குழந்தையின் அடம் குறைய வழி சொல்லுங்க பா

வணக்கம் தோழிகளெ. என் மகனுக்கு 2 வயது 2 மாதங்கள் ஆகிறது. நான் singapore இல் இருக்கிறென்.அவன் அடம் மிகவும் பிடிக்கிறான். வீட்டில் இருந்தால் tv,computer இல் cartoon, morning to night பார்க்கிறன். அவனே on செய்கிறான். வைக்கவில்லை யெனில் அழுது அடம் பிடிக்கிறான்.வெளியில் playground அழைத்து போனால் busஇல் or trainஇல் தான் போகனும்னு தேம்பி தேம்பி ரோட்டில் அடம் பிடிக்கிரான்.vegetables வாங்க கூட போக முடியவில்லை. இதனால் சளி பிடிக்குது. மதியம் துங்கவும் மாட்டென்றான்.தொட்டிலில் தான் ஆட்டி துங்க வைப்பேன்.பந்து, பொம்மை, எதுவுமே விளையாட மாட்டென்றான். பேச்சு கூட வரல. அம்மா, அப்பா அவ்வளொ தான். இப்பொ 3 நாளா சாப்பிடவும் மாட்டென்றான்.இதனால் எனக்கு தலைவலி பா.tablet தினமும் போடரேன். எனக்கு நீங்கள் தான் வழி சொல்லனும் அக்காவாக, அம்மாவாக pls pls pls

நீங்க அவனோட நிறைய பேசுங்க...தமிழ் rhymes Cd ல்லாம் போட்டு காட்டுங்க...நம்ம பேசுறதுல இருந்துதான் குழந்தைங்க கத்துப்பாங்கன்னு நினக்குறேன்...கம்ப்யூட்டர் எ கொஞ்ச நாளைக்கு ஏற கட்டி வைங்க...ரிப்பேர் ஆஹிடுசுன்னு சொல்லிடுங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நீங்க ஏன் இப்படி கவலை படுறீங்க, நீங்க சிங்கப்பூர்ல எங்க இருக்கீங்க , அவனுக்கு எட்டாத இடமா பார்த்து வைங்க, ப்ளே கிரௌன்ட்ல நல்லா விளையாட விடுங்க, நீங்க அடிகடி எதாவது பேசுங்க, படுக்க வைக்கும் போது நீங்களும் எதாவது பேசி துங்க வைங்க,

அவருடன் பல்வேறு விளையாட துவக்கவும். அவர் உன்னை நோக்கி ஈர்க்க முடியும். ஸ்ரீகிருஷ்ணா, ஹனுமான் போன்ற சிடிக்கள் போடவும் .. நீ அவர்களை பற்றி கதைகள் சொல்ல. அவர் உங்களுக்கு ஒன்றியிருக்கவேண்டியது துவங்குவார்.

அவன் ஒடி கொண்டே இருப்பான். ஒரு இடத்தில் இருக்க மாட்டென்றன். table, sofa எல்லாம் தள்ளி எடுக்கிறான். கதை சொன்னால் கேட்க மாட்டென்றான்.ப்ளே கிரௌன்ட்ல விளையாட மாட்டென்றான். ஒடி விடுகிறான் bus stop or train stationக்கு.நான் marsilingஇல் இருக்கிறேன்

jaya

நீங்க ஒரு குழந்தை நல டாக்டரிடம் அழைத்து சென்று அவன் செய்வதை எடுத்து சொல்லுங்கள். பயப்பட ஒன்றும் இல்லை. டிவி,கம்ப்யூட்டர் பார்க்க என்று ஒரு நேரம் ஒதுக்குங்க.அதிக நேரம் பார்க்க அனுமதிகாதிர்கள். நீங்க அவனுடன் அதிக நேரம் செலவிடுங்க. படங்கள் பெயர்கள் உள்ள புக்ஸ் வாங்கி சொல்லிக்குடுங்க. திரும்ப அவனை சொல்ல சொல்லுங்க.சொல்ல ட்ரை செய்தால் கைதட்டி ஊக்கபடுத்துங்க.பேசவில்லை என்றால் டாக்டரை கன்சல்ட் செய்து ஸ்பீச் தெரபி கொடுத்தால் சீக்கிரம் பேசிவிடுவாங்க.

இப்ப தான் உங்க கேள்வியை பார்க்கிறேன். ஓடிட்டே இருக்கான்னா முதல்ல டாக்டரை பார்த்து அவன் ஹைபர் ஆக்டிவா என்று தெரிந்து கொள்ளுங்கள். அப்படி இருந்தால் அவர்கள் நம்மை கவனிக்க மாட்டார்கள்... அதனால் பேச்சு தாமதமாகும். இதுக்கு இப்போ occupational therapy இருக்கு. பயம் வேண்டாம். கொடுத்தா 1 மாதத்தில் பேச்சு வரும். இல்லை ஹைபர் ஆக்டிவ் இல்லை என்று சொன்னால் ஸ்பீச் தெரபி கொடுங்க. 2.5 வயது வரை குழந்தைகளுக்கு பேச்சு வர காத்திருக்கலாம். அதன் பின்னும் வரவில்லை என்றால் தெரபி கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். நீங்க விரும்பினா இப்பவே துவங்கலாம். தப்பில்லை. இதில் பயப்பட ஒன்னுமில்லை. occupational therapy கொடுத்தா அடம் பிடிக்கும் பழக்கமும் குறைஞ்சுடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்