நவதானிய தோசை

தேதி: December 5, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

புழுங்கல் அரிசி -- 1 கப்
பச்சரிசி -- 1 கப்
உளுந்து -- 1/4 கப்
கொள்ளு -- 2 ஸ்பூன்
கொண்டை கடலை -- 2 ஸ்பூன்
கடலை பருப்பு -- 1 ஸ்பூன்
துவரம் பருப்பு -- 1 ஸ்பூன்
பாசி பருப்பு -- 1 ஸ்பூன்
காரா மணி -- 1 ஸ்பூன்
பட்டாணி பருப்பு -- 1 ஸ்பூன்
மொச்சை பயறு -- 1 ஸ்பூன்
வேர்கடலை -- 1 ஸ்பூன்
முந்திரி -- 10 என்னம்
வெங்காயம் -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு )(பொடியாக நறுக்கியது)
உப்பு -- தே.அ
எண்ணைய் -- தே.அ


 

உளுந்து,அரிசியை இரண்டையும் கழைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
மொச்சை பயிறு, கொண்டைக்கடலை,கொள்ளு,காராமணி இவைகளை கழுவி இரவே ஊறவைக்கவும்.
மீதி பருப்புகளை (முந்திரி, வேர்கடலை தவிர)2 மணிநேரம் ஊறவைக்கவும்.
முந்திரி, வேர்கடலை இவற்றை சிவக்க வறுத்து ரவை போல பொடிக்கவும்.
பின் இவைகளை உப்பு சேர்த்து ஒன்றாக சேர்த்து நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கி தோசையாக வார்க்கவும்.
எண்ணைய் ஊற்றி திருப்பி போடவும்.
பறிமாறும் போது பொடித்த பருப்பு பொடிகளை தூவி கொடுக்கவும்.
நவதானிய தோசை ரெடி.


மேலும் சில குறிப்புகள்