பட்டிமன்றம் - 55 : ஆண்கள் ராமனா? ராவணனா?

வணக்கம் தோழிகளே. :) இந்த வார தலைப்பு காங்கோ கல்பனா தந்தது.

“இந்த கால ஆண்கள் ராமனா? ராவணனா?”

உண்மையான தலைப்பு கணவர்கள் என்றிருந்தது... கணவனாக சீதையை தீ குளிக்க வைத்த ராமனை மட்டுமே மையமாக எடுக்க விரும்பாமல் பொதுவாக ஆண்கள் என்று மாற்றி இருக்கிறேன். இதில் ஆண் நண்பர்கள், காதலர்கள், கணவன் என் எல்லா உறவுகளூம் அடங்கும். நாம் தினம் தினம் வெளியே சந்திக்கும் எல்லா ஆண்களையும் உதாரணமாக கொண்டே பேசலாம்.

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் மட்டுமல்ல எல்லா பட்டிக்கும் பொறுந்தும் :) அதனால் அதை மீறுதல் கூடாது. மீறினால் பென்ச் தான்.

தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன். தலைப்பை தந்த நம்ம காங்கோ கல்பனாக்கு என் மனமார்ந்த நன்றிகள். வாதிட போகும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் இப்போதே வனிதாவின் நன்றிகள் கோடி.

அன்புள்ளங்களே... நடுவர் பொறுப்புக்கு வேறு யாரும் இல்லாத காரணத்தால் நானே துவங்கி இருக்கிறேன். அனைவரும் வந்து பட்டியை சிறப்பிக்கும்படி கேட்டுக்கறேன் :)

நாம இப்போ நம்மை பற்றி பேச போறதில்லை.... நம்ம எதிர் அணி ஆண்களை பற்றி தான் பேச போறோம்... அதனால் பூந்து விளையாடுங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு..நடுவர்..வனிதா,

இந்த..தலைப்பை..எங்கோ..பார்த்த..மாதிரி..இருக்கேன்னு..வந்தேன்...
கடைசியா..நான்..தந்த..தலைப்பு..தான்..:)

நடுவராக..பதவியேற்றதற்கு..வாழ்த்துக்கள்..என்..தலைப்பை..
தேர்ந்தெடுத்ததற்கு..நன்றிகள்...நான்..எந்தப்பக்கம்..என்று..முடிவு..செய்து
கொண்டு..வருகிறேன்...

இங்கு..எலக்‌ஷன்..களேபாரத்தில்..இன்னும்..கீபோர்டை..மாற்றவில்லை..
அதனால்..மெதுவாகதான்..வரமுடியும்..:)

பட்டியில்..பங்கேற்கப்போகும்..மற்ற..தோழிகளுக்கும்..என்..அட்வான்ஸ்
வாழ்த்துக்கள்..:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்புத்தோழி வனிதா....... நடுவர் பதவியேறதற்கு வாழ்த்துக்கள். ரொம்ப சென்சிட்டிவான தலைப்பாக இருக்கே..... எப்படி ஆரம்பிக்கிறதுனு ஒரே குழப்பமா தான் இருக்கு. ஜெயிக்கிறமோ தோற்குறோமோ மனசுக்குபட்ட எந்த அணி என்று முடிவு செய்தாச்சு...... "இந்த கால ஆண்கள் (எல்லோரும் அல்ல....பெரும்பாலும்) ராவணன்களே"..... விரைவில் வாதத்தோடு வரேன். கஷ்ட்டமான தலைப்பை கொடுத்த கல்பனாவிற்கு நன்றி.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

இப்போ கள்ளதனமான ராவனன்கள் ஜாஸ்திப்பா....12மனிக்கு உங்கள் தெருவிலே தனியா நடந்துட்டு வாங்க ...தீர்ப்பு கிடசுடும்..சாரிப்பா தீர்ப்பு சொல்ல திரும்பி பத்திரமா வ்ந்துடுவீங்களாங்கறது சந்தேகம்தான்.....

கல்பனா... வாங்க வாங்க. எங்கடா ஒரு தலைப்பை போட்டோம் யாரையும் காணோமேன்னு வயிற்றில் புளியை கறைச்சுது... ;) வந்து அதுக்கு புல்ஸ்டாப் வெச்ச உங்க உங்க நல்ல மனசுக்கு பெரிய தேன்க்ஸ். :) நீங்க புள்ளீயே வைங்க... ஸ்பேஸே வேண்டாம்... ஆனா வாதத்தோட சீக்கிரம் வாங்க.

ஆனந்தி... வருக வருக. அணியை முடிவு பண்ணிட்டு வந்து முதல் வீரப்பெண்... ராவணன் அணிக்கே உங்க ஓட்டு. கலக்குங்க. வாதங்களுக்காக் ஆவளோடு காத்திருக்கோம். :) மிக்க நன்றி.

ரியாசா... மிக்க நன்றி. நீங்களூம் ராவணன் அணி என்று முடிவோடு பட்டியில் குதிச்சுட்டீங்க. வாழ்த்துக்கள். வாதங்களோடு வாங்க. :) 12 மணிக்கு வெளிய போலாம்... ஆனாலும் ஏன் ரிஸ்க்??? எதிர் அணிக்கு ஆளே வரலன்னா தீர்ப்பை சொல்லி போடலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்தகால ஆண்கள் நிச்சயம் ராமனாகத்தான் இருக்கிறார்கள். சில பெண்கள்தான் ராவணிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய ஆண்கள் அந்தகால ஆண்கள் போலில்லை. திருமணம் என்று நிச்சயித்த உடன் பொறுப்பாக யோசிக்க தொடங்கிவிடுகிறார்கள், சம்பாதிப்பது மட்டும்தான் ஆண்களின் வேலை, வீடும் குழந்தைகளும் மனைவியின் பொறுப்பு என்று ஒதுங்கி விடுவதில்லை. மனைவிக்கு சம உரிமை அளித்து வீட்டு வேலைகளிலும் , குழந்தை வளர்ப்பிலும் பங்கேற்கிறார்கள். அதே சமயம் வாழ்க்கையை அனுபவிக்கவும் தவறுவதில்லை.
வெளி ஆண்கள் என்று எடுத்துக்கொண்டால், 90% ஆண்கள் சைட் அடிக்கத்தான் செய்கிறார்கள். இது அவர்களின் இயல்பு.இதனால் அவர்களை ராவணன் என்று கூறமுடியாது. எல்லை மீறாதவரை.
கணவன் மனைவி சண்டையில் முதலில் விட்டுக்கொடுப்பதும், மனைவியை அனுசரித்து போவதும் கணவனாகத்தான் இருப்பார். சில ஆண்கள் மாமனார், மாமியாரையும் தன் தாய் தந்தை போல் பார்த்துக்கொள்கிறார்கள்.
பெண்களாகிய நாம் குடும்ப வாழ்க்கைக்காக தாய் வீட்டை விட்டு கணவர் வீட்டுக்கு வருகிறோம். அந்த நேரத்தில் புதிய உறவுகளை எதிர்கொள்ள முடியாமல், அந்த பாரத்தை கணவர் மேல்தான் இறக்கி வைக்கிறோம்.
கணவருக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று தெரிந்துகொண்டு , கணவரைத் தன்பால் ஈர்க்க மனைவி போராடிய காலம் போய், மனைவிக்கு எது பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு அவ்வாறே நடந்து தன் குடும்ப வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள ஆண்கள் போராட ஆரம்பித்து விட்டார்கள்.
இன்றைய ஆண்கள் குழந்தை பெறுவதைத்தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு நிகராக பல தியாகங்களை செய்து ராமனாகத்தான் வாழ்கிறார்கள்.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

ரூம் போட்டு யோசிக்கும் காங்கோ கல்பனாவிற்கும்,
ராமாயணத்தைப் பற்றி இந்தக் கலியுகத்தில் அலசி , துவைச்சு, காயப் போடப் போகும் பேச்சு சிங்கங்களூக்கும், அதை நீவி அழகா மடிச்சு வைக்கப் போகும்( ரொம்ப கஸ்டம்ங்கோ) நல்ல வேளை நான் தப்பிச்சேன்! ( தன்னடக்கமுங்கோ) நட்ட நடு ஆலமரமே! வனி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் சரி , நான் எந்த அணியின்னு நீங்க கேக்குரது என் காதில் விழுது. ஆனா இந்த ராமருக்கு பாவம் ஒரு ஓட்டு கூட விழலை. சோ, நான் ராமர் கச்சிங்கோ!
நாளை சந்திப்போம்!

வாழ்த்துக்கள்

சூப்பர் தலைப்பா இருக்கே...

கொஞ்சம் இருங்க ..திட்ட வேண்டிய ஆண்கள் அதிகமா?(ராவணர்களா)பாராட்டவேண்டிய ஆண்கள் அதிகமா(ராமர்களா)ன்னு எல்லாம் மூளையை குழப்பிக்கொள்ள அவசியமே

இல்லங்க..அதுதான் வெட்ட வெளிச்சமாச்சே..:):)

அதனால சீக்கிரமே...எங்க அணிக்கான வாதங்களோட வர்றேன்...:)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவர் அவர்களே, நான் (கலியுக) இராவணர்களை பற்றி பேச வந்துள்ளேன்.

ராமர் போன்றவர்களை நான் தீண்டவில்லை. அவர்கள் அவர்கள் இடத்திலேயே இருந்து கொள்ளட்டும்.

92ம் வருடம் சந்தனக்கடத்தல் வீரப்பனை தேடும் பொருட்டு அங்குள்ள பெண்களின் கர்ப்பை சூறையாடியவர்களாகட்டும், சமீபத்தில் மும்பையில் 5 மிருகங்கள் 14 வயது சிறுமியை கடத்தி 10 நாட்கள் அனுபவித்து அதே கொடுமையில் அந்த அபலை பெண் உயிர்விட்டதாகட்டும், இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் மானபங்கப்படுத்தும் நிகழ்ச்சியாகட்டும், தற்போது தமிழக - கேரள முல்லை பெரியாறு அணை குறித்த மோதலில் ஈடுபடுட்டு, அதை காரணமாக கொண்டு ஒன்றுமறியாத இளம் பெண்களை மானபங்கபடுத்தி வரும் கயவர்களாகட்டும், அலுவலகங்களில் தனக்கு கீழே பணிபுரியும் பெண்களின் கற்பை குறிக்கோளாக கொண்டு அவர்களுக்கு வலை போடும் ஆண்களாகட்டும், விதவை, ஆதரவில்லாதவள் என்று தெரிந்ததும் அவள் மேல் போலி அனுதாபத்தையும்,பாசத்தையும் காட்டி அவளை தன் ஆசை எனும் குழிக்குள் தள்ள காத்திருப்பவர்களாகட்டும், இவர்களை இராவணர்கள் என்று சொல்வதை விட வேறு எதாவது வார்த்தைகள் இருந்தாலும் சொன்னால் மனக்கொந்தளிப்பு அடங்காது.சொல்லப் போனால் இராவணன் என்ற வார்த்தையே மதிக்க தகுந்ததாக தான் இருக்கும். ஏனென்றால் அவன் மாற்றான் மனைவி ஒருத்தியை மட்டுமே கவர்ந்து சென்றதாக அறிகின்றோம். மேலே குறிப்பிட்டவர்களை எப்படி அழைப்பது?

நான் மேலே சொன்னவை ஒரு துளிகள் தான். இங்கு அது போன்ற நிகழ்ச்சிகள் கடல் அளவு ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றை சொல்ல ஜென்மம் போதாது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சாரி சாரி... ஒரு பார்ட்டி இன்று எங்க வீட்டில். காலையில் இருந்து சாப்பிடாம வேலை பார்த்துட்டு பார்ட்டி முடிஞ்சு இப்போ தான் ஓய்வா வர முடிஞ்சுது. :)

தனலக்‌ஷ்மி.... வருக வருக. வரும்போதே ராமன் அணிக்கு சூடான வாதத்தோடும், உதாரணங்களோடும் வந்திருக்கீங்க. சூப்பர். பிள்ளை பெறுவதை தவிற மற்ற எல்லாத்துலையும் ஆண்கள் பெண்களூக்கு உதவியா ராமனாக இருக்காங்கன்னு சொல்லிருக்கீங்க. பார்ப்போம் எதிர் அணி என்ன சொல்றாங்கன்னு.

உதிரா... வாங்க... தப்பிக்கலாம் விட மாட்டோம்ல. ;) //அதை நீவி அழகா மடிச்சு வைக்கப் போகும்( ரொம்ப கஸ்டம்ங்கோ)// - இப்படிலாம் பயங்காட்ட கூடாது. நானே பயந்து போய் கிடக்கேன். ராமன் அணிக்கு கை கொடுக்க ஆல மரமா நீங்க வாங்க.

இளவரசி... அப்பாடி.... வந்துட்டீங்களா??? இனி கவிதை நயத்தோட வாதங்கள் படிக்கலாம் :) அணியை சொல்லாமலே எஸ்கேப்பா... சீக்கிரம் வாங்க முதல் கட்ட வாதங்களோடு.

தலைப்பு தந்த தலைவி கல்பனா... ஸ்பேஸ் பாரை சரி பண்ணி, அணீயையும் முடிவு பண்ணி உதாரணம் அள்ளி விட்டிருக்கீங்க ;( தீர்ப்பை இப்பவே சொல்ல வேண்டியதாயிடும் போலிருக்கே. கொடுமையான விஷயங்கள் பலவற்றை பட்டியல் போட்டிருக்கீங்க. படிச்ச எனக்கே மனசு தாங்கல. ம்ம்... இது போல் ராமன்னு சொல்லும் அணி எதாவது நல்ல விஷயங்கள் பட்டியல் போடுறாங்களான்னு பார்ப்போம்.

எங்கப்பா... எங்க... மற்றவர் எல்லாம் எங்க??? வாங்க இந்த பக்கம். யாரையும் இம்முறை விடுறதாக இல்லையாக்கும். அப்பறம் நான் எப்படி பட்டியை ஒரு வாரத்துக்கு ஓட்டுறது?!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்