குழந்தைகளுக்கான பென்சில் பூக்கள்

தேதி: December 10, 2011

4
Average: 4 (19 votes)

 

சார்ட் பேப்பர்
பென்சில் சீவிய துகள்கள்
ஸ்கெட்ச்
பென்சில்
பஞ்சு (அ) தெர்மாகோல் உருண்டை
கம்

 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பென்சிலை சீவியது தான் பூக்களாகவும், இலைகளாகவும் பயன்படுத்த போகிறோம்.
அட்டையில் தேவையான இடத்தில் பென்சில் துகள்களை பூக்களாக வைத்து சரி பார்க்கவும். பின் பென்சிலால் தண்டு பகுதி வரைந்து கொள்ளவும். பிறகு குழந்தைகளிடம் சொல்லி கம் வைத்து பூக்களை ஒட்ட சொல்லவும்.
தேவையான பென்சில் பூக்களை இலை பகுதிக்காக பச்சை நிறம் அடிக்க சொல்லவும்.
பூக்களுக்கு நடுவில் வைக்க சிறிய அளவு பஞ்சை உருட்டி கொள்ளவும். அதற்கு விரும்பிய வண்ணம் அடிக்கவும். பென்சில் பூக்களுக்கு நடுவே உருட்டிய பஞ்சினை ஒட்ட சொல்லவும்.
இப்போது பென்சிலால் வரைந்த தண்டு பகுதியை பச்சை நிற ஸ்கெட்ச் கொண்டு வரையவும். இலைகளை தண்டு பகுதியில் ஒட்ட சொல்லவும்.
பூக்களை மேலும் அலங்கரிக்க விரும்பினால், அதில் வர்ணங்களை கொண்டு கோடுகள் வரையலாம். இப்போது பென்சில் பூக்கள் தயார். குழந்தைகளுக்கு விருப்பமான சுலபமான பொழுது போக்கு இது. சங்கீதாவின் மகள் சோனா செய்து காட்டிய கைவினை இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப சூப்பர்ங்க. எளிமையான அழகான கைவினை... குட்டீஸ்க்கு ரொம்ப பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நல்லா வந்து இருக்கு....... அழகா இருக்கு.

மிகவும் அழகாக செய்து காட்டி இருக்கிறீர்கள்; பாராட்டுகள் சோனா.

‍- இமா க்றிஸ்

simple and superb...... very nice work sona.

அழகான கைவினை எளிமையான செய்முறை வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எங்கள் கைவினையை வெளியிட்டமைக்கு அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி........

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

முதலில் வந்து கருத்து பதித்த வனிதாவுக்கு மிக்க நன்றி.....

ப்ரியா ,இமா,கமலி,ரேணுகா உங்க எல்லோருக்கும் மிக்க நன்றி......

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

பென்சில் பூக்கள் அழகா இருக்கு செய்து காட்டிய உங்க செல்ல மகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ரொம்ப நன்றி பா....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"