தேதி: December 13, 2011
பைன் கோன்
பெயிண்ட்
பிரஷ்
பைப் கிளீனர்
தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

பைன் கோனிற்கு பிடித்தமான நிறங்களில் உள்புறமும், வெளிப்புறமும் பெயிண்ட் செய்யவும்.

பைன் கோனின் கீழ்புறத்தில் பச்சைநிற பெயிண்ட் செய்யவும்.

இவ்வாறு அனைத்து பைன் கோன்களிலும் பெயிண்ட் செய்து காய வைக்கவும்.

காய்ந்ததும் பைப் கிளீனர்களை சிறிய துண்டுகளாக வெட்டி பைன் கோனின் முனையில் வைத்து முறுக்கி விடவும்.

இவ்வாறு அனைத்து பைன் கோன்களிலும் செய்து மறுமுனையை கொழுவி போல வளைத்து விடவும்.

பிள்ளைகளால் செய்யக்கூடிய இலகுவான ஆர்னமென்ட் தயார்.

கிறிஸ்மஸ் மரத்தில் மற்ற அலங்கார பொருட்களுடன் இவற்றையும் சேர்த்து தொங்க விடவும்.

Comments
நர்மதா
வழக்கம் போல் அழகான குட்டீஸ் கைவினை :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பைன்கோன்
ஜார்ல சேர்த்து வைத்ததெல்லாம் இப்ப வெளியில வருது... ;)
நல்ல ஐடியா நர்மதா.
- இமா க்றிஸ்
நர்மதா அழகா இருக்கு
ரொம்ப சிம்பிளா அழகா இருக்கு நர்மதா. க்றிஸ்துமஸ் கொண்டாட போகும் நம்ம தோழிகளுக்குலாம் ட்ரீய அலங்கரிக்க நல்ல ஒரு க்ராப்ட் கிடைச்சுருச்சு அப்பறம் என்ன செய்து அசத்துங்க.
நர்மதா
கிறிஸ்மஸ்க்கு ஏற்ற அழகான க்ராஃப்ட் வாழ்த்துக்கள்.