைபயிறு இல்லைனா கடலைமாவு போட்டு தண்ணீர் சேர்த்து குழைத்து தடவி கொஞ்சம் வரண்டதும் நல்லா வட்டவட்டமா தேய்ச்சு கழுவிவிடுங்க. முடி பலவீனமாயி உதிர்ந்து போகும். தொடர்ந்து உபயோகப்படுத்துங்க.

Don't Worry Be Happy.

Thank You sudhavenkat & jayalakshmi. thanks for your comments. jayalakshmi ajman எங்கேப்பா இருக்கு? குப்பைமேனி இலையை அப்படியே அரைத்து போடனுமா, இல்ல காய வைத்து பொடி செய்து போடலாமா?

மேலும் சில பதிவுகள்