தண்ணீர் எப்பொழுது கொடுக்க வேண்டும்?

என் குழந்தைக்கு 37 நாட்கள் ஆகிறது. தாய் பால் மட்டும் தான் கொடுக்கிறேன். டாக்டர் தண்ணீர் தேவை இல்லை என்று
சொன்னார். ஆனால் என் அம்மா தினமும் ஸ்பூனில் லேசாக சூடு உள்ள தண்ணீர் சிறிது சிறிதாக கொடுக்கிறார்கள். அப்போது தான் மோஷன் சரியாக போகும் என்கிறார்கள். இது சரியா?

கண்டிப்பாக 6 மாதம்வரை தண்ணீர் தேவையில்லை. தாய்ப்பாலிலேயே தேவையான அளவு தண்ணீர்சத்து உள்ளது. தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் சேர்க்க கூடாது. குழந்தைக்கு மோஷன் போக கஷ்டமாக இருந்தால் உலர்திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள். தண்ணீர் குடியுங்கள். நீங்கள் சாப்பிட்டால்போதும் குழந்தைக்கு கொடுக்ககூடாது.

KEEP SMILING ALWAYS :-)

தாய்பால் போதும்தான் ஆனால் என் பொன்னும் டாட்லெட் போஹ மாட்டா அதனால் என் அம்மா பால் பாட் டிலில் சிரிது சுகர் போட்டு தன்ணீர் குடுப்பாங்க உடனே போஇடுவா....காலை 12மணிக்குள்ள குடுப்பாக...நல்ல பசியோடு இருக்கும் போது இப்படி செய்வாஙkaவெதுவெது,ப்பா இருகனும் இதனால் பயமில்ல 2நாளிக்கு ஒரு தரம் குடுக்கலாம்...டாய்லெட் போனாதாஅ பால் குடிக்கும் இல்லட்டி டல்லா தூங்கிட்டே இருப்பாஙக

தண்ணீர் தேவையே இல்லை தான் இருந்தாலும் பெரியவங்க சொல்வது போல் தினமும் 1/4 கப் சுடவைத்து ஆறிய நீரை கொஞ்சமாக கொடுங்க இது மோஷன் போகவேண்டி அல்ல..தாய்ப்பால் மட்டும் கொடுத்து வந்தாலும் எந்த ப்ரச்சனையும் இருக்காது ஆனாலும் பின்னாடி நீங்க தண்ணி கொடுத்தால் குடிக்காது ..என் மகளுக்கு இப்படி கொடுத்ததே இல்லை பிறகு தண்ணீர் கொடுக்க பட்ட பாடு விளக்கெண்ணை வாயை வைத்த மாதிரி கஷ்டபட்டு தான் தண்ணியை முழுங்குறது பிறகு தண்ணி கொடு கொடுன்னு அதே டாக்டர் சொல்லியும் தண்ணி கொடுக்க ரொம்ப சிரமப்பட்டு விட்டேன் அதன் பிறகு ஒரு 3 வயசு வரை தண்ணி கொடுக்க கஷ்டம் தான்..அதனால் என் மகனுக்கு உஷாராகிட்டேன் பிறந்ததிலிருந்து சும்மா சில ஸ்பூன் கொடுப்பேன் தினமும் அதனால் எந்த ப்ரச்சனையும் இதுவரை இல்லை

இந்த விஷயத்தில் நான் தளிகா சொல்றதை தான் சொல்வேன். அனுபவம்.. என் தங்கை மகள் ஒவ்வொரு முறையும் சாப்பிட்டதும் 1/2 பாட்டில் தண்ணியை தானே குடிக்கும். காரணம் ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு கொடுத்து பழகினது தான். காய வெச்சு வெது வெதுப்பான நீர் கொடுக்கலாம்னு எனக்கே குழந்தைகள் டாக்டர் சொல்லி இருக்காங்க. அதனால் தப்பே இல்லை. குடுக்க கூடாதுன்னு எதுவுமே இல்லை. உண்மையில் மோஷன் போகாத குழந்தைகளுக்கு சர்க்கரை நீர் கொடுக்க சொல்லியும் டாக்டரே தான் சொல்லி இருக்காங்க. அப்பறம் எப்படி நீர் கொடுப்பது தப்பாகும்? தப்பில்லை. கொடுங்க. தினம் 1/4 கப் கொடுங்க. சரியான இடைவெளி விட்டு கொடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்