பீரியட்ஸ் வலியும் கர்ப்ப காலமும்

அன்புளள அறுசுவை தோழிகளுக்கு,வணக்கம்.நான் அறுசுவையின் தீவிர ரசிகை.என் திருமணத்திற்கு முன்பு இருந்தே நான் இதை உபயோகபடுத்தி வருகிறேன்.உண்மையில் என்னை போல் உறவினர்களை விட்டு வெளிநாட்டில் இருபவர்களுக்கு அறுசுவை தான் தாய் வீடு.கைவினையில் ஆரம்பித்து,சமையல், உடல்நலம் இதை கடந்து இப்போது கர்பிணிகள் பகுதிக்கு வந்து உள்ளேன். எனக்கு கல்யாணம் ஆகி 1 வருடம் ஆகிறது. 3 மாதங்களாக நானும் என் கணவரும் சேர்ந்து உள்ளோம். இப்போது என்னுடைய கேள்வி என்னவென்றால், எனக்கு மாதவிலக்கின் போது கடுமையான வயிற்று வலி இருக்கும்..அந்த ஒரு நாள் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது.இந்த வலிக்கும் கர்ப்பம் ஆவதிற்கும் சம்பந்தம் உள்ளதா? பாப்பாவை எதிர் பார்த்து உள்ளோம். இந்த வலியால் கர்ப்ப காலத்தில் பிரச்சனைகள் ஏற்படுமா? பயமாகவும் குழப்பமாகவும் உள்ளது. அனுபவம் உள்ளவர்கள் உதவி செய்யுங்கள்.

அன்புள்ள,
ஸ்ரீ.

பலருக்கும் இந்த வலி முதல் பிரசவமானதும் போயிடும்

ஸ்ரீ... நீங்க பயப்படும் அளவுக்கு இந்த வலிக்கும் கர்ப்பத்துக்கும் சம்பந்தம் இல்லை. சிலருக்கு உண்மையில் இந்த வலியே திருமணத்துக்கு பின் ஏற்படும் ஹார்மோன் சேஞ்சஸ் காரணமா காணாம போகும். நானும் கடும் வலியால் அவதிப்பட்டவர் தான். அந்த காலத்தில் இது போல் வயிற்று வலி இருந்தா பிள்ளை உண்டாகாதுன்னு சொல்லி மருந்து கொடுப்பாங்கன்னு கேட்டிருக்கேன். ஆனா எனக்கு எந்த மருந்தும் கொடுக்கல, தானாவே தான் குழந்தை உண்டானது. அதெல்லாம் ஹார்மோன் சேஞ்சஸ் காரணமா வருவது... இப்படி தான்னு முடிவா சொல்ல முடியாது. ஆனா இது போல் வலி இருந்தா கரு நிக்காதுன்னு சொல்றது தப்பு.... அனுபவத்தில் சொல்றேன்... நான் வலி தாங்காம அழுதுட்டே இருப்பேன்... எனக்கு இதனால் எந்த பிரெச்சனையும் இல்லை. குழப்பிக்காதீங்க. மகிழ்ச்சியா இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தளிகா அக்கா,வனிதா அக்கா ரொம்ப நன்றி.எனக்கு ரொம்ப பயமா இருந்தது.எங்க வீட்டில எங்க அம்மா,பாட்டி யாருக்குமே வலி இல்லை.எனக்கு காத்து கருப்பு புடிச்சு இருக்கும்னு மந்திரிச்சு தாயத்து கட்டணனும் பாட்டி சொல்வாங்க சின்ன வயசுல 1 நாள் school லீவ் எடுக்கலாம்னு விளையாட்டா இருந்துட்டேன். இப்போ தான் அத நெனச்சதான் பயமா இருக்கு. பாட்டியும் இப்ப இல்ல. காத்து கருப்பு அப்படி ஏதாவது இருக்கா?

ஸ்ரீ... இப்படி வலிக்குறவங்களை எல்லாம் காத்து கருப்பு பிடிச்சிருக்கும்னா, உலகத்துல 50% மேல பெண்களை காத்து கருப்பு தான் பிடிச்சிருக்குன்னு அர்த்தம். வலி இல்லாத பெண்கள் தான் குறைவு. ஓரளவாது வலி இருக்க தான் செய்யும். அதனால் இப்படி தேவை இல்லாத பயத்தை மனதில் வைக்காதீங்க. என் அம்மாக்கும் வலி இருந்தது எனக்கும் வலி இருந்தது. கிராமத்தில் என் அம்மாக்கு இதுக்கு மருந்து கொடுத்தாங்க, அதன் பின் நான் பிறந்தேன். நகரத்தில் எனக்கு எந்த மருந்தும் கொடுக்கல, ஆனா என் மகள் பிறந்தாள். நீங்க ஒன்னா இருக்குறதே 3 மாசமா தான்... அதுக்குள்ள ஏங்க இந்த குழப்பம், பயம் எல்லாம்?? :) நிம்மதியா இருங்க... சீக்கிரம் தாய்மை அடைவீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் டாக்டரிடம் காட்டிய போது எனக்கு uterus septum இருப்பது தெரியவந்தது. மாதவிலக்கு காலத்தில் வலி என்பது தாங்க கூடிய அளவுதான்... மிக கடுமையான வலி இருக்கும் பட்சத்தில், மூட நம்பிக்கைக்கு இடம் கொடுக்காமல் நல்ல மருத்துவரிடம் காட்டி பரிசோதனை செய்து கொள்வது நலம். பின்னாளில் இதை படிக்கும் தோழிகலின் நலன் கருதி இந்த பதிவை இடுகிறேன்.

உங்களுக்கு உடம்பு வீக் என்றால் இந்தமாதிரி சமயத்தில் உளுந்தங்களி செய்து சாப்பிடுங்க. இதுவும் நல்ல பயன் தரும்.

மேலும் சில பதிவுகள்