குழந்தையை எப்படி பேச, நடக்க பழக்குவது?

என் மகனுக்கு இன்றுடன் 11 மாதம் முடிகிறது இப்போது 4 பற்கள் வந்துள்ளது காரட் ஆப்பில் எதையுமே கடித்து பாற்க்கிறான் இல்லை இன்னும் கஞ்சி போல் தான் உணவு கொடுக்கிறேன் இது சரியா?எப்படி கடிக்க சப்ப பழக்குவது?வேறு என்ன உணவு கொடுக்கலாம்?
அவன் இப்போது உதவி இல்லாமல் 20 செக்கன் போல நிக்கிறான் எப்படி நடக்க பழக்குவது?

1 வயதில் 20 சொற்க்கள் போச வேண்டும் என்பது உண்மையா?இவன் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை எப்படி பேச பழக்குவது?

pls all sisters help pannuga...pls

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

ஹாய் risana
11 மாத குழந்தைக்கு கஞ்சி போல் குடுக்க வேண்டியதில்லை, solid food ஆகவே குடுக்கலாம். அப்போ தான் அவன் கடித்து சாப்பிட பழகுவான். குழந்தை கையில் பிஸ்கட் குடுத்து சாப்பிட சொல்லுங்கள். அவனாகவே கடித்து சாப்பிட பழகிவிடுவான். இப்போது தான் நிற்கிறான் அல்லவா விரைவிலியே நடந்து
விடுவான். நீங்கள் குழந்தை முன்னாடி நின்று கொண்டு அவன் இரண்டு கைகளையும் பிடித்து நடந்து அவனுக்கு நடக்க
பழக்குங்கள். sofa அருகில் நிக்க வைத்து பாருங்கள், sofa பிடித்து நடக்க பழகுவான் .
1 வயதில் 20 சொற்கள் பேசியே ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நீங்கள் குழந்தை
முன்னாடி அமர்ந்து அம்மா, அப்பா என்று சொல்லி குடுங்கள். பாட்டு , rhymes பாடி காட்டுங்கள்.
குழந்தையிடம் நிறைய பேசி கொண்டே இருங்கள். அருகில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களோடு பழக விடுங்கள். 11 மாத குழந்தை தானே இப்போதே பேசவில்லை என்று கவலை வேண்டாம். சீக்கிரம் பேச ஆரம்பிச்சிருவான்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ஹை சிச்டெர் ரிசன எத பத்தியம் கவலை படத்திங்க சில த் குழந்தைகள் அப்படி தான் லெட்டா எதையும் செய்யும் நிங்க உங்க குழந்தைக்கு நேரம் செலவு பண்ணுவேங்களா ? உங்க பாப்பா டா போய் சில வார்த்தைகள் பேச காத்துதாங்க, அப்புறம் நடக்க சொல்லி தாங்க ,எப்படி சொல்லி தாரனு சொல்லேற்ங்களா உங்க கால் மேல பாப்பா டொ கால் வச்சு சொல்லி தாங்க அப்புறம் பாருங்க உங்க பிள்ளை சும்மா கீல்லி மாதிரி இருக்கும்

மேலும் சில பதிவுகள்