சூப்பர் ஸ்பீடு அரட்டை

சூப்பர்பாஸ்டா போகணும் அரட்டை தோழீஸ் வாங்க அரட்டியடிப்போம் பிடிச்சத பேசுவோம் பிடிக்காதத பேசுவோம் கலாய்ப்போம் கலகலப்பாக்குவோம் வாங்க வாங்க

ஹாய் வனி,

போன அரட்டையில் உங்க பதிவு பார்த்தேன்... இப்ப, புது இழையிலேயே பதில் போட்டுடறேன்!, பழசை மேலே கொண்டுவரவேண்டாமென்று... :)

இப்ப பரவாயில்லை வனி. உங்க அன்பான விசாரிப்புகளுக்கு, ரொம்ப நன்றி. ஆமாம், பொண்ணுக்கு காய்ச்சலும் சேர்ந்து, வாந்தி, ஒரு நாளெல்லாம் நிக்கவே இல்லை. அப்புறம் டாக்டரிடம் பேசி, இது ஒரு மாதிரியான ஸ்டமக் அப்செட். ஒரு நாளைக்கும் மேல் எதுவும் சாப்பிட முடியாமல் வாந்தி இருந்தால், மூன்று நாட்களுக்கு மேலும் காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் பார்க்கனும்னு சொன்னாங்க. இன்னைக்கு ஸ்கூல் போகலை. இரண்டு வேலை ஃபீவர் மெடிசன் கொடுத்தபிறகு இப்ப பரவாயில்லை. 1 1/2 நாள் கழித்து, இப்பதான் கொஞ்சமா, ரசம் சாதம் பிசைந்து கொடுத்தேன், சாப்பிட்டாள். அவருக்கு, தூக்கம் விழித்ததுதான் பிரச்சனை போலும், பித்தம் போக வீட்டு வைத்தியம் செய்யவும் சரியாகிட்டார். மீண்டும் ரொம்ப நன்றி வனி!

வேற ஒரு இழையில் வீட்டில பார்ட்டி என்று படித்தேன். அப்ப, நிறைய வேலைன்னு சொல்லுங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க... :)

அன்புடன்
சுஸ்ரீ

அப்பா.... சரியாக ஆரம்பிச்சுட்டாங்களா. பிள்ளைகளுக்கு எதாவதுன்னா நமக்கு மனசு கெடந்து அடிச்சுக்கும். எதுலையும் கவனம் போகாது. நானும் இங்க வந்து மகனுக்கு சளி விடாம ரொம்ப கஷ்டப்பட்டேன். அதுக்கும் வீட்டு வைத்தியம் தான் கை கொடுத்தது. அம்மாகு பேசினப்போ இஞ்சி சாறு எடுத்து தேன் கலந்து கொடுக்க சொன்னாங்க... இப்போ கொஞ்சம் சளி குறையுது.

ஆமாம் நேற்று பார்ட்டி. இந்த ஊர் நண்பர்கள் அவங்க குடும்பம் என ரொம்ப முக்கியமான பார்ட்டியா போச்சு. காலை எழுந்ததில் இருந்து ஓய்வில்லாம இருந்தது. முடிஞ்சுது நல்லபடி. :) இன்னைக்கு முழுக்க ஓய்வு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் எல்லாரும் நலமா ? எல்லாரும் அரட்டைக்கு வாங்க .

வர்தினி... நலம். நீங்க? என்ன அரட்டை பக்கம் யாரும் ஆளை காணோம்? பார்த்து வீகெண்டோனு குழம்பிட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நலமா உங்க கிட்ட பேசி ரொம்பநாளாச்சு. யாழினி, குமரன் எப்படி இருக்காங்க. பொண்ணு ப்ளே ஸ்கூலுக்கு சமத்தா போயிட்டு வராங்களா. குமரனுக்கு எப்படி இருக்கு உடம்பு சளி சொல்லி இருந்தீங்களே குறைஞ்சு இருக்கா. பெரிய்வங்களும் அந்த இஞ்சி சாறு குடிக்கலாமா?

வர்தினி நலமா. சமையல் வேலை முடிஞ்சுதா?

ஹாய்... நாங்க நலம். நீங்க? ஆம் பேசி வெகு நாட்கள் ஆயிடுச்சு. ஒழுங்கா ஸ்கூல் போறாங்க மேடம். இவனுக்கு இப்போ சளி குறைஞ்சிருக்கு. நானும் இஞ்சி சாறு தான் குடிக்கறேங்க. அளவு தான் கூட. பெரியவங்கன்னா 1/2 தேக்கரண்டி இஞ்சி சாறு + 1/2 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிடனும். 4 நாள் 4 முறை.

சின்னவங்கன்னா 1/4 தேக்கரண்டி சாறு + 3/4 கரண்டி தேன். அதே 4 நாள் 4 முறை.

ஒரு நாள் குடிச்சாலே நமக்கே வித்தியாசம் தெரியுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நான் நலம் , என்ன பார்ட்டி உங்க வீட்ல ரொம்ப வேலையா, என்ன சமையல் . வினோ நலமா? எங்க உங்கள காணோம் , ஏன் வரல .

ஹாய் எல்லாம் இன்னிக்கு ஃப்ரீயா?, சாப்டீங்களா?

இப்படிக்கு ராணிநிக்சன்

ஜெஸி இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? என்ன டிரஸ், கலர் என்ன? பார்ட்டி, ட்ரீட் எல்லாம் இல்லையா? எப்படி celebrate பண்ண போறீங்க?

KEEP SMILING ALWAYS :-)

Vanakkam from nila

பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே

மேலும் சில பதிவுகள்