தேதி: December 6, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
காலிஃப்ளவர் - ஒன்று
தேங்காய் (துருவியது) - ஒரு கப்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 10 பல்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
தனியா - ஒரு மேசைக்கரண்டி
கசகசா - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம்மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்..

காலிஃப்ளவரை கொதிக்க வைத்த நீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும். மற்ற எல்லா பொருட்களையும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்..

தண்ணீரை வடித்து விட்டு மசாலாவில் காலிஃப்ளவரை பிரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெயை காய வைத்து காலிஃபிளவரை போட்டு வதக்கவும். (இதை இரண்டாக பிரித்து வதக்கினால் காலிஃபிளவர் உடையாமல் இருக்கும்)

சிறிய தீயில் பொன்னிறாமாக வறுக்கவும்.

காலிஃப்ளவர் சாப்ஸ் ரெடி

Comments
ஆனந்தி
காலிஃப்ளவர் சாப்ஸ் மசாலா எல்லாம் அரைச்சு சேர்த்து செய்தது நல்லா இருக்கு ஆனந்தி வாழ்த்துக்கள்.
It is Look Like a different
It is Look Like a different type and different taste. Please help me how can i type the matter in tamil.
காலிஃப்ளவர் சாப்ஸ்
குறிப்பு நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
ஆனந்தி
ஆனந்தி பார்க்கவே நல்லா இருக்கு. செய்து பார்த்துட்டு சொல்றேன். வாழ்த்துகள் ஆனந்தி
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ஆனந்தி
காலிஃப்ளவர் சாப்ஸ் சூப்பர்பா....
இப்படிக்கு ராணிநிக்சன்
judy kingston
tamil eluthu udhavi option page last irukkupa
இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.
சூப்பர் சாப்ஸ்
சூப்பர் சாப்ஸ் விருப்பபட்டியல்ல சேர்த்தாச்சு ஓட்டும் குடுத்தாச்சு :-) சூப்பர் டிஷ்
KEEP SMILING ALWAYS :-)
இந்த குறிப்பை அறுசுவையில்
இந்த குறிப்பை அறுசுவையில் இடம் அளித்த அட்மின் அவர்களுக்கு நன்றி.
வாழ்த்து சொல்லி என்னை ஊக்கமளிக்கும் சகோதரிகளுக்கு நன்றி
காலிஃப்ளவர் சாப்ஸ்
ஆனந்தி, குறிப்பு நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ
ஆனந்தி
குறிப்பு அருமைங்க. இப்படி குடுத்தா எவ்வளவு காலிஃப்ளவர் வேணும்னா சாப்பிடலாம். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஆனந்தி
காலிப்ளவர் காலியாக கலக்கலா ஈஸியா நல்ல குறிப்ப கொடுத்திருக்கீங்க
வாழ்த்துக்கள்
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
காலிஃப்ளவர் சாப்ஸ்
நல்லா வந்துச்சுப்பா ,ரொம்ப தேங்க்ஸ்
இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.
காலிஃப்ளவர் சாப்ஸ் ரொம்ப
காலிஃப்ளவர் சாப்ஸ் ரொம்ப நல்லா இருந்தது ருசியாவும் ஈசியாவும் இருந்தது
Nice recipe.I tried it
Nice recipe.I tried it today.everyone in my home
liked it. thanks for sharing this recipe.