ஹென்னா ஏன் சிவக்கலை?

தலைக்கு நேற்று ஹென்னா போட்டேன். ஹென்னா =2 ஸ்பூன்(இலையை பறித்து காய வைத்து பொடி செய்தது), நெல்லிக்காய் பொடி 1=ஸ்பூன், கடுக்காய் பொடி = 1ஸ்பூன், டீ டிகாசன் =3 ஸ்பூன். அப்புறம் 2 மணி நேரம் கழித்து கழுவினேன். ஆனால் தலையில் வெள்ளை முடி நிறம் மாறவேயில்லை. காரணம் தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே. PLEASE

நான் என் Husband - க்கு ஹென்னா -- 1pocket , தேவைக்கேற்ப டீத்தண்ணீர்,தயிர்,எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு இரும்பு சட்டியில் கலந்து வைத்து 2 அல்லது 3 நாட்களுக்கு பின் தலையில் தேய்த்து 2 மணி நேரம் ஊற வைப்பேன். வெள்ளை கலர் முடி அனைத்தும் கலர் மாறிவிடும்.நீங்களும் try பண்ணி பாருங்கள்.

ப்ரியா இதே முறையை இளநரை போகவும் முயற்சித்து பார்க்கலாமா?

தலையில் எண்ணெய் இல்லாம இருந்ததா நீங்க ஹென்னா போட்டப்போ?? எண்ணெய் இருந்தா ஒட்டாது, கலர் பிடிக்காது. மற்றபடி நீங்க சொல்லும் காம்பினேஷன் பற்றிலாம் எனக்கு தெரியாதுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய்! shampoo தேய்த்து குளித்த அடுத்த நாள் முடியில் சிறிது oil தேய்த்து விட்டு நான் மேலே சொன்ன கலவையை ஊற வைத்து குளிக்கவும்.இல்லையென்றால் ஹென்னாவில் oil மிக்ஸ் பண்ணிக்கொள்ளலாம்.தொடர்ச்சியாக தேய்த்து வந்தால் இளநரையும் சரியாகும்.

ஹாய் நீங்கள் எல்லோரும் எங்கு இருக்கிறீர்கள்? நான் மும்பையில் அய்ரோலியில் இருக்கிறேன்.

எப்படி இருக்குறீங்க எனக்கு ஒரு சந்தேகம் ஹென்னா oil சேர்த்தால் முடில ஒட்டுமா

அனிதாசரவணன்

ரொம்ப நல்லாயிருக்கேன். நீங்க எப்படியிருக்கீஙக? ஹென்னாவில் oil 1spoon or 2spoon தான் சேர்க்கவேண்டும். முடியில் நன்றாக ஒட்டும். நான் போட்டிருக்கிறேன். ஆனால் சைனஸ் உள்ளவர்கள் போடக்கூடாது.

நான் ஹென்னாவை முதல் நாள் இரும்பு சட்டில ஊற வைத்து தான் அடுத்த நாள் தேச்சேன். ஆயில் மட்டும்தான் போடவில்லை. ஹென்னா powder (packet) மட்டும்தான் உபயோகிக்கனுமா? இலையை பறித்து அரைத்து தேக்க கூடாதா? நான் salem ல இருக்கேன். அப்புறம் பதில் சொன்ன எல்லாருக்கும் THANKS pa.

henna + karisalankanni powder add saiyavum ilanarai varadu.

oil irundalum illavittalum henna pottal color varum. henna old aga irundal color varadu.

மேலும் சில பதிவுகள்