தேதி: December 6, 2011
செல் போன் பெளச் நூல் (அல்லது) உல்லன் நூல்
குரோஷே ஊசி
அலங்கார பட்டன்
செல்போன் பெளச் நூலில் முதலில் 20 சங்கிலி பின்னல்கள் போடவும்.

20 சங்கிலி முடிந்ததும் ஊசியிலிருந்து இரண்டாவது சங்கிலியில் ஊசியை நுழைந்து நூலை மாட்டி இழுக்கவும். தொடர்ந்து அடுத்த சங்கிலியில் ஊசியை நுழைந்து நூலை மாட்டி பின்னல்களை போடவும். இதற்கு பெயர் தனி குரோஷே பின்னல் (single crochet).

தனி குரோஷே பின்னலில் 20 சங்கிலி முடிந்ததும் சங்கிலியின் மறுபக்கமும் தொடர்ந்து போடவும்.

இப்பொழுது பெளச்சின் அடிப்பகுதி கிடைக்கும்.

பெளச்சின் பாதி பகுதிக்கு அரை இரட்டை குரோஷே பின்னல்களை போடவும்.

இப்பொழுது வேறு வண்ணத்தில் நூலை இணைத்து இரட்டை குரோஷே பின்னலால் ஒரு சங்கிலியில் மூன்று பின்னல்கள் போட்டு இரண்டு சங்கிலி விட்டு அடுத்த சங்கிலியில் மூன்று பின்னல் என்று தொடர்ந்து போடவும். இது அலங்கார பின்னல் இதை போடுவதால் இடைவெளி வரும். செல்போன் இயங்கினால் ஒலி, ஒளி அறியலாம்.

வேண்டிய அளவுக்கு கைப்பிடிக்கு சங்கிலி பின்னல்கள் போட்டு இணைக்கவும். பட்டனை உபயோகிக்க நடுவில் 36 சங்கிலி பின்னல்கள் போட்டு இணைக்கவும்.

அலங்கார பின்னல் நடுவில் பட்டன் ஒன்றை பொருத்தவும். செல்போன் பெளச் ரெடி.

Comments
ஆனந்தி
ஆனந்தி.... சூப்பர்ங்க. ரொம்ப சுலபமா போடும்படி சொல்லி கொடுத்திருக்கீங்க. கலக்கலா இருக்குங்க. இன்னும் நிறைய சொல்லி கொடுங்க. ரொம்ப சூப்பரான பவுச்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஆனந்தி
ரொம்ப அழகான பெளச் பார்க்க ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள் by Elaya.G
அழகா
அழகா இருக்குது...வாழ்த்துக்கள்!!
"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."
அன்புடன்,
மலர்.
ரொம்ப அழகு
ரொம்ப அழகு..அவரரவர் ட்ரெஸ்ஸுக்கு பொருத்தமா செஞ்சுக்கலாம் பொறுமை வேணும்
ஆனந்தி
ம் பார்க்கவே அழகா இருக்கு. வாழ்த்துகள்
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ஆனந்தி
பெளச் ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய கைவினை சொல்லி கொடுங்க.
நன்றி
எனது இந்த கைவினை பொருளை அறுசுவையில் இடம் அளித்த அட்மின் மற்றும் அறுசுவை குழுவிற்கு நன்றி.
வாழ்த்து சொல்லி என்னை ஊக்கமளிக்கும் சகோதரிகளுக்கு நன்றி
செல்ஃபோன் பௌச்
குறிப்பு படங்கள் எல்லாமே தெளிவாக இருக்கிறது. பாராட்டுக்கள் ஆனந்தி.
- இமா க்றிஸ்
cell 4n
super.bt enaku sangili pinnal poda theriyathu
I love my mahir
about this site
This is the first time, I visit here. I like this site very much. It has lot of useful information for women.
Thanking you
enaku third step ku apuram
enaku third step ku apuram eppadi seiyaradhu nu theriyala? Will you help me
வேண்டுகோள்
ஸ்வெட்டர் பின்னுவது எப்படி என்று செயல் விளக்கம் தருக
வேண்டுகோள்
ஸ்வெட்டர் பின்னுவது எப்படி என்று செயல் விளக்கம் தருக
aanandhi mam
spr a iruku mobile pouch,nanum try paniruka enaku shape sareya varala ullan threadla,,na oru kuty kaipai sencha,mam,ullanthreadla,,but enakku stiff a varala,ethathu idea kudunga mam
முயற்சி செய்வொம் முடிந்த மட்டும்
ஆருமை சகொதரி /தோழி
உல்லன்
//enakku stiff a varala,ethathu idea kudunga mam// நைலான் coard ட்ரை பண்ணிப் பாருங்க. அல்லாவிட்டால்... உள்ள OHP ஷீட்ல லைனிங் போல வைக்கலாம்.
- இமா க்றிஸ்
அழகு,இப்படி குழத்தைகான
அழகு,இப்படி குழத்தைகான மில்க் பட்ழுக்கும் பன்னழம். கிழ் வட்ட வட்ட வடிவமாக பின்னல் போட வேன்டும்.