அறுசுவை தோழிகளே, டிப்ஸ் சொல்லுங்க!!

அறுசுவை தோழிகளே, டிப்ஸ் சொல்லுங்க!!
மாமியாரையும், நாத்தனாரையும் , ஓரகத்தியையும் புத்திசாலித்தனமாய் ஹேண்டில் பண்ண , தோழிகளே டிப்ஸ் சொல்லுங்களேன்.

ஹாய்..நீங்களும் நிறைய இடத்துல கேக்குறீங்க..யாரும் பதில் சொல்ல மடேங்குறாங்க...:-)
நீங்க ஒரு tips எடுத்து விடுங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

http://www.arusuvai.com/tamil/node/21159

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹலோ கோமதி, நீங்க ரொம்ப ப்ரிலியண்ட் போல. பின்ன என்னப்பா ஐடியா கேட்டா கலாய்க்கிறீங்க.

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

ஹாய் சண்முகப்ரியா...,உங்க பதிவை இப்பதான் பார்க்கின்றேன்.இதை நீங்க சீரியஸா கேட்குறீங்களா..?இல்லை எப்படின்னு தெரியல....
இருந்தாலும் இப்போதைக்கு ஒரு சில டிப்ஸ் சொல்லிக்கிறேன்....

* முதலில் நமக்கு புரிந்துக் கொள்ளல் என்பது மிகவும் அவசியம்.அதாவது மாமியார்,நாத்தினார்,ஓரகத்தி இவர்களின் கேரக்டர் எப்படி?இவர்களுக்கு என்னெல்லாம் பிடிக்கும்,என்னவெல்லாம் பிடிக்காது...இதெல்லாம் நன்கு தெரிஞ்சுக்க முயற்ச்சிக்கணும்.
*இதை தெரிந்து கொள்ள வேண்டிய நேரத்தில் அவர்களிடமிருந்து வரும் கோபம்,அதனால் வெளிபடும் சில வார்த்தைகள் இவைகளெல்லாம் நம்மை நோக்கி வந்தாலும் அதை பொறுமையோடும்,புன்னைகையோடும் சமாளிக்க பழகி கொள்ள வேண்டும்.உங்க மனதை பாதித்திருந்தால் ரொமப் ஸாரி மாமி என மனம் இறங்கி கேட்டுவிட்டாலே போது மேற்கொண்டு வாக்கு வாதத்திற்க்கு அங்கு வேலையே இருக்காது.நம் மீது தப்பே இல்லை என்றாலும்,எனக்கு தெரியாது என்னையறியாமல் நடந்துடுச்சு இனி நடக்காம பார்த்துக்குறேன்னு அவர்கள் கைய்யை பிடித்து பக்குவமா சாந்தமான முகத்தோடு சொல்லி பாருங்களேன்.அந்த பிரச்சனைக்கு அந்த நிமிடமே முற்று புள்ளி வைத்துவிடலாம்.
*அடுத்தது அவர்களுக்கு பிடித்த பொருட்களை அவ்வபோது அவர்கள் நினைத்த பார்க்காத நேரத்தில் வாங்கி கொடுத்து அவர்களை அசத்துவது....உதாரணமாக மாமியாருக்கு புடவை,உள்ளாடைகள் முதல் கர்சீஃப்,மருந்து மாத்திரைகள் இன்னும் அவர் அடிக்கடி உபயோகிக்கும் பொருட்கள் எல்லாம் இருக்கின்றதா... எது தேவையாக உள்ளது என அறிந்து கொண்டு அவற்றை வாங்கி வந்து தந்தால் அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா...?அவர்களுக்கு வேண்டுமா என்று கேட்டெல்லாம் வாங்க கூடாது.கேட்டால் எனக்கு வேண்டாம் என்றுதான் சொல்லுவார்கள்.நாமாக வாங்கி கொடுக்கும்போது அடடே நம் தேவை அறிந்து வாங்கி தந்துள்ளாலே என்று சந்தோஷப்படுவார்கள்.அதுவும் அந்த பொருளை கொடுக்கும் போது இதை இங்கே பார்த்தேன் மாமி.பார்த்ததுமே உங்க நினைவுதான் வந்தது.உங்களுக்கும்னு ஆசையாக இருந்துச்சு அதான் வாங்கினேன்னு சொல்லுங்களேன்.இந்த அனுபவமும் நன்றாகவே இருக்கும்.உங்களுக்கு அவர்களுக்குமிடையேயான உறவு மனப்பூர்வமாக இருக்கும்.
*அதே போல் தான் உங்க நாத்தினாருக்கும்,என்ன பிடிக்கும் அவர்கள் குழந்தைகளுக்கு என்ன செய்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள் என தெரிந்துக் கொண்டு செயல் படுங்கள்.
இன்னும் சிலவற்றை பிறகு சொல்ல முயற்ச்சிக்கிறேன்.இப்போது அவசரமாக இதை டைப் செய்தேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சண்முகப்ரியா

இப்போ என்ன சொல்ல வரீங்க? intelligent இல்லன்னா...சரி என்ன வென சொல்லிட்டு போங்க...

மாமியாரை ஐஸ் வக்கணும் னா உங்க நாத்தனார் ரை நல்லா கவனிங்க.கவனிங்கன்னு நான் சொன்னது உங்க சகோதரி மாறி மனசார நினைச்சு அவங்களுக்கு எதாவது finacial need வரும் போது தயங்காம உங்க கணவரை நீங்களே முத ஆளாய் போய் உதவ சொல்றது, அவங்க Bday ய ஞாபகம் வச்சு ,அவங்க குழந்தைங்க,அவங்க திருமண நாள் க்கெல்லாம் நீங்க கிப்ட் பண்றது இதெல்லாம் pannennganna உங்க மாமியாருக்கு உங்க மேல தனி பிரியம் வந்துடும்.சில மாமியார் இத்த நேரிடிய சொல்ல மட்டங்க...ஆனா மனசுக்குள்ள ஒரு பயம் இருக்கும் எங்கடா இவ வந்து நம்ம பையன நம்ம பொன்னுகெல்லாம் ஒன்னும் செய்ய விடாம பண்ணிடுவாலோன்னு...அந்த பயத்த நீங்க போக்கேடீங்கன்ன அவங்க மனசுல ஒரு இடம் பிடிச்சுடலாம்.

so நாத்தனாரை friend பிடிச்சுகொங்க...

அதே மாறி மாமியார் கூட நல்லா பழகறதுக்கு முன்னாடியே அவங்க முன்னாடி உங்க husband kuda ரெம்ப அன்னியோன்யமாய் இருக்கற மாதிரி kaamichukatheenga ...என்னா புதுசா கல்யாணம் ஆன உடனே அவங்கள நீங்க மாமியார் எப்படி இருப்பாங்கன்னு பயபடரீன்களோ அதே மாறி அங்கயும் மருமக எப்படி இருப்பான்னு ஒரு பயம் இருக்கும்.நீங்க உங்க husband கூட ரெம்ப நல்லா பழகிட்டால்லும் அவங்க முன்னாடி கொஞ்சம் அடக்கி வாசிக்கறது நல்லது. இல்லன்னா அவங்களுக்கு ஒரு insecured feeling வர நிறைய வாய்ப்பு இருக்கு. அந்த பீலிங் தான் உங்க மேல பாயும்...ஜாக்கரதை.

ஓரகத்திங்க எனக்கு இன்னும் இல்ல.இனி மேதான்... இன்னும் yen ரெண்டு kolanthanaarkkum கல்யாணம் ஆகல...ஓரகத்திங்க கூட சண்டை வருமா???? தெரியல...ஆன அவங்ககிட்ட எடுத்த உடனே உங்க குடும்பத்த பத்தி தாறுமாறா கமெண்ட் எடுத்து அள்ளி kadasiratheenga . உங்க குடும்பம் நான் சொல்றது உங்க மாமியார் நாத்தனார் பத்தி.அவங்க அப்படி பன்ன்னினாங்க...இப்படி பண்ணினாங்க...இதெல்லாம் வேண்டாம்.

ஏதோ நான் கொடுத்த டிப்ஸ் உங்களுக்கு உதவுன சரி ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் கோமதி&அப்சரா
நான் சீரியசாதான் டிப்ஸ் கேட்டேன்பா. நான் என் மாமியாருக்கு என்ன பிடிக்கும்னு கேட்டுதான் தினமும் சமைக்கிறேன், அதுல உப்பு கம்மி, காரம் ஜாஸ்தின்னு சொல்லிட்டே இருப்பாங்க, என் கணவர் சமையல் சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டா ,உடனே அவங்க இதெல்லாம் என் உடம்புக்கு ஒத்துக்காதுன்னு சொல்லி புதுசா சமைச்சி சாப்பிடறாங்க, அப்புறம் நான் .சாரி வாங்கிக்கொடுத்தா நல்லாவே இல்லைன்னு சொல்லி அப்படியே வெச்சிடுவாங்க. அப்புறம் எனக்கு தெரியாம பழைய பாத்திரத்துக்கு போடறாங்க,இதை ஒருநாள் யதேச்சையா நான் பார்த்து அதிர்ச்சியாகிட்டேன், அவங்ககிட்ட ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டா அவ்ளோதான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி என் கணவருக்கும் எனக்கும் ப்ரச்சினை உண்டாக்கிடுவாங்க,என் கணவரிடம் சொன்னாலும் இதே நிலைமைதான் . என் மாமியாரை சமாளிக்க முடியாம கிட்டத்தட்ட எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு.
இத்தனைக்கும் எங்களுக்கு திருமணமாகி 6 1/2 வருடங்கள் ஆகிவிட்டது, இன்னும் என் மாமியார் என்னை புரிஞ்சிக்கலை. எங்கே தவறு செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ரொம்ப மனவருத்தத்தில் இருக்கிறேன் தோழிகளே.

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

ஹலோ friends ,
நான் எழில் கேல்விக்கே கொஞ்சம் விரிவா பதில் தர ஆசைப்பட்டேன். ஆனா தமிழ்ல type பண்ண ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்ப okay (தேங்க்ஸ் கோமதி ).

சரியா சொன்னீங்க அப்சரா,&கோமதி . ஆனாலும் ஒண்ணு ரெண்டு விஷயம் கொஞ்சம் மாறும் .

நீங்க எல்லாம் நல்லவங்க அதனால் கடவுள் உங்களை சோதிக்கல, ஆனா நாங்க எல்லாம் ரொம்ம்மம்ப நல்லவங்க அதனால சோதனையும் அதிகம்.
//#,எனக்கு தெரியாது என்னையறியாமல் நடந்துடுச்சு இனி நடக்காம பார்த்துக்குறேன்னு அவர்கள் கைய்யை பிடித்து பக்குவமா சாந்தமான முகத்தோடு சொல்லி பாருங்களேன்.அந்த பிரச்சனைக்கு அந்த நிமிடமே முற்று புள்ளி வைத்துவிடலாம்.//
இது எல்லாம் சும்மா misunderstanding ல் problem பண்ணும் மாமியாருக்கு பொருந்தும். ஆனா problem பண்ண வேண்டும் என்பவர்ர்களிடம் இந்த பருப்பு வேகாது ."பண்ணுவது எல்லாம் பண்ணிவிட்டு எப்படி நடிக்கற பாரு " இப்படித்தான் சொல்வாங்க . உங்க முன்னாடி சிரித்தாலும் , உங்க husband கிட்டயோ (அ) மத்தவங்ககிட்டயோ இது மாதிரி ஏதாவது சொல்லத்தான் செய்வாங்க .

# அடுத்தது அவர்களுக்கு பிடித்த பொருட்களை அவ்வபோது அவர்கள் நினைத்த பார்க்காத நேரத்தில் வாங்கி கொடுத்து அவர்களை அசத்துவது....//இது எல்லாம் innocent (அ ) கொஞ்சம் நல்ல type மாமியாருக்கு தான் சரியா வரும் .
(எங்க மாமியாருக்கு என் அம்மா வீட்டு சொத்தும் , அங்கிருந்து வரும் பொருளும் மட்டும் தான் பிடிச்சுருக்கு..... என்ன பண்ணட்டும் )
//#கவனிங்கன்னு நான் சொன்னது உங்க சகோதரி மாறி மனசார நினைச்சு அவங்களுக்கு எதாவது finacial need வரும் போது தயங்காம உங்க கணவரை நீங்களே முத ஆளாய் போய் உதவ சொல்றது, //(அப்படி சொல்ல போயி தான் மாச மாசம் பணம் அனுப்ப சொல்றங்க.) நீங்க சொன்னது நல்ல பாயிண்ட் கோமதி ,ஆனா எந்த மாதிரியான ஆளுங்க அப்படிங்கறது ரொம்ப முக்கியம்.

இப்ப என்னதான் பண்றது ? இது தானே உங்க கேள்வி சண்முகப்ரியா.

ஹாய் சண்முகபிரியா
ஆனாலும் உங்களுக்கு சாமர்த்தியம் பத்தல (கோவிச்சுகாதிங்க மனசுல paட்டதை சொன்னேன் .)///திருமணமாகி 6 1/2 வருடங்கள் ஆகிவிட்டது, இன்னும் என்
மாமியார் என்னை புரிஞ்சிக்கலை. எங்கே தவறு செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை// இங்கதான் தவறு செய்யறீங்க . இத்தனை வருசம் ஆகியும்
மாமியாரை நீங்க புரிஞ்சிக்கலை . பின்ன என்னங்க 6 வருஷத்துல oருத்தரோட குணத்தையும் அவங்களோட பிளஸ், மைனஸ் எல்லாம் தெரிஞ்சுருக்க ணாமா?

மேலே ரெண்டு பேர் சொன்ன விஷயங்களும் ரொம்ப சரி ,ஆனா

மத்தவங்க குணம் எப்படி நு கண்டு பிடிச்சுட்டு அதுக்கு ஏத்த

மாதிரி நடந்துக்கணும் . (அது வரைக்கும் அப்சரா சொன்ன மாதிரி

(first para ) தான் நடந்துக்கணும் ). இவங்க சொன்னது

எல்லாம் முதல் படி . அதாவது கல்யாணம் ஆனா முதல்

இரண்டு வருடத்தில் செய்ய வேண்டியவை .(பரவாயில்லை நீங்க

இப்பவும் முயற்சி பண்ணலாம் ).

நாம பேசும்போது எப்படி இடம் ,பொருள் ,ஏவல் பார்த்து

பேசணுமோ ,அப்படித்தான் ஒருத்தரு கிட்ட நடந்துகிறதும் .

சொல்வங்கயில்ல" ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் , பாடற

மாட்டை பாடி கறக்கணும் " அதுமாதிரி . first step க்கு

சரிவரலைய ,பரவாயில்ல .second கொஞ்சம் அதிரடி ,அதாவது

ignorisum (அவங்களை அப்படியே கண்டுக்காம விடுவது ,

{அவர்கள் அடாவடி செயல்களை மட்டும்,அவரையே அல்ல }).

ஆனா இதுக்கு முக்கியம் உங்க husband support முக்கியம்.

husband உங்களை புரிந்தவராய் இருந்தால் நோ problem .

அப்படி இல்லாவிட்டால் முதலில் அவருக்கு உங்களை புரிய

வையுங்கள் . அது வரை மாமியாரிடம் பொறுமையும்

அடங்கிபோகுதலும் இருக்க வேணும் .

Nice line

நீங்க சொல்றத பார்த்த அவங்க தான் பெரிய மன குழப்பத்துல இருப்பாங்க போல இருக்கு...?!!!?

நீங்க immediate ஆ ஒன்னு பண்ணுங்க...உங்க husband கிட்ட சொல்லி ""சாப்பாடு நல்லா இருந்துச்சுன்னா என்கிட்ட தனியா சொல்லிடுங்க....அம்மா முன்னாடி சொல்ல வேண்டாம்"" அப்படின்னு சொல்லுங்க...அப்புறம் அவங்க இருக்கும் போது உங்க கூட ஜாஸ்தி close ஆ இருக்கற மாதிரி காமிச்சுக்க வேண்டாம் ன்னும் சொல்லுங்க .நமக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்.கொஞ்ச நாள் இத மாதிரி ட்ரை பண்ணி பாருங்க. எதாச்சும் change இருக்கான்னு பாருங்க.

அப்புறம் உங்க husband ஆ அவங்க ளோட கொஞ்சம் டைம் spend பண்ண சொல்லுங்க...நீங்களும் பண்ண ட்ரை பண்ணுங்க...ஆனா அவங்க உங்களோட பேசுவாங்கலன்னு தெரியல...கல்யாணத்துக்கு முன்னாடி உங்க husband அம்மாகிட்ட எப்படி பேசி பழகி இருப்பாங்களோ அதே மாதிரி இப்பவும் இருக்க சொல்லுங்க...

அப்புறம் ஒரு ஐடியா...இப்போதான் சனி பெயர்ச்சி வருதில்ல...உங்க husband ஆ விட்டு உங்க அத்தைகிட்ட இப்படி சொல்ல சொல்லுங்க..."என்னோட அம்மாவும் wife உம சேர்ந்து daily ஒரு மாசத்துக்கு கோவில்ல அர்ச்சனை வைக்கணும் நு ஒரு ஜோசியர் சொல்லிருக்காரு.அதுனால கொஞ்சம் நீங்க ரெண்டு பெரும் விடாம எனக்காக கொஞ்சம் டெய்லி கோவிலுக்கு சேர்ந்து போங்க." அப்பிடின்னு...அப்போ போனாலாவது கொஞ்சம் உங்க மேல attachment வருதான்னு பாக்கலாம்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்