உதவுங்கள், ப்ளீஸ்.

என் மாமியாருக்கு தோலில் அரிப்பு ஏற்படுகிறது. சொரிந்தால் அந்த இடத்தில் கொப்புளம் வருகிறது. உடல் முழுக்க இப்படி இருக்கிறது. டாக்டரிடம் காண்பித்து ப்ளட் டெஸ்ட் , யூரி டெஸ்ட் எல்லாம் எடுத்தாகிவிட்டது. எல்லாம் நார்மல். இஞ்ஜக்சன், மாத்திரை கொடுத்தால் அப்போதைக்கு நன்றாக இருக்கிறார்.என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் மாமியார் அழுது கொண்டே இருக்கிறார். இதற்கு என்ன செய்வது உதவுங்கள், ப்ளீஸ்.

வேப்பிலையுடன் மஞ்சள் அரைத்து உடலில் பூசி 1 மணி நேரம் விட்டு குளிக்க சொல்லுங்க. சரியாகும். சோப் போட வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவங்க கடைசியா சாப்ப்ட்டத நினைவு வச்சுக்க சொல்லுங்க...இறால்,முட்டை,கருவாடு,பால்,கோழி,ஆரன்J,இத சாப்டா சிலருக்கு இம்மாதிரி வரும்....எது ஓத்துக்கலையோ அத தவிற்கனும்...ஸ்கின் டாக்டர்ட்ட போங்கப்பா...

//இஞ்ஜக்சன், மாத்திரை கொடுத்தால் அப்போதைக்கு நன்றாக இருக்கிறார்.// திரும்ப இப்படி ஆகும்போது என்ன சாப்பிட்டார், எங்கெல்லாம் போய்வந்தார் என்பதை நினைவுபடுத்தி டாக்டரிடம் சொல்லுங்கள்.

வெயில், வெந்நீர்க்குளியல், சில துணிவகைகள், இப்போ பயன்படுத்தும் சவர்க்காரம், டஸ்ட்மைட்ஸ் இப்படி நிறையக் காரணங்கள் இருக்கின்றன. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மெத்தையை வெயிலில் காயவைத்து எடுத்தால் நல்லது. முடிந்தால் வாக்யூம் செய்து விடுங்கள், இருக்கும் தூசுகளைக் குறைத்துவிடும்.

அரிப்பு இருந்தாலும் சொரியவேண்டாம். 'ஸ்ட்ரெஸ்' கூட காரணமாகலாம், யோசித்துக்கொண்டு இருக்க வேண்டாம். எது பிரச்சினையாக இருக்கிறது என்பதை அவதானித்துப் பார்த்து டாக்டரிடம் போய்ச்சொல்லுங்கள். இங்கு அலர்ஜி சம்பதமாகப் பேசிய வேறு சில இழைகள் இருக்கின்றன, முடிந்தால் தேடிப் படியுங்கள், உபயோகமாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

எனது அப்பாக்கு சர்க்கரை நோய் உள்ளது 15 வருடங்களாக, இப்பொழுது காலில் மிகவும் எரிச்சலாக உள்ளது என்று சொல்கிறார். நாங்கள் full check up செய்து டாக்டர் ஒன்றும் இல்லை சுகர் 15 years இருக்கு அதனால இப்படி எரிச்சலாக உள்ளது என்று சொல்கிறார்கள், நீங்கள் உங்களுக்கு தெரிந்த
கால் எரிச்சல் நீங்க வழிக் கூறுங்கள். எல்லா விதமான
பண்ணியாச்சு ஒன்றுமே பலன் இல்லை.

டாக்டர் அப்படிச் சொன்னால் கட்டாயம் சர்க்கரையைக் கட்டுப் படுத்த ஏதாவது செய்தாகவேண்டும். அல்லாவிட்டால் காயங்கள் வந்தால் பிரச்சினையாக வாய்ப்பு இருக்கிறது. உணவில் இன்னும் கட்டுப்பாடாக இருக்க முடியுமா என்று பாருங்கள். நடைப்பயிற்சி செய்யவையுங்கள். எடுக்கும் மருந்துகளைத் தவறாமல் எடுக்க வையுங்கள்.

‍- இமா க்றிஸ்

ஆனா அப்பாக்கு சுகர் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் walking dailyum போறார். இருந்தும் இந்த பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனையால் யாரிடமும் சரியாக பேசுவதே கிடையாது

மேலும் சில பதிவுகள்